வார ராசிபலன் புரட்டாசி 18 – புரட்டாசி 24

ராகு கேது பெயர்ச்சி பலன்களை 2020 வாசிக்க இங்கே சொடுக்கவும்.. – rasi palangal oct 04 to oct 10.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். குடும்பம் குழப்பமான சூழ்நிலையில் இருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி கைகூடும். வீட்டில் குழந்தை பாக்கியம் ஏற்படலாம். புனித தலங்களுக்கு சென்று வர வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வியாபாரம் நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் மதிப்பு உயரும். விவசாயத்தில் நல்ல லாபம் பெறலாம்.
வழிபாடு: துர்க்கை அம்மன் வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். உறவினர்கள் மத்தியில் சுமூகமாக இருக்கும். சுப நிகழ்ச்சி ஒன்று நடக்க வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் அதிக வேலைப்பளுவை சந்திக்க நேரிடும். வியாபாரம் நஷ்டம் அடைய வாய்ப்பு உள்ளது. கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் நல்ல வெற்றி பெறுவார்கள். விவசாயம் இடையூறுகளை எதிர்கொள்ளும்.
வழிபாடு: அனுமன் வழிபாடு செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் சுக்கிர பகவானே நன்மை செய்வார். வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் வாங்க வாய்ப்புகள் உள்ளன. ஆடை ஆபரணங்கள் வாங்க யோகம் உள்ளது. அவ்வப்போது குடும்பத்தில் பிரச்சனைகள்  வரலாம், கணவன் மனைவி இடையே இணக்கமான சூழல் உருவாகும். பணியாளர்கள் நற்பலன் பெறுவார்கள். வியாபாரம் நல்ல கவனத்துடன் செயல்படவும். கலைஞர்கள் லாபமே அடைவார்கள். மாணவர்கள் 100 சதம் வெற்றி காண்பார்கள். விவசாயம் அதிக விளைச்சல் கிடைக்கும்.
வழிபாடு: தினமும் காகத்திற்கு சாதம் படைக்கவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். எதையும் திறம்பட செய்யும் ஆற்றல் பிறக்கும். பணவரவு நன்றாகவே அமையும். சகோதரி வழியில் நல்ல மேன்மை கிடைக்கும். பணியாளர்கள் கடின உழைப்பை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வரவு செலவை சரியாக வைத்துக் கொள்ளவும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி அடைவார்கள். விவசாயம் நல்ல லாபம் கிடைக்கும்.
வழிபாடு: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் சுக்கிர பகவானே நன்மை செய்வார். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணவரவு நன்றாகவே இருக்கும். வீட்டில் குழந்தை பாக்கியம் அமைய வாய்ப்புள்ளது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடைபெறும். பணியாளர்கள் உயர் பதவியை அடைவார்கள். வியாபாரம் நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயிகள் லாபம் பெறுவார்கள்.
வழிபாடு: முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். உடல் ஆரோக்கியமாக காணப்படும். சகோதர வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். அணிகலன்கள் வாங்க யோகம் அமையும், அண்டை வீட்டார் மத்தியில் பகைமை உருவாகும். பணியாளர்கள் சம்பள உயர்வைப் பெறுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் வருவாய் கிடைக்கும். கலைஞர்கள் இழப்பீட்டை சந்திப்பார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி அடைவார்கள். விவசாயம்  விரையம் அடையும்.
வழிபாடு: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். வீட்டில் களவு போக வாய்ப்பு உள்ளது, கவனம் தேவை. கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து போகவும். சகோதர உறவு நீடிக்கும். பணியாளர்கள் ஊழியர் மத்தியில் ஒற்றுமை அடைவார்கள். வியாபாரம்  நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் உற்சாகம் அடைவார்கள். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயம் உயரிய லாபம் கிடைக்கும்.
வழிபாடு: பைரவர் வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். உறவினர் வருகை நன்மையில் முடியும். கணவன் மனைவி அன்பு நன்றாக இருக்கும். பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரத்தில் பகை வளரும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது. விவசாயம் நல்ல லாபம் அடையும்.
வழிபாடு: அம்மன் வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குருபகவானே நன்மைகள் பல செய்வார். பணவரவு தேவைகள் பூர்த்தி அடையும். ஆரோக்கியம் நன்றாக காணப்படும். வசதிகள் பெருக்கம் அடையும். வீட்டின் பொறுப்புகளை பெண்கள் வசம் ஒப்படைக்கவும். பணியாளர்கள் புதிய பதவி பெறுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கலைஞர்கள் இரட்டிப்பு வருவாய் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல வளர்ச்சி அடைவார்கள். விவசாயம் நல்ல மகசூல் கிடைக்கும்.
வழிபாடு: தினமும் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்தவாரம் கேதுபகவான் நன்மையே செய்வார். எப்போதும் பயணத்தில் கவனம் செலுத்தவும். பணவரவு நன்கு அமையும். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அண்டை வீட்டார் அனுசரணையுடன் இருப்பார்கள். பணியாளர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சி அடையும். கலைஞர்கள் விரயமே எதிர் நோக்குவார்கள். மாணவர்கள் புதிய வாய்ப்பை பெறுவார்கள். விவசாயம் மகசூல் அதிகரிக்கும்.
வழிபாடு: நந்தீஸ்வரர் வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு எதிர்பார்த்த அளவு இருக்கும். பெண்களுக்கு தாய்வீட்டு சீதனம் அமையும். கணவன் மனைவி இடையே மனக்கசப்பு வரலாம். பணியாளர்கள் தலைமை பொறுப்பு அடைவார்கள். வியாபாரம் நஷ்டத்தை எதிர்கொள்ளும். கலைஞர்கள் பெண்கள் மூலம் தொல்லை பெறுவார்கள். மாணவர்கள் கவனம் தேவை. விவசாயம் காய்கறி மூலம் நல்ல மகசூல் கிடைக்கும்.
வழிபாடு: தினம் காலை விநாயகர் வழிபாடு செய்யவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்கு அமையும். வீட்டின் தேவைகள் பூர்த்தியடையும். உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெறும். உறவினர் வருகை நன்மை அடையும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூல் ஆகும். கலைஞர்கள்  நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் நிம்மதி அடைவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
வழிபாடு: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும் – rasi palangal oct 04 to oct 10.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

3 Responses

  1. Kavi devika says:

    இனி வரும் நாட்கள் இன்பம் நல்கட்டும்

  2. Rajakumari says:

    ராசி பலன்கள் ஐயா அவர்கள் கூறியபடி நடக்கின்றது மிகவும் மகிழ்ச்சி நன்றி

  3. தி.வள்ளி says:

    இராசி பலனை அறிந்துகொண்டோம். ஐயா அவர்களுக்கு நன்றி.