கொரோனா எச்சரிக்கை – 4

உன்னாலே உன்னாலே!

கொரோனா!
உன்னால்
எங்கள் கோடை
விடுமுறை
கொரோனா
விடுமுறை ஆனது ! – corona kavidhaigal

உன்னாலே
எங்கள் வீட்டு
சமையலறை – சிறு
உணவகமாக மாறியது.
எங்கள் தாய்மார்கள்
முழுநேர சமையல் கலை
நிபுணர் ஆகிவிட்டனர்!
ஆடவர் எல்லாம் ஆய்வக
எலிகளாய் மாறிப்போயினர்.

எங்கள் வீட்டு
அலமாரிகளில்
அழகாய் மாறிப் போயின!

உன்னால்
குழாயடி சண்டைகள்
காணாமல் போயின!
தேநீர் கடை நாற்காலிகள்
கேட்பாரற்றுக் கிடக்கின்றன.

குல்பி வண்டிகளும்
பஞ்சுமிட்டாய்களும்
தொலைந்தே போயின!
வம்பு பேச்சுகளும்,
புரணி சலசலப்புகளும்
மலையேறிப் போய்விட்டன.

போக்குவரத்து நெரிசலும்
பயமூட்டும் கரும்-புகைகளும் உன்னால் பயந்து
அடங்கி விட்டன.

ஆடம்பரங்களை அழித்தாய்,
ஆர்ப்பாட்டங்களை ஒழித்தாய்!
இயற்கை சுவாசம்
வெண்டிலேட்டார்களாயின!

ஆயிரமாயிரம், உதவிக்
கரம் நீட்ட வைத்தாய்!

உன்னால்,
அறிவியல் வளர்ச்சியிலும்
கணினி புரட்சியிலும்
அலைபேசியிலும்
கட்டுண்டு கிடந்த
நாங்கள் அன்பையும், மனிதநேயத்தையும் கற்றுக்கொண்டோம்.

இன்னும் எத்தனை
ஊரடங்கு வந்தாலும்
உள்ளிருந்து உன்னை வெல்வோம்.
சீரிய நெறிகளை
கடைபிடிப்போம்.

corona kavidhaigal

– ஏஞ்சலின்கமலா, தமிழ் ஆசிரியை, மதுரை.


You may also like...

1 Response

  1. Thirumalaikolundu says:

    மிக நன்று