வைகாசி மாத மின்னிதழ் (May-Jun-2020)

இந்த சார்வரி சித்திரை மாதம் தொடங்கப்பட்ட சித்திரை மாத இதழுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – vaikasi matha ithal.

முக்கிய விரத தினங்கள்
அமாவாசை - வைகாசி 09 (22-05-2020)
பௌர்ணமி - வைகாசி 23 (05-06-2020)
பிரதோஷம் - வைகாசி 07 (20-05-2020) மற்றும் வைகாசி 21 (03-06-2020)

எதிர்காலம் – பவித்ரா

கொரோனா என்ற வைரஸ்
வந்ததே !
மனிதரின் உயிர்களை பறித்ததே !
உயிர்கள் அனைத்தும் ஒன்றே என
எண்ணிட செய்ததே!
எனினும் மானிட நீ அஞ்சாதே !
எதிர்காலம் சிறக்கும் நீ
கலங்காதே !
படிப்பினையை மட்டும் பற்றிக்கொண்டு,
முன்னேறு என்றும் படிக்கெட்டுண்டு  !

நம்பிக்கை விதை நம்மிடம் உண்டு !
கொரோனாவை ஒழிப்போம்,
உலகின் துணைகொண்டு.

பவித்ரா, DGHS பள்ளி , அருப்புக்கோட்டை.


ஆட்டோகிராப் – சிறுகதை

தன் கணவருடன், தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி செல்லும் விழிப்புணர்வு பயணத்தின் நான்காம் நாள்..பள்ளி குழந்தைகளிடம், தண்ணீர் சேமிப்பின் பலன்களை பகிர்ந்தால், வறட்சியை தடுக்கலாம் என பெண்கள் பள்ளியில், அனுமதி வாங்கி நிகழ்ச்சியை முடித்து கிளம்பிய, வல்லிக்கு நெகிழ்வான அனுபவம்.

“ஆன்ட்டி… ஆட்டோகிராப் ப்ளீஸ்..”ஏகப்பபட்ட உள்ளங்கைகள் தன் முன்னே விரிந்திருக்க, ஆர்வமாய், பொறுமையாய் , மகிழ்ச்சி என எழுதி கையெழுத்திட்டாள்.. இரவு, உணவுக்கு முன், கை கழுவும் போது, மனசுக்குள் ஒரு நெருடல். “கை கழுவும் போது, என் கையெழுத்தும் மறைந்து விடுமே ….” கவலை முளைத்தது.உடனே, கணவரிடம் “விவரமில்லாத பிள்ளைங்க…பேப்பர் இல்லைங்கறதுக்காக கையிலா கையெழுத்து வாங்கணும். தண்ணீர் பட பட அழிந்து விடுமே..”சோகமானாள். அந்த நேரம் மனைவியை சமாதானப் படுத்த, “இப்ப உள்ள பிள்ளைங்க வேற லெவல்ல யோசிப்பாங்க விடு” என்று முற்றுப்புள்ளி வைத்தார்.

அறுபது நாள், பயணம் பூர்த்தியாகி, மகிழ்வாய் இல்லம் திரும்பினர்.. அடுத்தடுத்த நாட்களில், தொலைகாட்சி ,நாளிதழ்கள், பத்திரிகைகளில் பேட்டி, லயன்ஸ், ரோட்டரி கிளப்களில் பாராட்டு விழா என இரண்டு வாரங்கள் ஆனந்த கொண்டாட்டம் தான்.

அன்று, மதியம் காய்ந்த துணிகளை எடுக்க மொட்டை மாடிக்கு செல்ல, வாசலுக்கு வந்தவளை அழைத்தான் கொரியர் பாய்.ஆன் லைனில் எதுவும் ஆர்டர் பண்ணவில்லையே… எண்ணியவாறு, பார்சலை வாங்கியவாறு உள்ளே வந்தாள்.அனுப்பியது யாரெனப் பார்த்தால், ராகவி, சில்லக்கல் ஆந்திரா என இருந்தது.புரியாமலே திறந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சியில், மள மள வென வடிந்தது கண்ணீர்.கையிலெடுத்தாள்.வல்லி கையெழுத்ததுப் போட்ட கைகளின் நடுவே அவள்.மகிழ்ச்சி என டைப் செய்யப்பட்டு, கீழே தேதியும், பள்ளியின் பெயரும் எழுதிய லேமினேஷன் போட்டோ..உண்மை தான், இளம் தலைமுறை வேற லெவல்ல யோசிக்கிறாங்கப்பா…வல்லியின் உதடுகள் முணுமுணுத்தன.

– என்.கோமதி நெல்லை-7


கோடைக்கேற்ற கோலா பானம்

தேவையான பொருட்கள்

  • எலுமிச்சை 2
  • கருப்பட்டி 200 கிராம்
  • ஏலக்காய் 2
  • புதினா 5 இலைகள்
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு

செய்முறை

எலுமிச்சை விதை நீக்கி ஒரு பாத்திரத்தில் பிழிந்து வைத்துக் கொள்ளவும். கருப்பட்டியை அடுப்பில் சிறிதளவு நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

எலுமிச்சை சாறில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு துளி உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

அதனுடன் கரைத்து வைத்த கருப்பட்டி சாறை சேர்க்கவும். இனிப்பு அதிகமாக தேவை என்றால் சற்று அதிகமான கருப்பட்டி சாறு சேர்த்துக் கொள்ளவும், அதனுடன் ஏலக்காய் இடித்து தூவவும், இறுதியில் புதினா இலைகளை சேர்க்கவும்.

கருப்பட்டியின் நிறம் சில பானங்களின் நிறத்தை போல் இருப்பதால் சிறுவர்கள் விரும்பி பருகுவார்கள், மேலும் உடலுக்கு ஏற்ற ஒரு நல்ல பானம்.

– ஏஞ்சலின் கமலா, தமிழ் ஆசிரியை, மதுரை.


சாட்சிகளாக்கி

கடற்கரையின் மணலை‌
தடவி சென்றது‌ அலைகள்!
சொல்லாமல் நம்மீது பட்டுச் சென்ற
குளிர்ந்த காற்று!
மணலில் அழகாய்‌
விளையடிய நண்டுகள்!
கப்பலில் ஏறி கரைக்கு வந்த மீன்கள்!
மாலைக்கு வழி விட்டு மறைந்த சூரியன்!
காட்சிகளை ரசித்தப்படி நடந்த நான்,
மணலில் பதித்த என் கால்
பாதங்களை சாட்சிகளாக்கி !!

– பிரகாசு.கி அவனாசி


வைகாசி பிறந்தநாள்

வைகாசி பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நட்சத்திரப்படி பிறந்தநாள் கொண்டாடுவோம் பாரம்பரியம் போற்றுவோம் – vaikasi matha ithal.

பவித்ரா – வைகாசி (அனுசம்) – 05/06/2020

பிரியா – வைகாசி (பூராடம்) – 08/06/2020

நாகரமேஷ் – வைகாசி (பூரம்) – 30/05-2020

செந்தில்குமார் – வைகாசி (பரணி) – 21/05-2020

விஷ்வக் – வைகாசி (மிருகசீரிடம்) – 24/05-2020

சந்தோஷ்  – வைகாசி (அவிட்டம்) – 15/05/2020

பிரேம்குமார் – வைகாசி (உத்திரம்) – 31/05-2020

வடிவேலன் – வைகாசி (ரோகிணி) – 23/05-2020


You may also like...

1 Response

  1. Pavithra says:

    Thanks for remembering my star birthday Neerodai