சித்திரை மாத மின்னிதழ் (Apr-May-2020)

அனைவருக்கும் நீரோடை வணக்கம்! நமது வலைத்தளத்தில் முதன்முறையாக மாத இணைய இதழ் இந்த சார்வரி முதல் தொடங்கப்பட்டுள்ளது. வாசக சொந்தங்களின் ஆதரவுடன் பயணிப்போம். ஆதரவுக்கு நன்றி! – sithirai maatha ithazh.

அமாவாசை – சித்திரை 09 (22-04-2020)
பௌர்ணமி – சித்திரை 24 (07-05-2020)
பிரதோஷ நாட்கள் – சித்திரை 07 (20-04-2020), சித்திரை 22 (05-05-2020)

மழலைக் கவிஞர் நவீனா

இந்து கோவில்களில் யாகம் !
தேவாலயங்களில் புனித ஜெபம் !
மசூதிகளில் தொழுகை !
இவையாவும்
சாதி மத பேதமற்ற
கொரோனாவை அழிக்க…

ஆய்வகங்களில் அறிக்கை !
அரசின் கணக்கெடுப்பு !
ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் !
இவையாவும், கட்டுக்கடங்கா
தொற்றின் தீவிரத்தை குறைக்க…

அடுத்த வேலை உணவு !
அடுத்த வார வேலை !
அடுத்த மாத வாடகை !
இவையாவும் , சராசரி
மனிதனின் எண்ணத்தை இயக்க…

இறுதியில்,
தற்கால நிலை உணர்த்தும் உண்மை
கடை மனிதனின் கழுகு பார்வையிலே!

ஜாதியென்றும் மதமென்றும்
எதுவுமில்லை உலகிலே !
கொரோனா என்னும், சார்ஸ் என்னும்,
கொள்ளை நோய்களின் பிடியிலே !
சுயனமில்லா பொதுநலம்
பேணும் அழகிலே !
மனிதம் என்னும் உணர்வு ஒன்றே
ஒளிரும் முடிவிலே !

– நவீனா, 7ம் வகுப்பு, வல்லபா வித்யாலயா, மதுரை.


நம்பிக்கையூட்டும் தமிழ் புத்தாண்டு

சிற்பியின் சிற்பத்திற்கு
மூலதனம்…. கற்பனை!
கல் சிலையாவதற்கு
மூலதனம்……. உளி!
முயற்சி வெற்றியாவதற்கு
மூலதனம்…… பயிற்சி!
சிந்தனை உண்மையாவதற்கு
மூலதனம்…….. உழைப்பு!
எதற்கும் தேவை மூலதனம்!
நம்மிடம் இருக்கும்
மூலதனம்…… நம்பிக்கை….

பிறக்கும் தமிழ் புத்தாண்டில்
நம்புவோம் நம்பிக்கையை
மட்டுமல்லாமல் நம் கைகளையும்!
அக்கையைக் கொண்டு
இனிதாக வரவேற்போம்….
நம்பிக்கையூட்டும் இந்த
தமிழ் புத்தாண்டாம் “சார்வாரி”
என்ற அழகிய நங்கையை!

– உஷாமுத்துராமன், திருநகர்


இன்றைய வாழ்வு எதிலும் தாழ்வு

தொலைக்காட்சி வந்தது
உறவுகள் வெகு தொலைவில் சென்றது !
வாகனங்கள் வந்தது
காலால் பயணிப்பது மறந்து !
குளிர்சாதனம் வந்தது
இயற்க்கை சூழல் கதைவடைதது !
நகரங்கள் மலர்ந்தது
பல நதிகள் தொலைந்தது !

வாசனை திரவியம் கிடைத்தது
பூக்களின் நறுமணம் மறைந்தது !
துரித உணவு வந்தது
சமைக்க மனம் நொந்தது !
சம்பாத்தியம் மட்டும் தேடியது
நல்ல உறவுகள் பிரிந்தது !
கைபேசி கையில் கிடைத்தது
கற்பனைகள் என்றோ கலைந்தது
காற்றாடி சுழன்றது
வசந்தம் ஏனோ ஓடிச்சென்றது !
நிழற்படம் கண் முன்னே ஓடியது
அதுதான் நிஜம் என மனம் வாடியது! – sithirai maatha ithazh

– சசி சந்தர், திருப்பத்தூர்


மரம் இயற்கையின் வரம்

மூச்சடக்கி உருவம் தந்து
முதல் முத்தம் தந்து வாழ்வு
தந்தவள் அன்னை என்றால்,
இறுதி மூச்சுள்ளவரை
சுவாசம் தருபவள் எம்
இயற்க்கை அன்னை (மரம் தான்).

மரம் கொத்திப் பறவைகூட
மரத்தை காயப் படுத்தினாலும்
அதிலேயே தங்கி வாழும்.. ஆனால்
மானுடமோ தன் சாதாரண தேவைக்கும்
மரத்திற்கு நிரந்தர அழிவை தருகிறது…

sithirai maatha ithazh

– நீரோடை மகேஷ்


கொரோனா பாடல்


nammaazhvaar iyaa piranthanaal kavidhai

சித்திரை பிறந்தநாள்

நட்சத்திரப்படி பிறந்தநாள் கொண்டாட வேண்டிய ஆங்கில தேதிகள்

நீரோடை பிறந்தநாள் பகுதியில் பதிவு செய்தோருக்கு நினைவூட்டல்….
  • ரூபிணி.ஈ – சித்திரை (சுவாதி) – 06-05-2020
  • ரிஷிவர்தன் வெங்கட்ராமன் – சித்திரை (மிருகசீரிடம்) – 27/04/2020
  • சிவசங்கரி – சித்திரை (மிருகசீரிடம்) – 27/04/2020
  • ஈசானி – சித்திரை (திருவோணம்) – 16/04/2020
  • சிவேஷ் – சித்திரை (சதயம்) – 18/04/2020
  • சாந்தகுமாரி – சித்திரை (உத்திராடம்) – 15/04/2020

You may also like...

5 Responses

  1. Ganesh says:

    mazhalai varigal arumai .

  2. Angeline says:

    Naveena’s poem was well.others kavithaikalum really superb

  3. Sriram says:

    நவீனாவின் கவிதையை படித்தோன்.. மழலையின் அறிவை மிஞ்சிய சிந்தனை. இந்த வயதில் தற்போது நிகழும் ஒரு சம்பவத்தை எடுத்து கையாளா முடியாமல் திணறும் என்னைப் போன்றோருக்கு ஒரு பாடம்… வாழிய நலமுடன்.. வாழிய கவிப்பணி…

  4. Muthu says:

    All titles very good

  5. கார்த்திகா says:

    நட்சத்திர பிறந்தநாள் வாழ்த்து பகுதி அருமை. புதிய முயற்சி வாழ்த்துக்கள்,,