என் மின்மினி (கதை பாகம் – 2)

சென்ற வாரம் இவன் எதுக்கு இப்போ பெயரை கேட்குறான் அப்படினு யோசிச்சுகிட்டே என் பெயர்… – en minmini thodar kadhai-2.

en minmini kathai paagam serial

பப்புனு அப்பா கூப்பிடுவாங்க,
அம்முனு அம்மா கூப்பிடுவாங்க.,
உங்களுக்கு எது புடிச்சிருக்கு அம்முவா இல்ல பப்புவா ?
என்றவாறே லேசாக மூக்கை சுழித்தவாறே நகத்தை கடிக்க ஆரம்பித்தாள் அவள்…

அவள் நகத்தை கடிக்க கடிக்க இவனுள் ஏதோ ஒரு சிலிர்க்க வைக்கும் உணர்வு அவளையே பார்த்துக்கொண்டே இருக்க வைத்தது…

கண்கள் இமைக்க மறந்து பார்வையை அவளிடம் இருந்து விலக்காமல் அவளின் நகம் கடிக்கும் வெண்சிப்பிகள் போன்ற பற்களையும், பன்னீர் பூக்கள் போன்ற மெல்லிய விரல்களையும் நோட்டம் விட்டவாறே தினமும் இரண்டு வேளை பல் தேய்க்கும்
பழக்கம் இருக்கா பப்பு உங்களுக்கு.., அப்படினு சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வியினை கேட்டு அசடு வழிந்தவாறே சிரித்தான்
அவன்…

ஓ… உங்களுக்கு பப்புனு தான் கூப்பிட புடிச்சுருக்குனு சொல்லாம சொல்லிட்டீங்க… சரி உங்க பெயர் என்ன??? என்றாள் பப்பு…

ம்ம் கொஞ்சம் யோசிச்சுகிட்டே இவ பெயர் கேட்டதுக்கு மட்டும் என்னென்னமோ சொல்றா.. நாம மட்டும் ஏன் உடனே சொல்லணும், – en minmini thodar kadhai-2
எதோ சொல்லி வைப்போம் அப்படினு அவள் விட்ட ரீலை இவனும் தொடர்ந்தான்…

அச்சுனு அம்மா கூப்பிடுவா,
அப்புனு அப்பா கூப்பிடுவாங்க
உங்களுக்கு எது புடிச்சுருக்கோ அப்படியே கூப்பிடுங்க என்றவாறே
லேசான நமட்டுச்சிரிப்பு சிரித்தான் அவன்…

ஓ… அப்படியா என்றவாறே அவன் சொல்வதை கேட்டும் கேட்காமலும் சரி சரி., நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு கிளம்புறேன்
என்று டாடா காட்டிவிட்டு ஓடிச்சென்று அவன் பார்வையில் இருந்து மறைந்தாள் பப்பு…

அவள் செல்வதையே பார்த்து கொண்டே ச்சே….. இவ என்ன எப்படி கூப்பிடுவானு சொல்லாமலே போய்ட்டாளே…
ஒருவேளை நாம பொய் சொல்றோம்னு கண்டுபிடிச்சுருப்பாளோ
என்று மனசுக்குள் புலம்பி கொண்டே இவனும் வீட்டுக்கு கிளம்பினான்…

பாகம் 3ல் தொடரும்…..

– அ.மு.பெருமாள், நாகர்கோவில்.

Sharing is caring!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares