மாறுமோ தமிழக வறட்சி நிலை? – நூல் அறிமுகம்

ஏ.வி.எம் தயாரித்த கீதாஞ்சலி தொடருக்கு முதல் பரிசு வென்ற “கவிஞர் ச.அரிகரபுத்ரன்” அவர்கள் “எழுதிய மாறுமோ தமிழக வறட்சி நிலை?” கவிதை நூலுக்கு “கவி தேவிகா” அவர்கள் எழுதிய நூல் அறிமுகக் கட்டுரை – marumo tamilaga varatchi nilai vimarsanam

marumo tamilaga varatchi nilai vimarsanam

கவிதை நூல் விமர்சனம்

நூல் ஆசிரியர் – ச.அரிகரபுத்ரன்
மணிமேகலைப் பிரசுரம் பதிப்பகம்

திருமதி முனைவர் மகேஸ்வரி அவர்களின் அணிந்துரை யோடு , திரு முனைவர்
கிருட்டினசாமி அவர்களின் வாழ்த்துரை யோடு அக உரையாய் கவிஞரின் என் உரையோடு அழகாய் துவங்குகிறது நன்னூல்

அமிழ்தினும் இனிய அம்மி தமிழே!!
அகிலம் முழுதும் ஓங்கும் உந்தன் புகழே!!
உன்னால்
பிறந்து, உயிர்த்து, தவழ்ந்து, வளர்ந்து, தெளிந்து, கற்று, கற்பித்து, வாழ்ந்து, கிடந்து, இருந்து, உன்னோடு உறவாடி இன்பமாய் வாழ்தல் என்பது முற்பிறவி தவப்பயனன்றி வேறென்ன தமிழே..

நீரோடையோடு

உன்னில் தோன்றும் கவியழகு…கதையழகு…முத்தமிழ் கலந்து நீ புரியும் இசை, இயல், ஆடல் அத்தனையும் அழகு….

தென்றலுக்கிசைந்தாடும் நாணல்போல….
குயிலிசைக்கு மயங்கும் செவிகள்போல….
நிந்தன் இனிய நடையில் வீழ்ந்து கிடக்காத கவிஞனும் இல்லை…. கவிதையும் இல்லை…..
ஆம் அத்தகைய கவிதைநூல் பற்றிய விமர்சனமொன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சலசல வென இன்னிசை இயற்றும் நீரோடையோடு…..

மாறுமோ தமிழக வறட்சி நிலை????

கேள்விகளோடு தலைப்பை ஆரம்பித்திருப்பது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது நூலாசிரியர் அவரது பெயரிலே கூட பிற மொழி எழுத்துக்கள் கலக்காத வண்ணம் தன் பெயரை வைத்திருப்பது மேலும் அவர் மீது பெரும் மதிப்பைக் கூட்டுகிறது .பல கவிதைகளின் மழைச்சாரலாய் தமிழகத்தில் பாய்ந்தோடும் இவரது கவிதை ஊற்று நிச்சயம் வறட்சி நிலையை மாற்றும். பல கவிதைகளை வாசித்து மகிழ்ந்து அதனோடு பயணித்து இன்புற்று இருக்கிறேன்.

சில கவிதைகளை மட்டும் உங்கள் பார்வைக்காக. திருநெல்வேலி மாவட்டம்
வாசுதேவநல்லூரை சொந்த ஊராகக் கொண்ட கவிஞர் . இவர் பல கவிதைகள் கதைகள் கட்டுரைகள் இயற்றி பல பரிசுகளையும் பல பட்டங்களையும் பெற்றவர். மிகச் சிறந்த தமிழ் எழுத்து ஆளுமை கொண்டவர்.

தொலைந்து போன இதயம், விடிவெள்ளி, குழந்தை, கடல்புறா, ஆசை, இலவு காத்த கிளி, வெள்ளிநிலவே, நிலா பெண்ணே, புரட்சிப் பாதை என 42 தலைப்புகளில் அருமையாக தனித்தனி கவிதைகளாக இவரது புத்தகம் கவிதை குவியலாக புத்தக வடிவில் நம் கைகளில் தவழ்கிறது என்னை கவர்ந்த சில வரிகளையும் கவிதைகளையும் பகிர்வதில் மகிழ்கிறேன்
குழவி
“அழகான பிறைநுதல் அதில்
அசைந்தாடும் கருங்குழல்
புருவத்தின் வளைவோ வில்
மொழி பேசும் விழிகளோ மீன்கள்
கன்னமென்ற பெயருக்கிரு
சின்னக் கிண்ணங்கள்
மொத்தமாய் முகம் கானின்
முழுமதியும் விம்மும் தன்
உரவின் குறை எதுவோ என மயங்கி!”…
வறுமையில் இளமையைக் கழித்தவர் இவர். இவரின் வளமான கவிதை வரிகளில் வறுமை
சூழ்ந்த இருந்ததை அறியமுடிகிறது
“சின்னத்திரை தொடர்கூட
திங்கள் முதல் வெள்ளி வரை தான்
ஆனால் எனது
தொடர்புகதைத்
திங்கள் முதல் சனி வரை “
என்ற சலிப்பு தோன்ற “ வியர்வை சிந்திய சரித்திரம்”
படைத்திருக்கிறார் கவிஞர் – marumo tamilaga varatchi nilai vimarsanam.

நிலாப்பெண்ணே
“நீலவான பெண்ணே நீ
நெற்றியில் இட்டுக் கொண்ட
நட்சத்திர பொட்டு எங்கே ???
உன் கூந்தலில் சூடிய மின்னல்
கொடி மலர் எங்கே???

அற்புதமான சொல்லாடல். புது கவிதைகளின் மணம் எங்கும் எதிலும் இந்நூலில்
பரவியிருப்பதை உணரமுடிகிறது. முதல் நூலான இந்து நூலில் அழகான ஒப்பீட்டுகளை காண முடிகிறது…. இவருடைய மற்ற படைபப்புகளை பற்றிய நற் கருத்துகளையும், கவிகளையும் மற்றுமொரு பதிவுகளில் காண்போம்….

என்றென்றும் இணைந்திருங்கள்
நீரோடையின் தமிழ் பயணத்தில்……

– கவி தேவிகா,தென்காசி.

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    மிகவும் அருமையான விமர்சனம் சகோதரி …நீரோடையில் இனிய பயணத்தில் …கவிதை தூரல்கள் இனிய சாரல்களாய்…அழகு தமிழில் அருமையான விமர்சனம் பாராட்டுக்கள் …