அகம் சொல்லும் முகம் – புத்தக விமர்சனம்

பாப்பாக்குடி இரா செல்வமணியின் “அகம் சொல்லும் முகம்” நூல் ஒரு பார்வை… (எழுதியது ம.சக்திவேலாயுதம்) படி வெளியீடு, பக்கங்கள் 144 – agam sollum mugam puthaga vimarsanam.

agam sollum mugam puthaga vimarsanam

இவ்வளவு சுவாரசியமாய் ஒவ்வொரு முகத்தையும் இவ்வளவு எளிதாய் சின்ன சின்ன கட்டுரைகள் மூலம் இரா செல்வமணி அவர்களால் மட்டுமே மட்டுமே சொல்லியிருக்க முடியும் என நினைக்கிறேன்.

அகம் சொல்லும் முகமாக திருச்செந்தூர் முருகனில் தொடங்கி பண்பாளர் நல்லகண்ணு ஐயாவில் முடிகிறது
கட்டுரைகள்.

கட்டுரையில் வரும் முகங்கள் அனைத்துமே நாம் அறிந்த முகங்களாக இருப்பதால் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை அவரது எழுத்துக்கள் பக்கங்கள் அனைத்தையும் திருப்பிப்பார்க்க வைத்தது.

இக்கட்டுரைத் தொகுப்பில் வரும் முகங்கள் நடிகர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், கவிஞர்கள், பொதுநலவாதிகள், என தன் மனதில் முன் நிற்கும் முகங்களோடு தன் ரத்த உறவுகளையும் விட்டுவைக்காமல் இரா செல்வமணி அவர்கள் கொண்டு வந்துள்ள முகங்களை தன் வாழ்க்கையில் ஏதோ ஒரு விதத்தில் வந்து சென்றதோடு மட்டுமல்லாமல்… அது ஏற்படுத்திய மாற்றங்களையும், நிகழ்வுகளையும் கட்டுரையாக கொண்டுவந்துள்ளார்… கட்டுரையாளர் செல்வமணி அவர்கள்.

அதில் நான் வாசித்து மகிழ்ந்த சில கட்டுரைகளில் இடம் பெற்றுள்ள சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பதிவதில் பெருமகிழ்ச்சி.

முருகனை முதல் கட்டுரையில் அமர்த்தி பார்த்த இவர் இரண்டாம் கட்டுரையில் அகம் சொல்லும் முகமாக தன் அன்னையை கூறி சிறப்பு செய்துள்ளார்.

கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரை இவர் கட்டுரையில் சொல்லும்போது
“எல்லா கதைகளுமே ஒரு கொலை அதற்கான பின்புலத்தில் நாம் ஊகிக்க முடியாத ஒருவர் எதிர்பாராத முடிவு என அமைந்திருந்தாலும் கதை நடக்கும் புதிய புதிய சூழல் விறுவிறுப்பான மொழிநடை அறிவியல் யுக்திகள் என வாசகர்கள் இதில் நடித்த ராஜேஷ் குமார் க்ரைம் நாவல் எனும் தனி மாத இதழை வெளிக்கொண்டு வந்தார்”

இந்த செய்தியோடு அந்த சிறு கட்டுரை சிறப்பாய் அமைந்திருந்தது.

மரணத்தைத் தழுவி

மேலும் கணித மேதை ராமானுஜன் அவர்களை சொல்லும்போது அவர் மரணிக்கும் போது வயது 32. அது என்ன சோகமோ தெரியவில்லை மிகச் சிறந்த அறிஞர்கள் சிறு வயதிலேயே மரணத்தைத் தழுவி விடுகிறார்கள் இந்த வருத்தத்தை பதிவு செய்துள்ளார் கட்டுரையாளர் – agam sollum mugam puthaga vimarsanam.

திருமுருக கிருபானந்த வாரியார் பற்றிய கட்டுரையில் அவர் செய்த பக்தி சொற்பொழிவுகள் பற்றியும் பக்தி பாடல்கள் பற்றியும் அவரது பேச்சை பற்றியும் சிறப்பாக சொல்லியிருந்தார் கட்டுரையாளர். கட்டுரையை நிறைவு செய்யும்போது கட்டுரையாளர் சொன்ன செய்தி எனக்கும் வியப்பாகவே தென்பட்டது. அது யாதெனில்

“பக்திப் பாடல்களையும் கவிதைகளையும் பக்தி சொற்பொழிவு மற்றும் வாரியார் சுவாமிகள் ஒரு சிறந்த வீணை இசைக் கலைஞர் என்பது உங்களுக்கு தெரியுமா” என்று முடித்திருப்பார். ஆம் இக்கட்டுரையை வாசிக்கும் போதே எனக்கு இது புலப்ப்பட்டது.

கவியரசர்

கவியரசர் கண்ணதாசனைப் பற்றி அவர் எழுதிய கட்டுரையில் இருந்த செய்தி இன்னும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. கவியரசர் குழந்தைக்காக எனும் படத்துக்காக தேசிய விருது, சேரமான் காதலி என்னும் நூலுக்காக சாகித்ய அகாடமி விருது என்றவாறு ஏராளமான கவிதைத் தொகுப்புகள் கட்டுரைகள் நாவல்கள் என எழுதிய கவியரசு என்ன படித்திருக்கிறார் என்று நீங்கள் அறிவீர்களா? அதிகம் இல்லை நண்பர்களே வெறும் எட்டாம் வகுப்புதான்”… என்று சொல்லியிருக்கிறார் கட்டுரையாளர்.

கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன்

கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் பற்றிய கட்டுரையில் அவரது சிறப்புகளை எடுத்தியம்பும் சொற்களாக பல அமைந்திருந்தன. என்எஸ் கிங் போன்ற மக்கள் சிந்தனைப் புரட்சி உருவாக காரணமான முன்னோடிகளை என்றும் நாம் மறக்கலாகாது என்ற வரிகள் அகம் சொல்லும் முகத்திற்கு பேரழகு.

கவிஞர் ஈரோடு தமிழன்பன் பற்றி கட்டுரையாளர் சொல்லியுள்ளது. வாசிப்பின் மேல் எனக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது இவர்தான் என்று ஆரம்பிக்கிறார். அதிலும் குறிப்பாக புதுக்கவிதையில் கட்டிப்போட்டு அவர்கள் இருவர் ஒருவர் வைரமுத்து இன்னொருவர் ஈரோடு தமிழன்பன் என்று பெருமை படுத்தியுள்ளார் கட்டுரையாளர்.

திரைப்பட நடிகர் நாகேஷ் பற்றி அகம் சொல்லும் முகத்தில் அவர் இறுதியாய் கூறியிருந்த வரிகள் உண்மையில் யோசிக்க வைத்தது.
“வாழும் காலத்தில் பெரிய அளவில் இந்தக் கலைஞன் கௌரி வைக்கப்படவில்லை என்பது மட்டும் ஒரு கேள்வியாகவே இருக்கிறது” உண்மைதானோ என யோசிக்க வைத்தது கட்டுரையாளரின் ஈர வரிகள்.

பண்பாளர் நல்லகண்ணு அய்யா வைப் பற்றி அவர் எழுதிய நல்ல தகவல்களை நான் வாசித்து மகிழ்ந்தேன். ஓரிடத்தில் நல்லகண்ணு அய்யா அவர்களை பற்றி கட்டுரையாளர் சொன்னது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நல்லகண்ணு அவர்கள் இலக்கிய அறிஞர் சி இலக்குவனாரின் மாணவர்.. அறிவுக்கடல் மு வரதராசனின் நண்பர்… பெண்மணி போராட்ட வரலாற்றை கவிதை நூலாகத் தந்தவர்… தமிழக நீர்வளம் குறித்து நூல்கள் பல தந்துள்ளார்… மொழிபெயர்ப்பு நூல்களும் படைத்துள்ளார்..

சுவாரஸ்ய தகவல்களோடு

இப்படி இந்த அகம் சொல்லும் முகம் முழுவதும் தன்னகத்தில் பதிந்த பலரையும் சுவாரஸ்ய தகவல்களோடும்… சிறப்பான பார்வையோடும் சின்ன சின்ன கட்டுரைகள் இரா செல்வமணி அவர்கள் நம்மை ரசிக்க வைத்துள்ளார்.

உண்மையில் இக்கட்டுரை தொகுப்பில் இடம் பெற்றவர்கள் பலர் நம் மனதிலும் அகம் சொல்லும் முகங்களே… எனினும் அதனை சுவாரஸ்யத்தோடும் கூடுதல் தகவல்களோடும் எளிதான கட்டுரைகளால் அவர்களை நம்மோடு இவர் எழுத்துகளால் இணைக்கிறார் என்பது உண்மை.

இதுபோன்ற புத்தகங்களை படிக்கும்போது பலரைப் பற்றிய அறியப்படாத செய்திகள் மட்டுமல்லாமல்… அவர்களைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் ஏற்படுகிறது. இப்புத்தகம் அகம் சொல்லும் முகங்களைப் பற்றிய தேடலை இன்னும் இன்னும் தூண்டுகிறது – agam sollum mugam puthaga vimarsanam.

– ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்

You may also like...

2 Responses

  1. Rajakumari says:

    நெருப்பு விழிகள் எழுதிய விமர்சனம் மிகவும் நன்றாக இருக்கிறது நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம் நன்றி

  2. தி.வள்ளி says:

    மிக அருமையான விமர்சனம்..திரு.இரா.செல்வமணியின் அகம் தேடும் முகங்களின் முகவரியை அழகுற விளங்க தருக்கிறது சகோதரர் சக்திவேலாயுதம் அவர்கள் விமர்சனம்.கதாசிரியருக்கும்…அழகுற விமர்சித்த கவிஞருக்கும் வாழ்த்துகள்..