வலையோடை பதிவு 1

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் உருவாக்கப்படுகிறது – valaiyodai part 1

valaiyodai part 1

தேவைக்கு ஏற்றார் போல் தன்மானமும் குறைந்து போய்விடுகிறது சிலரிடம்.
_ prakasht_


பணம் இல்லாதவன் ஏழை அல்ல, ஒரு நல்ல நண்பன் கூட இல்லாதவனே ஏழை.
_ @THARZIKA


விலகிச் செல்வதில் இத்தனை செளகரியம் இருக்கையில் விருப்பத்தை ஏன் சிரமத்தோடு தொடர வேண்டும்.!
_ @murugan_its


நெருங்காமல் இரு,
விலக்கப்படாமல் இருப்பாய்!!!
@Kannan_twitz


சிலர் எப்போதும் புன்னகையுடன்
இருக்கிறார்கள் , ஏனென்றால் அவர்களுக்கு தெரியும், – valaiyodai part 1
ஏன் சோகமாக இருக்கிறோம்
என்பதை விளக்குவதை விட புன்னகை எளிதானது என்று.!!
@priyanka_twitz


பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி
செய்வதற்கு முன்..,
ஆண் குழந்தைகளின் வளர்ப்பை உறுதி செய்வதும் பெற்றோர்களின் கடமையாகும்..!
@Firdaus_tweetz


மணக்கட்டையின்
மேல் அமர்ந்திருக்கிறாள்,
மனம் கட்டையான
அவள்..!
@kurungkavi


விருந்துக்குப் பறித்தது போக
மிச்சமிருக்கும் வாழையிலைகள்
விருந்தாகின்றன
காற்றுக்கு
@Lakshmivva1


கை ஓங்கட்டும் வணங்க என்றால்..
கால் நீளட்டும் உதவி என்றோட..!!
@nandhu_twitts

You may also like...

5 Responses

 1. surendran sambandam says:

  அனைத்தும் மிகவும் அருமை

 2. Kavi devika says:

  அருமை. நல் முயற்சி… வாழ்த்துகள் நீரோடைக்கு

 3. Priyaprabhu says:

  Superb..💐💐

 4. நிர்மலா says:

  மிகவும் நன்று. வாழ்த்துகள். அருமை. தொடரட்டும்.

 5. Nithyalakshmi says:

  நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்