ஆனி மாத மின்னிதழ் (Jun-Jul-2020)

இந்த சார்வரி சித்திரை மாதம் தொடங்கப்பட்ட சித்திரை மற்றும் வைகாசி மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – aani matha ithal.

முக்கிய விரத தினங்கள்
அமாவாசை - ஆனி 06 (20-06-2020)
பௌர்ணமி - ஆனி 20 (04-07-2020)
பிரதோஷம் - ஆனி 04 (18-06-2020) மற்றும் ஆனி 18 (02-07-2020)
aani matha ithal

ஒள இல் இத்தனை வார்தைகளா?

ஒளதசியம் – பால்
ஒளதாரியம் – தாராள மனப்பான்மை
ஒளபத்தியம் – புணர்ச்சி
ஒளபாசனம் – அக்கினி
ஒளரசன் – தான் பெற்ற  பிள்ளை
ஒளரப்பிரகம் – ஆட்டு மந்தை
ஒளவியம் – தீவினை 


மழலைக் கவிஞர் நவீனா – என்று தணியும் எங்கள் ஏக்கம் !

நண்பர்களுடன் விளையாட்டு
எனும் எண்ணத்தின் ஆக்கம் !
காலம் ஏற்படுத்திய
பிரச்சனைகளின் வீக்கம் !
இதுவரை ஏற்பட்டதெல்லாம்
கொரோனாவின் தாக்கம்.

neerodai korona poem

கொரோனாவுக்கு முன்னால்
குழந்தைகளுக்கும் வேண்டாம்
என்றார்கள் – பாரபட்சம்.
கொரோனாவுக்கு பின்னால்
தனிமனித விலகலை கற்பிக்க
காரணம் – அச்சம்.

நாங்கள் இருக்கலாம்
இன்று காலத்தின் பிடியில்.
விடிவெள்ளி முளைக்கும்
என்று நம்புவோம் ஞானத்தின் வழியில் ..
என்று தணியும் எங்கள் ஏக்கம் !.

  – நவீனா, 7ம் வகுப்பு, வல்லபா வித்யாலயா, மதுரை.


பஞ்சமூல ரசம்

பஞ்சம் என்றால் ஐந்து. மூலம் என்றால் மூலிகை. ஐந்து மருத்துவ மூலிகைகளை ஒன்றிணைத்து தயாரிக்கப்படும் ரசம் இது.இந்த ரசம் நம் உடலில் ஏற்படும் சளி,இருமல் காய்ச்சல் ஆகியவற்றை நீக்கும் ஆற்றல் கொண்டது.

தேவையான பொரு‌ட்க‌ள் :
1.தூதுவளை _ 5 இலைகள்
2.ஓமவல்லி _ 3 இலைகள்
3.வெற்றிலை 2இலைகள் 4.புதினா 3 இலைகள்
5.மல்லி _ சிறிதளவு
6.பூண்டு 3 பற்கள் 7.மிளகு,சீரகம் சிறிதளவு
8.பச்சை மிளகாய் _ 2
9.எலுமிச்சை _ 1 பெரியது
10.காய்ந்த மிளகாய் _ 2
11.உப்பு _ தேவையான அளவு
செய்முறை:
அனைத்து மூலிகைகளையும் ஒரு துளி நல்ல எண்ணெய் விட்டு வதக்கி, மிளகு சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். எலுமிச்சையை விதை நீக்கி பிழிந்து சாறு எடுத்து தேவையான தண்ணீர் விட்டு உப்பு சேர்த்துக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்க்கவும். நீர் சேர்த்து வைத்துள்ள எலுமிச்சை சாற்றை ஊற்றி கொதி வந்தவுடன் இறக்கவும்.
அனைத்து மூலிகைகளின் சத்தும் வாசனையும் இதில் கலந்து இருப்பதால், இந்த ரசம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.


மகளின் தந்தை

பேரானந்தமும் பெருந் துயரும் பெற்றவன், நான்!!
குலங்காக்கும் தெய்வத்தினை
௭ன் குலம் தழைக்க தோன்றியவளின் முகத்தில் கண்டேன்!
பெற்றவளின் சாயலை நான்
பெற்றவளின் புன் சிரிப்பில் கண்டேன்!
தாய்மை உணர்வின் பரவசம் நானும் பெற்றேன்,
என் பெண்ணைத் தழுவும் போது!

அழகில் தேவதை, என் பெண்!
அண்டமும் ஒரு பொருட்டல்ல, அவள்முன்!!
அவள் சிரிக்க கோமாளி யாய் அரிதாரம் கொண்டேன்!
அவள் அறிவைப் போற்ற அடிமுட்டாளாய் ஆர்ப்பரிப்பேன்!
அவள் நடை பயில என் உயரம் குறைத்தேன்!
அவள் அச்சம் தவிர்க்க என் சினம் குறைத்தேன்!
அவள் வாழ்வியல் கற்க நான் ஆசான் ஆனேன்!
அவள் தன் நட்பு போற்ற நான் சற்று நகர்ந்தேன்!
அவள் ஆசைகள் நிறைவேற என் ஆசை மறந்தேன்!
‘நான்’ என்பதே என் பெண் இன்றி அர்த்தம் இராது!
என் கண்மணியைக் காக்க காவலனாய் அணிவகுத்தேன்!
என் கரம் பிடித்து நடைபயின்ற என் இளவரசியை
மணக் கோலத்தில் ‘கன்னிகாதானம்’ செய்தேன்!
நிறைவேறியது, கடமையின் பணி!!
நில்லாதது, கண்ணீர்த்துளி!
உயிரின் வலி!
வெறுமையின் ஒலி!
ஆயினும்,
அவள் இன்முகம் கண்டு என்னுயிர் கொண்டேன்!

இன்றும், என் பெண் இன்புற
நான் என் கர்வம் துறந்தேன்!
பொறுமை பழகினேன்!
நினைவு களில் வாழக் கற்றுக் கொண்டேன்!!

ஆம்…! நான் தான்
என் “மகளின் தந்தை! “

– ஆனந்தி, ஓசூர்.


சிறுநீரகக் கற்களின் வகைகள்

கற்கள் எந்தவகை தாதுக்களால் உருவாகியுள்ளன எனபதைப் பொறுத்து அவற்றைப் பல வகைகளாகப் பிரிக்கலாம். அவற்றுள் கீழ்க்கண்ட வகைகள் முக்கியமானவை.

 1. முதல்நிலைக் கற்கள்
  கால்சியம் ஆக்சாலேட் கற்கள்
  யூரிக் ஆசிட் கற்கள்
  பாஸ்பேட் கற்கள்
  மாட்ரிக்ஸ் கற்கள் (புரதக் கற்கள்)
 2. இரண்டாம் நிலை கற்கள்
  கால்சியம் ஆக்சாலேட் கற்கள் இணைந்து உருவாகும் கற்கள்.
  சிறுநீரகக் கற்களில் 80 சதவிகித கற்கள் இவ்வகைக் கற்களே.
  பெரும்பாலும் சிறுநீரகங்களிலேயே உருவாகும்.
  அளவில் சிறிதாகவே இருக்கும்.
  கருங்காவி நிறமுடையது.
  மேற்பரப்பு ஒழுங்கற்று சொரசொரப்பாக இருக்கும்.
  இவையும் பெரும்பாலும் சிறுநீரகங்களிலேயே உருவாகின்றன.
  அளவில் மிகச்சிறியதாக இருக்கும் சில மி.மீட்டர்கள் விட்டமுள்ளவை.

அட்சயா ஓவியம்

akshya oviyam

முத்து சசிரேகாவின் எண்ணங்கள் வர்ணங்களாக..

ennangal vannangalaaga
கருவிலும் சொல்லி வளர்ப்போம் எம் தாய்த்தமிழின் பெருமையை !

ஆனி  பிறந்தநாள்

ஆனி பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நட்சத்திரப்படி பிறந்தநாள் கொண்டாடுவோம் பாரம்பரியம் போற்றுவோம் – aani matha ithal.

You may also like...

6 Responses

 1. R. Brinda says:

  ஒவ்வொரு பகுதியும் மிக அருமை! அதோடு பயன்தரக் கூடிய வகையில் இருப்பது இன்னும் சிறப்பு!! பஞ்சமூல ரசம் நிச்சயம் எல்லோருக்கும் பயன்படும்.

 2. ராஜகுமாரி போருர் says:

  மிக்க மகிழ்ச்சி

 3. ராஜகுமாரி போருர் says:

  ஆனி முதல் நாளே இவ்வளவு செய்திகள் அளித்த மைக்கு நன்றி

 4. தி.வள்ளி says:

  ஆனிமின்னிதழ் அருமை..மழலைகளின் படைப்புகள் அனைத்தும் மிக நன்று..’ஔ’ ல் இத்தனை வார்த்தைகளா…இதுவரை அறியாதது.மூலிகை ரசம்…பயனுள்ளது.கவிதை அருமை…

 5. Kavi devika says:

  அனைத்து படைப்புகளும் அருமை. அனைவரையும் ஊக்கம் கொடுத்து எழுத வைத்து படைப்பாளராக மாற்றி அரும்பணி செய்துகொண்டிருக்கும் நீரோடையின் ஓட்டம் தடையின்றி தொடரட்டும். வாழ்த்துகள்

 6. தங்கள் அனைவரின் ஆதரவுக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *