வார ராசிபலன் தை 04 – தை 10
தை மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal jan-17 to jan-23.
மேஷம் (Aries):
இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பணவரவு நன்றாகவே இருக்கும். வீடு மனை வாங்க யோகம் உள்ளது. பணியாளர்கள் நன்கு சிறப்படைவார்கள். வியாபாரம் நல்ல முன்னேற்றம் அடையும். கலைஞர்கள் பெரிய மனிதர்களின் ஆதரவு பெறுவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.
ரிஷபம் (Taurus):
இந்த வாரம் குரு பகவான் நன்மையே செய்வார். குடும்பம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் கூடுதல் செலவுகள் வரலாம். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். கலைஞர்கள் சுமாராகவே தென்படுவார்கள். மாணவர்கள் உற்சாகமாக காணப்படுவார்கள். விவசாயம் நஷ்டம் அடையும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.
மிதுனம் (GEMINI):
இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். செலவுகள் சற்று கூடுதலாகவே இருக்கும். உடன்பிறந்தோர் வசம் பகை உருவாகும். பிரயாணத்தில் மிதவேகம் பின்பற்றவும். நல்ல நண்பர்கள் உதவி கிடைக்கும். பணியாளர்கள் சற்று கவனமாகவே இருக்கவும். வியாபாரம் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் நிதானமாக செயல்படவும். விவசாயம் அதிக லாபம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று அனுமன் வழிபாடு செய்து வரவும்.
கடகம் (Cancer):
கடகம்இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாகவே அமையும். உறவினர் வருகை நன்மையில் முடியும். பிரயானத்தின் போது நல்ல வரவு அமையும். பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு வருவாய் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் சற்று கவனமாக இருக்கவும். மாணவர்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்து வரவும்.
சிம்மம் (LEO):
இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். வீட்டில் ஆடம்பர பொருட்கள் வாங்க யோகம் உள்ளது. சேமிப்பில் சற்று தடை உருவாகலாம். நண்பர்கள் மூலம் நன்மை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் சற்று சிரமப்பட்டே முன்னேற்றம் காணலாம். வியாபாரத்தில் கடின உழைப்பின் மூலம் வெற்றி அடையும். கலைஞர்கள் அரசாங்க ஆதரவு பெறுவார்கள். மாணவர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். விவசாயிகள் பாக்கியசாலிகள் ஆவார்கள்.
பரிகாரம்: தினம் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.
கன்னி (Virgo):
இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். சுற்றுவட்ட மதிப்பு உயரும், சேமிப்பு சற்று உயரும். வெளியூர் பயணம் நன்மையில் முடியும். பணியாளர்கள் தலைமை பொறுப்பை ஏற்பார்கள். வியாபாரம் நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயம் நஷ்டமே அடையும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.
துலாம் (Libra):
இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். குடும்பம் அமைதியாக காணப்படும். சகோதரிகள் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு வாகன யோகம் உண்டாகும். பணியாளர்கள் கவனமாக இருக்கவும். வியாபாரம் நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் 100 சதம் வெற்றி காண்பார்கள். விவசாயத்தில் குடும்ப தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
பரிகாரம்: நந்தி பகவான் வழிபாடு செய்து வரவும்.
விருச்சிகம் (Scorpio):
இந்தவாரம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். வாகன செலவுகள் ஏற்படலாம், பயணத்தின் போது கவனமாக இருக்கவும். நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் வெற்றியை அடைவார்கள். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: வெள்ளி கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து வரவும்.
தனுசு (Sagittarius):
இந்தவாரம் குருபகவான் நன்மையே செய்வார். வருமானம் சுமாராகவே காணப்படும். பிரயாணத்தின் போது சற்று கவனமாக இருக்கவும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் வரலாம். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் திறமையுடன் செயல்படுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் செய்யப்படும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.
மகரம் (Capricorn):`
இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரம் கூட்டு வியாபாரம் லாபம் அடையும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள். விவசாயம் கீரை சம்பந்தப்பட்ட தொழில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: விஷேச காலத்தில் அன்னதானம் வழங்கவும்.
கும்பம் (Aquarius):
இந்த வாரம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். சிறு தடைகள் வர வாய்ப்புள்ளது. பொருளாதாரம் சீராக காணப்படும். வாகன யோகம் ஏற்படும். பணியாளர்கள் சிரமப்பட நேரிடும். வியாபாரிகள் சற்று கவனமாக செயல்படவும். கலைஞர்கள் நல்ல வருவாய் பெறுவார்கள். மாணவர்கள் சற்று கவனமாக செயல்படவும். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: சிவன் வழிபாடு செய்து வரவும்.
மீனம் (Pisces):
இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். குடும்பத்தின் தரம் உயரும். சேமிப்பு சற்று உயரும். வீட்டில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். செலவுகள் சற்று அதிகமாகவே இருக்கும். பணியாளர்கள் ஆரோக்கியமாக காணப்படுவார்கள். வியாபாரிகள் கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் உற்சாகமாக காணப்படுவார்கள. விவசாயம் இரட்டிப்பு வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: தினம் காலை பசுவை தரிசிக்கவும் – rasi-palangal jan-17 to jan-23.
– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு)
ஐயா அவர்கள் கூறியபடி எப்போதும் போல இந்த வாரமும் நல்லதே நடக்கட்டும்
என்னுடைய ராசி கன்னி…நல்லதாக இருக்கும் என்று கூறியுள்ளார். அவ்வாறு நடந்தால் மகிழ்ச்சி..
அருமை