வார ராசிபலன் ஆடி 18 – ஆடி 24
ஆடி மாத மின்னிதழ் பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். ஆடி சிறப்பு மற்றும் ஆடிப்பூரம், ஆண்டாள் ஜெயந்தி பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். – rasi palangal aug 02 – aug 08
மேஷம் (Aries):
இந்த வாரம் குரு பகவான் பல நன்மைகளை செய்வார். குடும்பத்தில் பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும், எதிரிகள் தொல்லை விலகும், குடும்ப ஆரோக்கியம் நன்றாக அமையும். பணியாளர்கள் சிறப்படைவார்கள். வியாபாரிகள் உயரிய லாபம் பெறுவார்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல முயற்சி எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். விவசாயிகள் விரயத்தை எதிர்கொள்வார்கள்.
வழிபாடு: முருகப் பெருமான் வழிபாடு சாலச்சிறந்தது.
ரிஷபம் (Taurus):
இந்த வாரம் சுக்கிர பகவான் பல நன்மைகளை செய்வார். உடல் ஆரோக்கியமாக காணப்படும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் வர வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்துப் போவது நன்று, புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். பணியாளர்கள் பணியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் போட்டிகள் உருவாகலாம் கவனம் தேவை. கலைஞர்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணியாளர்கள் நல்ல திறமையுடன் செயல்படுவார்கள். வியாபாரத்தில் போட்டி உருவாகலாம். கலைஞர்கள் ஏதாவது ஒரு வகையில் தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வார்கள். மாணவர்கள் வெற்றியின் உச்சிக்கே செல்வார்கள். விவசாயத்தில் லாபம் அதிகரிக்கும்.
வழிபாடு: தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை பயக்கும்.
மிதுனம் (GEMINI):
இந்த வாரம் புதன் பகவான் பல நன்மைகளை செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். குடும்பத்தின் செல்வாக்கு மேன்மேலும் உயரும், உறவினர் வருகை நன்மை பயக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். பணியாளர்கள் வரவு செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை. கலைஞர்கள் அரசாங்க உதவியை பெறுவார்கள். மாணவர்கள் தேர்வில் வெற்றி காண்பார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பதன் மூலம் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: நவகிரக வழிபாடு செய்து வருவது நன்மை பயக்கும்.
கடகம் (Cancer):
இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். வீட்டில் ஆடை ஆபரணங்கள் வாங்க யோகம் உள்ளது. குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். பணியாளர்கள் தலைமை பொறுப்பை ஏற்பார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் கல்வியில் உச்சம் அடைவார்கள். விவசாயிகள் பாக்கியசாலிகள் ஆவார்கள்.
வழிபாடு: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.
சிம்மம் (LEO):
இந்த வாரம் குருபகவானே நன்மைகள் பல செய்வார். குடும்பத்தில் பணவரவுகள் நன்றாகவே அமையும். வீட்டில் குழந்தை பாக்கியம் அமையும். குடும்ப செல்வாக்கு சிறப்பாக அமையும். குடும்பத்தில் எடுத்த புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் ஏதாவது ஒரு வகையில் தனது தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள். மாணவர்கள் தோல்வியைத் தழுவ வாய்ப்பு உள்ளது. விவசாயத்தில் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
வழிபாடு: முருகப் பெருமான் வழிபாடு சாலச்சிறந்தது.
கன்னி (Virgo):
இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் நல்ல தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மனை வாங்க யோகம் உள்ளது. எதிரிகள் தன்வசம் சரண் அடைவார்கள். உறவினர்கள் வருகை நன்மை பயக்கும். பணியாளர்கள் பிரகாசமாக காட்சி அளிப்பார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு வருமானம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் வாழ்வில் நிம்மதி அடைவார்கள். மாணவர்கள் நல்ல உயர்வைப் பெறுவார்கள். விவசாயத்தில் குடும்பத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
வழிபாடு: தினம் காலை சூரிய பகவான் வழிபாடு சாலச்சிறந்தது.
துலாம் (Libra):
இந்தவாரம் கேதுபகவான் நன்மையே செய்வார். வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் வாங்க யோகம் உள்ளது. குடும்ப குழப்பங்கள் அறவே நீங்கும். குடும்பத்தில் சுபச்செய்தி ஒன்று வந்து சேரும். பணவரவு நன்றாகவே இருக்கும். பணியாளர்கள் பணியில் தெளிவு அடைவார்கள். வியாபாரம் பூஜை பொருள் சம்பந்தமான வியாபாரம் நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் நல்ல புகழ் அடைவார்கள். விவசாயத்தில் சுமாரான லாபம் அடையும்.
வழிபாடு: சிவா வழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம் (Scorpio):
இந்த வாரம் குரு பகவான் பல நன்மைகளை செய்வார். வீட்டில் பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். சகோதர சகோதரிகள் உறவு மேம்பாடு அடையும். பணியாளர்கள் பணியில் நல்ல சிறப்பு அடைவார்கள். வியாபாரம் இரட்டிப்பு லாபம் பெற வாய்ப்புள்ளது. கலைஞர்கள் விரயத்தை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருவாய் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்து வருதல் நல்லது.
தனுசு (Sagittarius):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் ஆரோக்கியம் நன்றாக அமையும். தாயின் உடல்நிலை பாதிக்கலாம் கவனம் தேவை. வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை நிலவும். பணியாளர்கள் அலுவலகத்தில் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் சிறப்பாக அமையும். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் தோல்வி அடைய வாய்ப்புள்ளது. விவசாயத்தில் சுமாரான லாபமே எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: அனுமன் வழிபாடு சாலச்சிறந்தது.
மகரம் (Capricorn):`
இந்த வாரம் புதன் பகவான் பல நன்மைகளை செய்வார். எதிரிகள் தொல்லை அறவே மறையும். உறவினர் வருகை நன்மையில் முடியும். வீட்டின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். குடும்ப ஆரோக்கியம் நன்றாக அமையும். பணியாளர்கள் ஒருவர்க்கொருவர் பகைமை உருவாகும். வியாபாரத்தில் கவனமாக செயல்படவும். கலைஞர்கள் விரயத்தை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் குடும்ப நற்பெயரை எடுப்பார்கள். விவசாயம் சுமாரான பலனை எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.
கும்பம் (Aquarius):
இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் பணவரவு நன்றாகவே இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சில குழப்பங்கள் வரலாம் கவனமாக செயல்படவும். பணியாளர்கள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூல் ஆகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் மதில் மேல் பூனையாக இருப்பார்கள். விவசாயத்தில் தேவை பூர்த்தி செய்யப்படும்.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.
மீனம் (Pisces):
இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். வீட்டில் மனை கட்டும் யோகம் உள்ளது. பணவரவு நன்றாகவே அமையும். குடும்பத்தில் குழந்தை பாக்கியம் அமைய வாய்ப்புகள் உள்ளது. வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணியாளர்கள் நல்ல சிறப்பு அடைவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் 100 சதம் வெற்றி காண்பார்கள். விவசாயத்தில் அதிக மகசூல் பெற வாய்ப்புகள் உள்ளது.
வழிபாடு: சிவ வழிபாடு சாலச்சிறந்தது – rasi palangal aug 02 – aug 08.
– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு)
ராசி நல்ல ராசி அனைவருக்கும் நல்லதே நடக்கும்
நல்லதே நடக்க இறைவனை வேண்டுவோம்.நாளும் ,கோளும் இறையருளால் நமக்கு நல்லது செய்யட்டும்
நல்லதே நடக்கட்டும் .