வார ராசிபலன் வைகாசி 32 – ஆனி 06

இந்த வார ராசி பலன் பற்றி நமது வலையொளி (YouTube) சானலில் காண சொடுக்கவும் – rasi palangal june 14 – june 20.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் சூரியன் மற்றும் ராகு பகவான்கள் நன்மையே செய்வார்கள். பணவரவு நன்றாக அமையும். வீட்டில் ஒற்றுமை மேலோங்கும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், சகோதர வழியில் உதவி கிடைக்கும். பணியாளர்கள் பணியில் தலைமைப் பொறுப்பை ஏற்பார்கள். தொழில் வியாபாரத்தில் சக வியாபாரிகள் மத்தியில் செல்வாக்கு உயரும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் வெற்றியை குவிப்பார்கள். விவசாயத்தில் மஞ்சள் மற்றும் நெல் சாகுபடியில் நல்ல விளைச்சல் பெறுவார்கள்.
வழிபாடு: சனிபகவான் வழிபாடு தீமை விலகும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் புதன் பகவான் நன்மைகள் செய்வார். பணவரவு சிறப்பாக  இருக்கும். குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும், திருட்டுபயம் இருக்காது. கவனமாக செயல்பட்டால் பொருள் விரயத்தை தடுக்கலாம். பணியாளர்கள் புதிய பொறுப்பை ஏற்பார்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் தேவை பூர்த்தியாகும். மாணவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். விவசாயம் நல்ல பலனை ஈட்டித்தரும்.
வழிபாடு: தினமும் காலை சூரிய வழிபாடு செய்யவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் புதன் பகவான் நன்மை செய்வார். குடும்ப ஆரோக்கியமாக காணப்படும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போவது நல்லது, குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப வருமானம் உயரும். பணியாளர்கள் மிகவும் கவனமாக செயல்படவும். தொழில் வியாபாரம் கடன் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். கலைஞர்கள் விரயத்தை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் புதிய உச்சத்தை ஏற்றுவார்கள். விவசாயம் சிறப்பான வருமானம் ஈட்டித்தரும்.
வழிபாடு: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்யவும்.


https://youtu.be/wGSiEXcGs9k

கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வரம் குரு பகவான் நன்மை செய்வார். குடும்ப பண வரவு நன்றாக இருக்கும். பகைவர்களை வெல்லும் வல்லமை பெறுவீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெற வாய்ப்புள்ளது. பணியாளர்கள் திட்டமிட்ட செயலை நிறைவேற்றுவார்கள். வியாபாரம் விரிவுபடுத்தப்படும். கலைஞர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவார்கள். மாணவர்கள் ஆசிரியர் வழிகாட்டுதலை பின்பற்ற  வேண்டும். விவசாயத்தில் நஷ்டம் அடைய நேரிடும்.
வழிபாடு: விநாயகர்  வழிபாடு செய்யவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் புதன் மற்றும் சூரிய பகவான்கள் நன்மை செய்வார். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தி ஆகும், ஆரோக்கியம் மேம்படும். அரசு வகையில் நன்மை சேரும். மனஉளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.  தொழில் வியாபாரம் வங்கிக்கடன் கிடைக்கும்.  கலைஞர்கள் தொல்லைகளை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் ஆர்வம் அதிகரிக்கும். விவசாயத்தில் நல்ல விளைச்சல் கிடைக்கும்.
வழிபாடு: முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் சுக்கிர பகவான் நன்மை செய்வார். குடும்பத்தில்  பணவரவு நன்றாக இருக்கும், புதிய சொத்து வாங்கும் யோகம் உள்ளது. எதையும் வெற்றிகரமாக செயல்படுத்தும் ஆற்றல் பிறக்கும். பணியாளர்கள் நல்ல சம்பளம் பெறுவார்கள். தொழில் வியாபாரம் லாபகரமாக இருக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் கூடுதல் நன்மை பெறுவார்கள். விவசாயம் செலவுகள் குறைந்து வரவு அதிகரிக்கும்.
வழிபாடு: பெருமாள்  வழிபாடு செய்யவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும், திடீர் வருமானம் கிடைக்கும். எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உறவினர் வகையில் வீண் பகை உருவாகும். பணியாளர்கள் தலைமை பொறுப்பை ஏற்பார்கள். வியாபாரத்தில் பூஜை பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும். கலைஞர்கள் சுமாரான வருமானத்தையே  பெறுவார்கள். மாணவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். விவசாயத்தில் சிறுதானியங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
வழிபாடு: ஏழைகளுக்கு தானம் செய்தால் கடவுள் அனுகிரகம் கிடைக்கும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் புதன் பகவான் நன்மை செய்வார். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்ப பிரச்சனைகள் உருவாகலாம். அண்டை வீட்டார் மத்தியில் கவனம் தேவை. சகோதரவழி உறவு சிறக்கும். பணியாளர்கள் அரசு உதவி பெறுவார்கள். வியாபாரத்தில் மறைமுக போட்டி உருவாகலாம். கலைஞர்கள் தொல்லைகளை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். விவசாயத்தில் வழக்கு விவகாரத்தில் கவனம் தேவை.
வழிபாடு: சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயர் வழிபாடு செய்யவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாக இருக்கும். பெரும்பாலான கிரகங்கள் சாதகமான நிலையில் இல்லை எனவே முக்கிய முடிவுகளில் கவனம் தேவை. பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். பணியாளர்கள் பணியில் மேன்மை காண்பார்கள். வியாபாரம் லாபகரமாக இருக்கும். கலைஞர்கள் சொல்வடைய வாய்ப்புள்ளது. மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். விவசாயம் லாபம் பெற்று தரும்.
வழிபாடு: தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்யவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் சுக்கிர பகவான் நன்மை செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பெரியோர்களின் அன்பும் ஆதரவும் பெருகும். புதிய, வீடு வாகனம் வாங்க யோகம் உள்ளது. பணியாளர்கள் பணியில் தலைமை பொறுப்பை ஏற்பார்கள். தொழில் வியாபாரம் பழைய பாக்கி வசூல் ஆகும். கலைஞர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் ஆசிரியர் வழிகாட்டுதலை பின்பற்றவேண்டும். விவசாயம் நல்ல செல்வாக்கடையும்.
வழிபாடு: குலதெய்வ வழிபாடு செய்யவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் சனி பகவான் நன்மை செய்வார். குடும்பத்தில் ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உள்ளது, ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணியாளர்கள் பணியை அடுத்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரம் பழைய பாக்கி வசூலாகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும். விவசாயம் லாபம் ஈட்டித்தரும்.
வழிபாடு: சூரிய வழிபாடு செய்யவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். வீட்டின் தேவைகள் பூர்த்தி ஆகும். தடைகள் எளிதில் விலகும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுபவர்கள். தொழில் வியாபாரம் சக வியாபாரிகளிடம் நல்ல போக்கு இருக்கும். கலைஞர்கள் அரசு உதவி பெறுவார்கள். மாணவர்கள் பின்னடைவு தவிர்க்கப்படும். விவசாயத்தில் லாபம் அதிகரிக்கும்.
வழிபாடு: ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்யவும் – rasi palangal june 14 – june 20.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

5 Responses

 1. Kavi devika says:

  நேர்மறை உணர்வை மனதில் தக்கவைக்கும் பலன்கள்.

 2. Ushamuthuraman says:

  என் ராசியான கன்னி ராசிக்கு மிக சரியாக கணித்து சொன்னது அருமை. பாராட்டுக்கள்.

 3. தி.வள்ளி says:

  பலன்கள் சுருக்கமாக..நச்சென இருக்கின்றன

 4. R. Brinda says:

  எல்லாவற்றையும் பின்பற்றாவிட்டாலும் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வத்தை வணங்கினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். நன்றி!

 5. ராஜகுமாரி போருர் says:

  வாரா வாரம் நான் ஆவலோடு எதிர்பார்ப்பது ஜோதிடம்