வார ராசிபலன் சித்திரை 13 – 19
சார்வரி வருடம் பற்றி வாசிக்க மற்றும் முக்கிய தினங்கள் பற்றி அறிந்துகொள்ள சொடுக்கவும் – rasi palangal april 26 – may 02.
மேஷம் (Aries):

புதன் பகவான் பல நன்மைகளை செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும், வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும், பணவரவு நன்றாக இருக்கும். பணியாளர்கள் சிறப்படைவார்கள் வியாபாரம் நன்றாகவே நடக்கும். கலைஞர்கள் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும். மாணவர்கள் வெற்றி அடைவார்கள். விவசாயம் லாபம் ஈட்டித்தரும். அதிகாலை நீராடி சூரிய நமஸ்காரம் செய்யவும்.
ரிஷபம் (Taurus):

சுக்கிரபகவான் நன்மையே செய்வார். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும், குடும்ப பிரச்சினைகளை கவனமாக சமாளிக்கவும். பணியாளர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் சிரமப்பட்டே முன்னேற வேண்டியிருக்கும். கலைஞர்கள் சுமாரான பலனை பெறுவார்கள். மாணவர்கள் கவனமாக இருக்கவேண்டும். விவசாயம் லாபகரமாக இருக்கும். நவகிரக வழிபாடு செய்யவும்.
மிதுனம் (GEMINI):

சூரிய பகவான் பல நன்மைகள் செய்வார். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், உறவினர் வருகை கவனம் தேவை, சீரான வருமானம் இருக்கும். பணியாளர்கள் சீரான முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரம் நஷ்டம் இன்றி இருக்கும். கலைஞர்கள் பிறர் உதவியை பெறுவார்கள். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். விவசாயம் நல்ல பலனைத் தரும். முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்.
கடகம் (Cancer):

சூரிய பகவான் நன்மை செய்வார், குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். வெளியூர் பயணம் தவிர்க்கவும். உறவினர் வருகை இருக்காது. பணியாளர்கள் நன்மை அடைவார்கள். வியாபாரம் சீராக இருக்கும். கலைஞர்கள் லாபம் பெறுவார்கள். மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். விவசாயம் நல்ல லாபம் ஈட்டி தரும். சனி பகவானை வழிபடவும்.
சிம்மம் (LEO):

சூரியபகவான் நன்மை செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும், தேவைகள் பூர்த்தி ஆகும். பணியாளர்கள் பணி சிறப்படையும், வியாபாரம் நஷ்டம் என்று இயங்கும். கலைஞர்கள் தேவைகள் பூர்த்தி ஆகும். மாணவர்கள் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். விவசாயத்தில் கவனத்துடன் செயல்படவும். முருகப் பெருமான் வழிபாடு செய்யவும்.
கன்னி (Virgo):

குருபகவான் நன்மை செய்வார். குடும்பத்தின் தேவை பூர்த்தியாகும், வரவு-செலவு மந்தமாக இருக்கும், சிறு தடங்கல்கள் வரலாம். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரிகள் விரயத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கலைஞர்கள் பாராட்டைப் பெறுவார்கள். மாணவர்கள் கவனமாக செயல்படவும். விவசாயம் நல்ல லாபம் கிடைக்கும். நவகிரக வழிபாடு செய்யவும்.
துலாம் (Libra):

சுக்கிர பகவான் பல நன்மைகளை செய்வார். ஆடம்பரப் பொருட்கள் வந்து சேரும், பணவரவு நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியாளர்கள் நிம்மதி அடைவார்கள். வியாபாரம் நன்றாக இருக்கும். கலைஞர்கள் சிக்கலை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்கள் நல்ல பெயர் எடுப்பார்கள். விவசாயம் நல்ல மகசூல் கிடைக்கும். விநாயகர் வழிபாடு செய்யவும்.
விருச்சிகம் (Scorpio):

சுக்கிரபகவான் நன்மை செய்வார். வீட்டின் தேவைகள் பூர்த்தி ஆகும். பணவரவு நன்றாக இருக்கும். சுற்றுவட்டம் ஆதரவாக இருக்கும். பணியாளர்கள் ஆரோக்கியமாக காணப்படுவார்கள். வியாபாரம் சீராக இருக்கும். கலைஞர்கள் ஆதரவு பெருகும். மாணவர்கள் ஆசிரியர் வழிகாட்டுதலைப் பின்பற்றவும். விவசாயம் காய்கறிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். சிவ வழிபாடு செய்யவும்.
தனுசு (Sagittarius):

குருபகவான் நன்மை செய்வார். பணவரவு நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். பணியாளர்கள் சிறப்படைவார்கள். தொழில் வியாபாரம் லாபகரமாக இருக்கும். கலைஞர்கள் மதில்மேல் பூனையாக செயல்படுவார்கள். மாணவர்கள் வெற்றியை குவிப்பார்கள். விவசாயம் நல்ல வாழ்வாதாரமாக இருக்கும். விநாயகர் வழிபாடு செய்யவும்.
மகரம் (Capricorn):`

குரு மற்றும் செவ்வாய் பகவான்கள் மேன்மை அடைய செய்வார்கள் பணவரவு சுமாராக இருக்கும். வாழ்க்கை சீராக இருக்கும். பணியாளர்கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரம் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் வாழ்வு நன்றாக இருக்கும். மாணவர்கள் வெற்றியின் உச்சத்தை எட்டுவார்கள். விவசாயம் லாபம் இரு மடங்காகும். சனிபகவான் வழிபாடு செய்யவும்.
கும்பம் (Aquarius):

சனிபகவான் நன்மை செய்வார். உடல் ஆரோக்கியமாக காணப்படும். ஆயுள் பலம் நீடிக்கும். அண்டை வீட்டார் பிரச்சனை விலகும். பணியாளர்கள் வேலைப்பளு அதிகமாக இருக்கலாம். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். கலைஞர்கள் வாழ்வு நன்றாக இருக்கும். மாணவர்கள் எழுச்சி அடைவார்கள். விவசாயம் விரயத்தில் முடியும். முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்.
மீனம் (Pisces):

புதன் பகவான் நன்மையே செய்வார். பணவரவு சுமாராக இருக்கும், உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், எதிலும் கவனம் தேவை. சுற்றுவட்டம் பாதுகாப்பாக இருக்கும். பணியாளர்கள் பணி மேன்மையடையும். வியாபாரம் லாபம் இரட்டிப்பாகும். கலைஞர்கள் தேவை பூர்த்தியாகும். மாணவர்கள் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவார்கள். விவசாயம் லாபகரமாக இருக்கும். குலதெய்வ வழிபாடு முன்னேற்றம் தரும் – rasi palangal april 26 – may 02.
– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு)