வார ராசிபலன் தை 25 – மாசி 01

தை மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal feb-07 to feb-13.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். எதிலும் வெற்றி காண்பீர்கள். உறவினர் வழியில் உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று நடக்கும். பெரிய மனிதர்கள் நட்பு சேரும். பணியாளர்கள்  சிறப்படைவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். விவசாயத்தில் லாபம் அதிகரிக்கும்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு செய்து வரவும்


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். செலவுகள் சற்று கூடும். பூர்வீகத்தில் பிரச்சனை உருவாகலாம்.  பிள்ளைகள் நல்லா உயர்வு அடைவார்கள். புதிய திட்டங்களை  உருவாக்குவீர்கள். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். விவசாயம் நஷ்டம் அடையும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். மனைவியுடன் கருத்து வேறுபாடு வரலாம். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பணியாளர்கள் வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படாது. கலைஞர்கள் நஷ்டமே அடைவார்கள். மாணவர்கள் எதிலும் கவனமாக இருக்கவும். விவசாயத்தில் உயரிய லாபம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். வாழ்க்கை துணைவி மூலம் நல்ல ஊக்கம் கிடைக்கும். எதிலும் பொறுமையாக செயல்படவும். குடும்பத்தில் பாகப்பிரிவினை நடைபெற வாய்ப்புள்ளது. பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு வருவாய் கிடைக்கும். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் நல்ல பெயர் எடுப்பார்கள். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செய்தல் சிறந்தது


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். வாழ்க்கை ஒரு போராட்டத்தில் நகரும். மற்றவர் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். நண்பர்கள் மூலம் சில உதவிகள் கிடைக்கலாம். எதிலும் நேரடியாக செயல்படவும். பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் . கலைஞர்கள் சிரமப்பட நேரிடும். மாணவர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். விவசாயிகள் பாக்கியசாலிகள் தென்படுவார்கள்.
பரிகாரம்: தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு  உள்ளது. சுப நிகழ்ச்சி ஒன்று நடக்கும். பணவரவு சுமாராகவே காணப்படும். பணியாளர்கள் கூடுதல் பொறுப்பு ஏற்பார்கள். விவசாயத்தில் நஷ்டம் ஏற்படாது. கலைஞர்கள் வெளியூர் பயணம் செல்வார்கள். மாணவர்கள் 100 சதம் வெற்றி அடைவார்கள். விவசாயம் நஷ்டமடையும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். உறவினர் வருகை நன்மையில் முடியும். வாகன யோகம் ஏற்படும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். செலவுகள் குறையும். பணியாளர்கள் சம்பள உயர்வு அடைவார்கள். வியாபாரிகள் பூஜை பொருள் சம்பந்தப்பட்ட வியாபாரம் லாபம் உயரும். கலைஞர்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயம் கால்நடை சம்பந்தப்பட்டவை மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். 
பரிகாரம்: நந்தி பெருமானை வணங்கி வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாகவே அமையும். மனதில் உறுதி காணப்படும். உடன்பிறப்புகள் ஆதரவு கிடைக்கும். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரம் பெண்களை பங்குதாரராக கொண்ட வியாபாரம் நல்ல ஆதாயம் கிடைக்கும். கலைஞர்கள் அரசாங்க ஆதரவு கிடைக்கப் பெறுவார்கள். மாணவர்கள் வீட்டில் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயம் நஷ்டமே அடையும்.
பரிகாரம்: அம்மன் வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு சுமாராகவே காணப்படும். உடல்நலம் சீராக அமையும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். புதிய வாகன யோகம் ஏற்படும். பணியாளர்கள் நல்ல உயர்வை எதிர்கொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். கலைஞர்கள் இரட்டிப்பு வருவாய் பெறுவார்கள். மாணவர்கள் வெற்றி  அடைவார்கள். விவசாயத்தில் லாபம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். ஆன்மீக பயணம் ஒன்று செல்வீர்கள். தோல் சம்பந்தப்பட்ட நோய் வரலாம் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவி கிடைக்கும், வீண் செலவுகள் வரலாம். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரிகள் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் நல்ல உயர்வைப் பெறுவார்கள். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு செய்துவருவது நன்மை பயக்கும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பண நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.  குடும்பத்தில் கவலை அடைவீர்கள், திருட்டு போக வாய்ப்புள்ளது கவனம் தேவை. பணியாளர்கள் எதிலும் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் லாபம் கிடைக்காது. கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள்  சோகமாக காணப்படுவார்கள். விவசாயத்தில் லாபம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: ஞாயிற்று கிழமைகளில் பைரவர் வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். உடல் நலத்தில் கவனம் தேவை. அதிக  செலவுகள் வரலாம். ஆடம்பர செலவுகள் உயரும். வீட்டில் ஒரு சில மாற்றங்கள் வரலாம். பணியாளர்கள் நல்ல ஆதாயம் பெறுவார்கள். வியாபாரம் ஆபரணம் சம்பந்தப்பட்ட வியாபாரம் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் புது புது ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.பரிகாரம்: மாலை நேரத்தில் காமதேனு வழிபாடு செய்து வரவும் – rasi-palangal feb-07 to feb-13

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...