வார ராசிபலன் புரட்டாசி 04 – புரட்டாசி 10

ராகு கேது பெயர்ச்சி பலன்களை 2020 வாசிக்க இங்கே சொடுக்கவும்.. – rasi palangal sep 20 to 26.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் குருபகவானே நன்மைகள் செய்வார். குடும்பத்தில் பணவரவு நன்றாகவே அமையும். வீட்டின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். உறவினர் வருகை நன்மையில் முடியும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் செய்யப்படும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் குடும்பத்தில் நற்பெயரை எடுப்பார்கள். விவசாயத்தில் அதிக மகசூல் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் வாங்க யோகம் உள்ளது. குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். வீட்டில் குழந்தை பாக்கியம் அமைய வாய்ப்பு உள்ளது. சகோதர சகோதரிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணியாளர்கள் வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். வியாபாரம் சுமாரான லாபமே கிடைக்கும். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் வெற்றி காண்பார்கள். விவசாயம்  நஷ்டமே ஏற்பட வாய்ப்புள்ளது.
வழிபாடு: ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். வீட்டில் பணவரவு நன்றாகவே இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வீட்டில் குழந்தை பாக்கியம் அமைய வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி நல்லுறவுடன் இருப்பார்கள். பணியாளர்கள் சம்பள உயர்வை பெறுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். விவசாயத்தில் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: சனிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் சுக்கிர பகவானே நன்மைகள் செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் வாங்க யோகம் உள்ளது. குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணியாளர்கள் பதவி உயர்வை அடைவார்கள். வியாபாரத்தில் புதிய பொருட்கள் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் இரட்டிப்பு வெற்றி அடைவார்கள். விவசாயம் லாபம் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு இருக்கும். குடும்பம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். புதிய வீடு வாங்க யோகம் உள்ளது. பயணத்தின் போது கவனத்துடன் செயல்படவும். பணியாளர்கள் நஷ்டத்தை எதிர்கொள்வார்கள். வியாபாரத்தில் புதிதாக கடன் கொடுக்க வேண்டாம். கலைஞர்கள் தோல்வியை சந்திப்பார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயம் நல்ல லாபம் அடையும்.
வழிபாடு: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். உடல் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு எதிர்பார்த்த அளவு இருக்கும். சகோதர சகோதரிகள் ஆதரவுடன் இருப்பார்கள். பயணத்தில் கவனமாக இருக்கவும். பணியாளர்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். வியாபாரம் பெண்களை பங்குதாரராக கொண்ட வை சிறப்படையும். கலைஞர்கள் லாபம் அடைவார்கள். மாணவர்கள் நூறு சதம் வெற்றி காண்பார்கள். விவசாயத்தில் லாபம் கிடைக்கும்.
வழிபாடு: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஒரு சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். அண்டை வீட்டில் பகைமை வரலாம். பணவரவு நன்றாகவே இருக்கும். ஆயுள்பலம் நன்றாக இருக்கும். பணியாளர்கள் சம்பள உயர்வைப் பெறுவார்கள். வியாபாரத்தில் பூஜை பொருள் வியாபாரம் நன்கு சிறப்படையும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் நல்ல பாடப்பிரிவு கிடைக்கப் பெறுவார்கள். விவசாயத்தில் லாபமே எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். அண்டைவீட்டார் உங்கள் வசம் சரண் அடைவார்கள். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். எதிலும் வெற்றியே கிடைக்கும். பணியாளர்கள் தலைமை பொறுப்பை ஏற்பீர்கள். வியாபாரம் இரட்டிப்பு வருமானம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் பாக்கியசாலிகளாக திகழ்வார்கள். மாணவர்கள் தோல்வியே சந்திப்பார்கள். விவசாயம் சுமாரான பலனே கிடைக்கும்.
வழிபாடு: முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குருபகவானே நன்மை செய்வார். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். மேல் அதிகாரிகளை அனுசரித்துப் போகவும். பணவரவு நன்றாக இருக்கும். உறவினர் வருகை நன்மையில் முடியும். பணியாளர்கள் வெற்றியை அடைவார்கள். வியாபாரத்தில் புதிய தொழில்கள் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். கலைஞர்கள் விரயத்தை சந்திப்பார்கள். மாணவர்கள் உச்சத்தைத் தொடுவார்கள். விவசாயம் நல்ல தொழில் நுட்பத்தின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
வழிபாடு: சனி பகவான் வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற வாய்ப்பு உள்ளது. எதிலும் வெற்றியைக் கிடைக்கும். பணம் வரவு தேவைக்கேற்ப இருக்கும். பணியாளர்கள் அரசாங்க உதவி பெறுவார்கள். வியாபாரம் நல்ல சிறப்படையும். கலைஞர்கள் வீட்டின் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் வெற்றி காண்பார்கள் விவசாயத்தில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். எதிலும் நல்ல லாபம் அடைவீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். உறவினர்களுடன்  நல்ல உறவு இருக்காது. பணியாளர்கள் புதிய  பதவி பெறுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கலைஞர்கள் விரயத்தை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் நல்ல வெற்றி காண்பார்கள். விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். நல்ல வருவாய் கிடைக்கும். வீட்டில் குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. சுப நிகழ்ச்சி ஒன்று நடக்கவும் வாய்ப்புகள் உள்ளன. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். பணியாளர்கள் நன்கு சிறப்படைவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். கலைஞர்கள் நல்ல வருவாய் கிடைக்கப் பெறுவார்கள். மாணவர்கள் தோல்வியே எதிர்கொள்வார்கள். விவசாயத்தில் இரட்டிப்பு வருமானம் கிடைக்கலாம்.
வழிபாடு: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும் – rasi palangal sep 20 to 26.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

3 Responses

  1. Rajakumari says:

    அனைவருக்கும் நல்லது நடக்கட்டும்

  2. Kavi devika says:

    நாளும் நன்மையே பயக்கட்டும்

  3. தி.வள்ளி says:

    நாளும் கோளும் எல்லோருக்குமே நன்மை பயக்க ஆண்டவன் அருளட்டும்