வார ராசிபலன் மார்கழி 19 – மார்கழி 25


மார்கழி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal jan-03 to jan-09.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். ஆயுள் பலம் சிறப்பாக அமையும். பணம் வரவு தேவைகளை நிறைவேற்றும். அண்டை வீட்டார் மத்தியில் பகையுணர்வு வளரும். பணியாளர்கள் முழு வெற்றி அடைவார்கள். வியாபாரத்தில் லாபமே கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயம் நஷ்டம் அடைய வாய்ப்பு உள்ளது.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். குடும்ப தேவைகள் பூர்த்தி செய்யப்படும். குடும்பத்தில் சிறு குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏதாவது வகையில் பணவரவு இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரம் சுமாராகவே காணப்படும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் நல்ல உயர்வை அடைவார்கள். விவசாயம் லாப நஷ்டம் இல்லாமல் இருக்கும்.
பரிகாரம்: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். எதிலும் கவனமாக செயல்படவும். குடும்பத் தேவைகள் பூர்த்தியடையும். உறவினர் வருகை  நன்மை பயக்காது. பணியாளர்கள் உச்சம் பெறுவார்கள். வியாபாரத்தில் கடன் ஏதும் கொடுக்க வேண்டாம். கலைஞர்கள் அரசாங்க ஆதரவை பெறுவார்கள். மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள். விவசாயத்தில் லாபம் எதிர்பார்க்கலாம். 
பரிகாரம்: செவ்வாய் கிழமை  அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். வீட்டில் குழந்தை பாக்கியம் அமையும். சொத்துப் பிரச்சினைகள் தீர்க்கப்படும். பணியாளர்கள் அதிக வேலை செய்ய வேண்டியிருக்கும். வியாபாரத்தில் காய்கறி சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் தோல்வியே அடைவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். விவசாயிகள் பாக்கியசாலிகளாக திகழ்வார்கள். 
பரிகாரம்: நரசிம்மர் வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். வேலைப்பளு கூடுதலாக இருக்கும். பணவரவு சுமாராக அமையும். உறவினர் வருகை நன்மையில் முடியும். பணியாளர்கள் பணியில் நல்ல கவனம் தேவை. வியாபாரத்தில் கடன் கொடுக்க வேண்டாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். விவசாயம் நஷ்டம் அடையும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். வரவு செலவில் நல்ல கவனம் செலுத்தவும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் இரட்டிப்பு வருவாய் பெறுவார்கள். மாணவர்கள் குடும்பத்தில் நன்மதிப்பைப் பெறுவார்கள். விவசாயி தன்னுடைய தேவைகள் பூர்த்தி அடையும்.
பரிகாரம்: சனிக்கிழமை தினத்தில் சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். ஒரு சில குழப்பங்கள் வர வாய்ப்புள்ளது. தாயின் உடல்நிலை சற்று பாதிப்பு அடையும். அண்டை வீட்டார்கள் சரண் அடைவார்கள். பணியாளர்கள் சற்று கவனமாக செயல்படவும். வியாபாரம் சுமாராக இருக்கும். கலைஞர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். மாணவர்கள் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு அடைவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். 
பரிகாரம்: தினமும் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும், உடல்நிலை ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாகவே இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் தலைமை பொறுப்பை அடைவீர்கள். வியாபாரம் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் கவனமாக செயல்படவும். விவசாயத்தில் உயரிய லாபம் கிடைக்கும். 
பரிகாரம்: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு  தேவை நிறைவேறும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். உங்கள் முயற்சிகள் வெற்றியை அடையும். பொதுவாக சில சமயங்களில் விட்டுக் கொடுத்து போகவும். பணியாளர்கள் சிறப்பை அடைவார்கள். வியாபாரம் நன்மையே அடையும். கலைஞர்கள் அரசாங்க ஆதரவு  பெறுவார்கள். மாணவர்கள் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயம் சுமாராகவே இருக்கும். 
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்..


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். வருமானம் சுமாராகவே காணப்படும். உங்கள் பேச்சில் சற்று கவனம் தேவை. வீண் விரோதம் போட்டிகள் இருக்கும். பணியாளர்கள் நஷ்டமே அடைவார்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். கலைஞர்களுக்கு வருமானம் குறையும். மாணவர்கள் உச்சம் தொடுவார்கள். விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை.
பரிகாரம்: சிவ வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். சொத்துப் பிரச்சினை தீர வாய்ப்புள்ளது. யாரிடமும் அதிகமாக நம்பிக்கை வைக்க வேண்டாம். சகோதரிகள் ஆதரவு பெருகும். உறவினர் வருகை தீமைகள் முடியும். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரம் பூஜை பொருள் சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் நல்ல வருவாயைப் பெறுவார்கள். மாணவர்கள் தோல்வியே அடைவார்கள். விவசாயத்தில் நல்ல வருவாய் எதிர்பார்க்கலாம். 
பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்ப ஆரோக்கியமாக காணப்படும். பணம் வரவு எதிர்பார்ப்பு நிறைவேறும். சொத்துப் பிரச்சினைகள் தீரும். வீட்டில் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பணியாளர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு வருவாய் கிடைக்கும். கலைஞர்கள் முயற்சி வெற்றி அடையும். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: அனுமன் வழிபாடு செய்தல் நன்மை பயக்கும் – rasi-palangal jan-03 to jan-09.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

3 Responses

  1. surendran sambandam says:

    ராசி பலன்கள் நல்லதே நடக்கின்றது நன்றி

  2. Kavi devika says:

    இந்த புது வருடம் இனிமை தரட்டும் அனைவருக்கும்

  3. Nithyalakshmi says:

    புதுவருடம் புதுமையாக அமையட்டும்