வலையோடை பதிவு 5

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் – valaiyodai part 5

valaiyodai part 1

அக்கறை என்பது
பிறர் குறையை மட்டும்
கூறி திருத்துவது அல்ல..
அவரின் தேவைகளை
நிறைவேற்றுவதும் தான்.
@maheskanna

மனிதம் இல்லா மனிதர்களுக்கு இடையில்
பறவைகள் தங்கும் வேடந்தாங்கல்…
@akalvizhi

பயணம் முக்கியமல்ல அது தரும் பலனும் அனுபவமுமே முக்கியம்..
@pandi_prakash_

கிழிந்த
கசங்கிய
பக்கங்களில்
புதைந்து கிடந்தன
தவறுகளை
சுட்டிக்காட்டிய
உயிர் மெய் எழுத்துக்கள்
@vino_gathir

தண்டிப்பதை விடவும் மன்னிப்பதை விடவும்
பொறுமையாக கடப்பதற்கே
அதிக மனபலம் தேவைப் படுகிறது..!!
@iniyal_Twitz

காரணங்களைச் சொல்ல முடியாத நேரங்களில்
“பொய்கள்” பிறக்கின்றன…
@sankariofficial

நிராகரிப்புக்களை அதிகம் கடந்த பின்னர் தான்
பக்குவப்படுதலுக்கான தெளிவு நமக்கு வருகிறது.
@THARZIKA

என்னை எனக்கு பிடிக்கும்
பிடித்தலை நம்மிடமிருந்தும் தொடங்கலாம்!
@CrazeJemi

நம்பிக்கை இல்லையெனில்
மன்னிக்க கற்று கொள்ளுங்கள்.
வருத்தங்கள் குறையும்.
@TRAMESH21548526

கணக்கில்லாத பொய்களுக்கு
காரணமாகவும் சில மனிதர்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்..
@Sabarish_twittz

கடிகாரத்தை கடத்தும் காலம்
இந்த இரவை கடத்த தாமதிக்கிறது – valaiyodai part 5..
@pandi_prakash_

You may also like...

1 Response

  1. கதிர் says:

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்