ஆடி மாத மின்னிதழ் (Jul-Aug-2020)

இந்த சார்வரி சித்திரை மாதம் தொடங்கப்பட்ட சித்திரை, வைகாசி  மற்றும் ஆனி மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – aadi matha ithal.

aadi matha ithal

கா(ல்)அணிகள் (கவிதை 1)

சத்தமின்றி
சண்டையிடுங்கள்…
ஆழ்ந்த நித்திரையில்
ஓய்வெடுக்கிறார்கள்…..
இத்தனை நாட்களாக
இன்னல்கள் நேராமல்…..
நம்மை சுமந்த
சுமைதாங்கிகள்……… – கவி தேவிகா, தென்காசி.


உலகிலேயே சிறந்த பல்பொடி இதுதான்

கருவேலம்பட்டை பொடி, கடுக்காய் பொடி இரண்டையும் சரிசமமாக கலந்து , உடன் பத்து கிராம்பினை பொடி செய்து கலக்கிவைத்துக் கொண்டால் அட்டகாசமான பற்பொடி தயார்…

ஆட்டம் கண்ட பற்கள் ஆடாமல், அசையாமல் பலத்தோடு இப்போது உள்ளதை பலர் கூறியதுண்டு. முன்பெல்லாம் ஒரே ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாலே மதிய உணவு சாப்பிட முடியாத அளவிற்கு பல் கூசும்… இப்போ..கூச்சத்துக்கு இடமே இல்லை…
வருடா வருடம் நவம்பர்,டிசம்பர் குளிர்காலங்களில் ஈறு வீங்கி, கஷ்டப் படுத்தும், நரகத்தை அந்த நாட்களில் அனுபவிக்கலாம்.. இப்போதெல்லாம் அந்த பிரச்னையே இல்லை பலர் கூறியதுண்டு.

பல்லை துலக்கும்போது விரலையே உபயோகிப்பதுதான் உன்னதமானது… ஈறுகளின் பலம் இதனால் உறுதி செய்யப்படுகிறது..

அருகில் உள்ள சித்த, நாட்டு மருந்து கடைகளில் இந்த பொடிகளை வாங்கி உபயோகப்படுத்துங்கள்…. வெறும் 30 ரூபாயில் ஒரு மாதத்திற்கு வரும் அருமையான இந்த பற்பொடி… – aadi matha ithal


வர்ஷினி ஓவியம்

Aadi matha ithal Krishna Varshini
Krishna

Aadi matha ithal Krishna Radha Varshini
Krishna & Radha

மழைத்துளி (கவிதை 2)

ஒரு நாள் மாலை நேரத்தில்
வானில் தவிழும் மேகங்கள் சிப்பாய்கள்
போல ஒன்று கூடியது!!
வானில் போருக்கு தயாராக இருப்பதாக
போர் முரசு ஆக ஒலித்த இடி!!
சற்று நேரத்தில் யாரேனும் விண்ணில் இருந்து வாள் வீசுவது போல
மேகங்களை துளைத்து வந்த மின்னல்!!
எதிர்பாராதவிதமாக வான்வெளியிலிருந்து
தரையிறங்கிய‌ மழைத்துளி!!
ஆனந்தத்தாண்டவம் ஆடியது
போர் வெற்றியில் மண்ணில்!!! – பிரகாசு.கி அவனாசி


உடல் ஆரோக்கியம் பெற்று வாழ வழிமுறைகள்

1.நடைப்பயிற்சியை மறக்காதே.
2.கையை கழுவாமல் உண்ணாதே
3.பசிக்காவிட்டால் புசிக்காதே
4.பழங்களை கழுவாமல் உண்ணாதே
5.படுத்துக் கொண்டே எதையும் உட்கொள்ளாதே
6.அடிக்கடி நீர் பருக மறக்காதே
7.துரித உணவுகளை விரும்பாதே
8 இயற்கை உணவுகளை தவிர்க்காதே
9.எண்ணெய் பலகாரங்களை அடிக்கடி தொடாதே
10.கீரை வகைகளை ஒதுக்காதே
11.இனிப்பை அதிகம் பயன்படுத்தாதே
12.வயிறு கொள்ளா உண்ணாதே
13.வெற்றுத் தரையில் உறங்காதே
14.நகத்தை அடிக்கடி கடிக்காதே
15.கண்ட இடங்களில் எச்சில் உமிழாதே
16.திறன் பேசியில் அதிக நேரம் விளையாடி கண்களையும் கைகளையும்
கெடுத்துக்கொள்ளாதே
16.ஓடியாடி வெளியில் விளையாட மறுக்காதே
17.கண்,காது,மூக்கு, முகம் ஆகியவற்றை அடிக்கடி தொடாதே. தொட்டால்
கழுவ மறவாதே – ஏஞ்சலின் கமலா..


எல்லாம் மரம் தான் (கவிதை 3)

மூச்சடக்கி உருவம் தந்து
முதல் முத்தம் தந்து வாழ்வு
தந்தவள் அன்னை என்றால்,
இறுதி மூச்சுள்ளவரை
சுவாசம் தருபவள் எம்
இயற்க்கை அன்னை (மரம் தான்).

மரம் கொத்திப் பறவைகூட
மரத்தை காயப் படுத்தினாலும்
அதிலேயே தங்கி வாழும்.. ஆனால்
மானுடமோ தன் சாதாரண தேவைக்கும்
மரத்திற்கு நிரந்தர அழிவை தருகிறது. – நீரோடை மகேஷ்

You may also like...

11 Responses

 1. R. Brinda says:

  கவிதை, ஆரோக்கியச் செய்திகள், ஓவியம் எல்லாமே மிக அருமையாக இருக்கின்றன.

 2. என்.கோமதி says:

  வர்ஷினி ஓவியம் அழகு..புல்லாங்குழல் கண்ணன் கண்கள் பேசுகிறது.விடாமல் வரைந்து விருதுகள் பெற வாழ்த்துக்கள்.

 3. தி.வள்ளி says:

  ஆடி மாத இதழ் அருமை..முத்தாய் மூன்று கவிதைகள்., ஆரோக்கிய வாழ்க்கை முறைகள், வர்ஷினியின் ஓவியங்கள் என அனைத்தும் அருமை

 4. Vysali says:

  கண்ணன் ராதாவின் கண்கள் பேசுகின்றது.. அழகான ஓவியம்.. அருமையான கவிதைகள்.. வாழ்த்துக்கள்..

 5. Kavi devika says:

  ஆடி மாத இதழ் அட்டகாசமான ஆரம்பம்…
  வாழ்த்துகள் நீரோடைக்கு….
  அனைத்து படைப்புகளும் அற்புதம்….
  ஆடி கொண்டாட்டம் தமிழோடு அருமை.

 6. S. Rajakumari chennai says:

  ஆடி இதழ் ஆரம்பமே அமர்க்களம்

 7. கு.ஏஞ்சலின் கமலா says:

  வர்சினியின் ஓவியங்கள் அபாரம்.நல்ல கலைத்திறன்.பாராட்டுகள். கவிஞர்களின் வரிகளும் அருமை.

 8. S.A.வர்ஷினி says:

  எல்லோருக்கும் என் அன்பு வணக்கம், நன்றிகளுடன்…நான் பெங்களூரில் 6 ஆம் வகுப்பு படிக்கிறேன்தங்கள் வார்த்தைகள் மிக ப் பெரிய ஊக்கத்தை அளிக்கிறது.நன்றி.

 9. மணிகண்டன் சுப்பிரமணியம் says:

  அறுசுவை போல் ஆரோக்கியம், கவிதை, சமையல், ஓவியம் என எல்லாவற்றையும் திகட்டாமல் தித்திப்பாய் ஆரம்பித்த ஆடி மாதம் ஆஹா மாதம் நீரோடைக்கு…

 10. Dr thirumalaikolundu says:

  Varshini…my grandie…6th std bangalore

  Proud to c her paintings..
  Thanks to நீரோடை…

 11. Dr thirumalaikolundu says:

  Am from tirunelveli…nice contents in ur neerodai e magazine….

  In facebk cookery too…