வலையோடை பதிவு 4

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் – valaiyodai part 4

valaiyodai part 1

தொலைதூரமாய் நீ இருந்தாலும்
உன் நினைவுகள் தொலையாமலே
இருக்கிறது
@abhi_heartz

பணம் இல்லையென்றால் வறுமையில்தான் இருக்க வேண்டும் -ஆனால் சந்தோஷமாக இருக்கலாம்….!
@Gowshhh

எதுவும் நிரந்தரமில்லை என்பதை ஒரு மரணம், ஒரு நிராகரிப்பு எளிதில் புரிய வைக்கிறது.
@THARZIKA

நேசத்தில் இயல்பை இழப்பது இயல்பான ஒன்றுதான்!!!
@Kannan_Twitz

சூழல்கள் எதுவாகினும்,
நமக்கென நேரம் ஒதுக்கி,
மனம் விட்டு பேசும் நேசம்
கிடைப்பது வரம்.!!
@Priyanka_Twitz

நனைய ஆட்களின்றி
பெய்த மழையின்
மிச்சங்களை
தூறி கொண்டிருக்கின்றன
சாலையோர மரங்கள்…
@Itz_Me_Shylu

கிடைப்பது எதுவும்
நிரந்தரமானதும் அல்ல,
இழப்பது எதுவும்
உனக்கானதும் அல்ல,
எதற்காக கவலைப்பட வேண்டும்.?
@nikhan_twitz

அத்தனை அன்பையும்
மறக்க வைத்து விடுகிறது
கோபம்
எத்தனை கோபத்தையும்
மறந்து விடுகிறது அன்பு
@TRAMESH21548526

அன்பால் ஒளிரும் வீடு ஆயிரம் சூரியன்களுக்குச் சமம்.
@raajaacs

பாறையில் விழுந்தாலும்,
மழை நீர்
நதியில் சேரும் போது,
வானின் பிழை
நீங்குகிறது !
@laksh_kgm

விழலாக பொருளெனாது
நல் உழவாகும்
காப்பென்றறிந்தே பெண்ணுக்கு நிகராக்கினன்
மறவாது பயின்றோறே – உரு
மறையென நம்பும் வாழ்வில் மனம்
குன்றாதிருப்பவனே ஆண்.
@Princepoiya

You may also like...

1 Response

  1. கதிர் says:

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்