வார ராசிபலன் புரட்டாசி 11 – புரட்டாசி 17
ராகு கேது பெயர்ச்சி பலன்களை 2020 வாசிக்க இங்கே சொடுக்கவும்.. – rasi palangal sep 27 to oct 03.
மேஷம் (Aries):
இந்த வாரம் குரு பகவான் பல நன்மைகளை செய்வார். குடும்ப ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணவரவு நன்றாகவே இருக்கும். உறவினர் வருகை நன்மையில் முடியும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். பணியாளர்கள் மேன்மை அடைவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் வாழ்வு சுமாரான பாதையில் நகரும். மாணவர்கள் வெற்றி அடைவார்கள். விவசாயம் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.
ரிஷபம் (Taurus):
இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் வாங்க யோகம் உள்ளது. பணவரவு நன்றாகவே இருக்கும். அண்டை வீட்டார் ஒற்றுமையுடன் இருப்பார்கள். பணியாளர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். வியாபாரம் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். விவசாயம் விரயத்தில் முடியும்.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.
மிதுனம் (GEMINI):
இந்த வாரம் சுக்கிர பகவானே பல நன்மைகள் செய்வார். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். உறவினர் வருகை நன்மையில் முடியும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து போகவும். சுப நிகழ்ச்சி ஒன்று வீட்டில் நடைபெற வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் பணி உயர்வு அடைவார்கள். வியாபாரம் பூஜை பொருள் சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயம் நல்ல லாபம் கிடைக்கும்.
வழிபாடு: சனி பகவான் வழிபாடு செய்து வரவும்.
கடகம் (Cancer):
இந்த வாரம் சுக்கிர பகவானே நன்மை செய்வார். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். உறவினர் வருகை நன்மையில் முடியும். பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்ப ஆரோக்கியம் நன்றாக அமையும். பணியாளர்கள் உயர் பதவியை அடைவார்கள். வியாபாரம் நல்ல லாபம் அடையலாம். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் 100 சதம் வெற்றி காண்பார்கள். விவசாயம் நல்ல மகசூல் கிடைக்கும்.
வழிபாடு: தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.
சிம்மம் (LEO):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். தேவையான பண வரவு அமையும். குடும்பத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணியாளர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்பார்கள். வியாபாரம் பழைய பாக்கிகள் வசூல் செய்யப்படும். கலைஞர்கள் விரயத்தை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் நல்ல பாடத்திட்டத்தை தேர்வு செய்வார்கள். விவசாயம் முன்னேற்ற பாதையில் செல்லும்.
வழிபாடு: முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.
கன்னி (Virgo):
இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். குடும்பம் நல்ல செல்வாக்கை அடையும். பணவரவு நன்றாகவே இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்யப்படும். உறவினர் வருகை நன்மையில் முடியும். பணியாளர்கள் வெற்றி காண்பார்கள். வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். கலைஞர்கள் தோல்வியே சந்திப்பார்கள். மாணவர்கள் கவனமாக செயல்படவும். விவசாயம் புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.
வழிபாடு: முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.
துலாம் (Libra):
இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். சுப நிகழ்ச்சி ஒன்று நடைபெற வாய்ப்பு உள்ளது. உறவினர் வருகை நன்மையில் முடியும். பணியாளர்கள் சம்பள உயர்வை பெறுவார்கள். வியாபாரம் நல்ல லாபம் ஈட்டும். கலைஞர்கள் வீட்டின் தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள். மாணவர்கள் கஷ்டத்தை எதிர்கொள்வார்கள். விவசாயம் சுமாரான பலனே எதிர்நோக்கும்.
வழிபாடு: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.
விருச்சிகம் (Scorpio):
இந்தவாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்க யோகம் உள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணியாளர்கள் வரவு செலவை சரியாக வைத்துக்கொள்ளவும். வியாபாரம் பழைய பாக்கிகள் வசூல் ஆகலாம். கலைஞர்கள் புது புது ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் இரட்டிப்பு நன்மை அடைவார்கள். விவசாயம் உச்சகட்டத்தை அடையும்.
வழிபாடு: வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.
தனுசு (Sagittarius):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். தேவையான பண வரவு இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வர். உறவினர் வருகை நன்மை பயக்காது. பணியாளர்கள் தன் பணியை செவ்வனே செய்வார்கள். வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் சுமாரான வெற்றியை அடைவார்கள். விவசாயம் நல்ல மகசூல் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.
மகரம் (Capricorn):`
இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாக இருக்கும். உறவினர் வருகை நன்மையில் முடியும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். எதையும் திறமையாக செயல்படுத்துவீர்கள். பணியாளர்கள் நல்ல வெற்றி அடைவார்கள். வியாபாரம் நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் வெளியூர் பயணம் செல்வார்கள். மாணவர்கள் சுமாரான வெற்றியே காண்பார்கள். விவசாயம் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும்.
வழிபாடு: குலதெய்வ வழிபாடு செய்து வரவும்.
கும்பம் (Aquarius):
இந்த வாரம் குருபகவானே நன்மைகள் பல செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். சகோதர வழியில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவி உறவுகள் மேம்படும். பணியாளர்கள் நன்மையை அடைவார்கள். வியாபாரம் சுமாரான லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெறுவார்கள். மாணவர்கள் ஒற்றுமையுடன் வாழ்வார்கள். விவசாயம் காய்கறி விற்பனை மூலம் நல்ல மகசூல் கிடைக்கும்.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.
மீனம் (Pisces):
இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். குடும்பம் பிரகாசமாக அமையும், பணவரவு நன்றாகவே இருக்கும், அண்டை வீட்டார் தொல்லை அறவே இருக்காது, குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். பணியாளர்கள் நல்ல சிறப்பை அடைவீர்கள். புதிய வகை வியாபாரத்தின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். கலைஞர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தின் மூலம் நன்மை அடைவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும் – rasi palangal sep 27 to oct 03.
– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு)
ராசிபலன் எப்போதும் நல்லதாகவே நடக்கின்றது ஐயா அவர்க ளுக்கு நன்றி
பயனுள்ள பலன்கள்.. நன்றி