வார ராசிபலன் பங்குனி 01 – பங்குனி 07

மாசி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal mar-14 to mar-20.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பயணத்தின் போது கவனமாக இருக்கவும். பணவரவு நன்றாகவே அமையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படலாம். கணவன் மனைவி உறவுகள் சீராகும். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் குறைந்த லாபமே எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் நல்ல உயர்வு பெறுவார்கள். விவசாயத்தில் குடும்ப தேவைகள் நிறைவு செய்யப்படும்.
பரிகாரம்: அனுமன் வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் வருவாய் உயரும். எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். வீடு புதுப்பிக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். கலைஞர்கள் அலைச்சல் அதிகரிக்கும். மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். கணவன் மனைவி உறவுகள் மேம்படும். கடன் தொல்லை நீங்கும். பெண்களுக்கு செலவுகள் குறையும். பணியாளர்கள் ஆரோக்கியமாக காணப்படுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் 100 சதவீதம் பெறுவார்கள். விவசாயம் நஷ்டம் அடையும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். பழைய பிரச்சனைகள் தீரும். உங்கள் பேச்சு மற்றவர்களை கவரும். ஒரு நல்ல தகவல் வந்து சேரும். பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணியாளர்கள் லாபம் அடைவார்கள். வியாபாரம் பெண்களை பங்குதாரராக கொண்டவை நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். மாணவர்கள் கவனமாக செயல்படவும். விவசாயத்தில் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: சிவ வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். வீண் அலைச்சல் உருவாகலாம். குடும்ப பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். உறவுகள் பலப்படும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரம் விரிவுபடுத்தப்படும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயம் காய்கறி சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: நந்தி வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். எந்த இடத்திலும் நடுநிலையாக பேசி வரவும். குடும்பத்தை அரவணைத்துச் செல்வீர்கள். வீடு வாங்க யோகம் உள்ளது. வீண் அலைச்சல் ஏற்படலாம் கவனம் தேவை. பணியாளர்கள் வரவு-செலவு கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் கடன் கொடுக்க வேண்டாம். கலைஞர் குழப்பம் அடைவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயிகள் பாக்கியவான்கள் ஆவார்கள். 
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாகவே அமையும். குடும்பம் அமைதியாக காணப்படும். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள். விவசாயத்தில் நஷ்டம் அடையும். 
பரிகாரம்: தினமும் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். உடல் நலனில் கவனம் தேவை. பணவரவு சுமாராக காணப்படும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. உறவினர் வருகை நன்மையில் முடியும். பணியாளர்கள் நன்கு உயர்வு பெறுவார்கள். வியாபாரிகள் புதிய யுத்தியை கையாள்வார்கள். கலைஞர்கள் இரட்டிப்பு வருமானம் பெறுவார்கள். மாணவர்கள் நன்மதிப்பு அடைவார்கள். விவசாயத்தில் குடும்பத் தேவை பூர்த்தி செய்யப்படும்.
பரிகாரம்: விசேஷ தினத்தில் அன்னதானம் செய்யவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். நீண்ட நாளைய கஷ்டம் முடிவுக்கு வரும். குடும்பத்தில் பிரிவுகள் வரலாம், சுப நிகழ்ச்சி ஒன்று நடக்க வாய்ப்பு உள்ளது, கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரம் லாபம் அடையும். கலைஞர்கள் அரசாங்க ஆதரவு பெறுவார்கள். மாணவர்கள் நட்புறவுடன் காணப்படுவார்கள். விவசாயத்தில் சிறு பிரச்சனைகள் வரலாம்.
பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். பணவரவு சுமாராக இருக்கும். குடும்ப பிரச்சனைகளை தீர்வு கிடைக்கும். எதற்கும் நீங்கள் சுயமாக முடிவு எடுக்கவும். எதிலும் நிதானமாக பேசவும். பணியாளர்கள் புதிய பொறுப்பு அடைவார்கள். வியாபாரத்தில் கூடுதல் வருவாய் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயத்தில் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும்.
பரிகாரம்: காமதேனு வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். யாரிடமும் வீண் விவாதம் வேண்டாம். திடீர் செலவுகள் வரலாம். வாகன போக்குவரத்தில் கவனமாக இருக்கவும். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் குறைந்த லாபம் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் உச்சம் அடைவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். 
பரிகாரம்: சிவ வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். எதிர்ப்புகள் குறையும். பழைய பாக்கி வசூல் செய்யப்படும். சுப நிகழ்ச்சி ஒன்று நடக்கும். பிள்ளைகள் ஆதரவு நன்கு இருக்கும். பணியாளர்கள் லாபம் அடைவார்கள். வியாபாரிகள் வருமானம் உயரும். கலைஞர்கள் முன்னேற்றம் அடைவார்கள். மாணவர்கள் தோல்வி அடையாமல் கவனமாக செயல்படவும். விவசாயம் சுமாராக காணப்படும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும் rasi-palangal mar-14 to mar-20

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...