உன் அழகின் கீழ்ப்படிந்த மாணவன் – நூல் ஒரு பார்வை

கோவை கவிஞர் அன்புசிவா அவர்களின் 32 வது புத்தகம் “உன் அழகின் கீழ்ப்படிந்த மாணவன்” கவிதை நூல் பற்றி இந்த கட்டுரையில் வாசிப்போம். இந்த கவிதை புத்தகம் 146 பக்கங்கள் கொண்டு கடந்தகால நினைவுகளை சுமந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது – anbu siva puthaga vimarsanam

anbu siva puthaga vimarsanam

பள்ளிப் பருவத்தை நினைத்துப் பார்ப்பதென்பது நதிகளின் நாசிகளால், வாடிய தாவரங்களின் வேர்களை நுகர்கின்ற அதீத நுட்பம் – un azhagin keezhpadintha manavan.

ரெட்டை சடை நீல ரிப்பன்களும் டிம்பர் பூக்களின் சாரமும் பேனா மை கரைகளுடன் கூடிய கைக்குட்டைகளும் காலங் கடந்த பின்னும் முற்றிய இதயத்தின் ஆழத்தில் மிதவையின் சூட்சமத்தில் பாறாங்கல்லின் எடையில் மிதந்து கொண்டுதான் இருக்கின்றன. தனது பள்ளிப்பருவ காலத்தில் எழுதப்பட்ட கவிதைகளை தேர்ந்தெடுத்து புத்தகத்தை வலிகளாலும் வார்தைகளாலும் பின்னியிருக்கிறார் ஆசிரியர்.

அவனின் அவளுக்காக எங்கும் ஒரு இளம் காதலனின் நினைவுகளை, ஏக்கங்களை அருமையாக கவிஞர் சொல்லும்விதம் மிக அருமை..,

அன்பே
உன் உள்ளங்கையில்
என் கண்ணம் வைத்து
உறங்க ஆசை வைத்தேன்
ஆனால்
எனக்கு முன்பே
உறங்கி விட்டாயே..

மேலும் கவிஞர் ஒரு விளையாட்டு போட்டியை கருவாக வைத்து வாழ்க்கையின் மறக்க முடியாத நினைவுகளையும், வலிகளையும்

ஓட்டப்பந்தயத்தில்
ஓடிவந்து
முதல் பரிசை
வாங்கிப்போனவள் நீ..!

நீ ஓடிவந்த
ஓட்டப்பந்தயத்தில்
உன் மூச்சுக்காற்றை
இரண்டாவது பரிசாக
வாங்கிப்போனவன் நான்..!

என்ற வரிகளில் மனதில் பதியும்படி சொல்லியிருப்பார். பூமியில் படுத்துக்கொண்டே நிலவை தொட்டுப் பார்க்கின்ற அற்புத நிகழ்வை “உயிருக்குள் விசாலமான ஊடுவுகின்ற” உற்சாகம் கலந்த நினைவுகளை பள்ளிப்பருவமமே நிகழ்த்தி காட்டும் என்பதை அழகாக சொல்லியிருப்பார்.

“அவள்
அவளுக்குத் தெரியாமல்
வாங்கப்படுகிறாள்
அவள்
அவளுக்குத் தெரியாமல்
விற்கப்படுகிறாள்
அவள்
அவளுக்காக இல்லை
அவள்
அவனுக்காக ! “

என்பதை எதார்த்தமாக “அவள் அவளுக்கு தெரியாமல் வாசிக்கப்படுகிறாள், நேசிக்கப்படுகிறாள்” என எடுத்துரைப்பது காதலின் உச்சகட்ட வெளிப்பாடு என்றே கூடலாம் – anbu siva puthaga vimarsanam.

You may also like...

1 Response

  1. Priyaprabhu says:

    விமர்சனம் நன்று..