வார ராசிபலன் மாசி 16 – மாசி 22

மாசி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal feb-28 to mar-06.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். உங்கள் மனதில் பேராசை வேண்டாம். பணவரவு நன்றாகவே இருக்கும். பெரிய மனிதர்கள் சந்திப்பு ஏற்படும். பணியாளர்கள் நிலை உயரும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்களுக்கு வருமானம் உயரும். மாணவர்கள் உயர்வு அடைவார்கள். விவசாயத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். 
பரிகாரம்: சிவ வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். குடும்பம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். பணப்புழக்கம் நன்றாக அமையும். உறவினர் வருகை கருத்து வேறுபாடு நிலவும். எதையும் நேரடியாக செய்யவும். பணியாளர்கள் தலைமை பொறுப்பை அடைவார்கள். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நன்கு சிறப்படையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல உயர்வை எதிர்கொள்வார்கள். விவசாயம் காய்கறி சம்பந்தப்பட்டவை நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும்.  வீண் அலைச்சல் இருக்கும். பேசும் போது சற்று கவனமாக பேசவும். வாகன ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் நஷ்டம் அடையும். கலைஞர்கள் வருமானம் குறையும். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். கையிருப்பு கரைய வாய்ப்பு உள்ளது. திருட்டு பயம் இருக்கும். சொத்து ஆதாயம் கிடைக்கும். எதிலும் சிக்கன நடவடிக்கை பின்பற்றவும். பணியாளர்கள் லாபம் அடைவார்கள். வியாபாரத்தில் நஷ்டம் அடையும். கலைஞர்கள் தேவை பூர்த்தி அடையும். மாணவர்கள் மக்கள் மத்தியில் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயிகள் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் லட்சுமி வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். உடல்நிலை ஆரோக்கியமாக காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு சீராக இருக்கும். பணியாளர்கள் வெற்றி அடைவார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கலைஞர் சுமாராகவே செயல்பட இயலும். மாணவர்கள்  சோதனையை எதிர்கொள்வார்கள். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். வாகன ஆதாயம் கிடைக்கும். உடல்நிலை சீராக இருக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரம் கூட்டுத் தொழிலில் நல்ல ஆதாயம் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காண்பார்கள். விவசாயிகள் பாக்கியசாலிகள் ஆக திகழ்வார்கள்.
பரிகாரம்: நரசிம்மர் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். வீட்டில் சலசலப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொருளாதாரம் சுமாராகவே இருக்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். பணியாளர்கள் சற்று கவனமாக செயல்படவும். வியாபாரம் சீராக இருக்கும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். விவசாயம் நஷ்டம் அடையும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். புதிய முதலீடு எதுவும் வேண்டாம். எதிலும் நிதானமாக செயல்படவும். குடும்ப சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரம் லாபம் அடையும். கலைஞர்கள் வெற்றி காண்பார்கள். மாணவர்கள் 100 சதம் வெற்றி அடைவார்கள். விவசாயம் குடும்பத் தேவை பூர்த்தி அடையும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று பைரவர் வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். மனதில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொருளாதாரம் சீராக இருக்கும்.  பிரயாணத்தில் ஆதாயம் கிடைக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருக்கவும். பணியாளர்கள் இடமாற்றம் அடைவார்கள். வியாபாரம் பூஜை பொருள் சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயம் சத்துரு பயம் இருக்கும்.
பரிகாரம்: சிவ வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். பொருள் வரவு திருப்தி அளிக்கும். வீடு மாற்றம் நடைபெறலாம். பிரயாணத்தில் கவனமாக செயல்படவும். சிக்கன நடவடிக்கை கையாளவும். பணியாளர்கள் தற்காலிக இடமாற்றம் பெறுவார்கள். வியாபாரிகள் சிரமப்படுவார்கள். கலைஞர்கள் அரசாங்க உதவி பெறுவார்கள். மாணவர்கள் அரசு உதவி பெறு வார்கள்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.  செலவு அதிகமாக இருக்கும். தாயின் உடல்நிலை சற்று பாதிக்கும். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரம் முடிவில் லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு அடைவார்கள். மாணவர்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: தங்களுக்கு பிடித்த தினத்தில் அன்னதானம் செய்யவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் ராகுபகவான் நன்மையே செய்வார். மற்றவரிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்கவும். தேவையற்ற பயணம் வேண்டாம். சில சமயங்களில் மன குழப்பம் இருக்கும். பணியாளர்கள் உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் உற்சாகமாக காணப்படுவார்கள். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும் rasi-palangal feb-28 to mar-06

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...