வார ராசிபலன் சித்திரை 27 – வைகாசி 03

சார்வரி வருடம் பற்றி வாசிக்க மற்றும் முக்கிய தினங்கள் பற்றி அறிந்துகொள்ள சொடுக்கவும் – rasi palangal may 10 – may 16.

மேஷம் (Aries):

aries mesam


சுக்கிரபகவான் நன்மையே செய்வார். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தி ஆகும், ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் யோகமுண்டு. கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியமாக காணப்படும். பணியாளர்கள் பணி சிறப்படையும். தொழில் வியாபாரம் லாபத்தில் முடியும். கலைஞர்கள் சராசரி வருமானம் பெறுவார்கள். மாணவர்கள் அச்சம் அடைவார்கள். விவசாயம் லாபகரமாக இருக்கும். சனிபகவான் வழிபாடு செய்யவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

சுக்ர பகவன் நன்மையே செய்வார் குடும்பத்தில் குழப்பங்கள் வரலாம் கணவன் மனைவியை விட்டுக் கொடுத்துப் போகவும் வாரத்தின் பின் பகுதி ஆரோக்கியம் நன்றாக இருக்கும் பணியாளர்கள் கவனமாக செயல்படவும் தொழில் வியாபாரம் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை கலைஞர்கள் தேவை பூர்த்தியாகும் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் அடைவார்கள் விவசாயம் லாபம் அதிகரிக்கும் நவகிரக வழிபாடு செய்யவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

சூரியபகவான் நன்மை செய்வார். உடல் ஆரோக்கியமாக காணப்படும். ஆயுள் பலம் சிறப்பாக இருக்கும் தேவைகள் பூர்த்தி ஆகும், பணியாளர்கள் பணி அதிகரிக்கும். தொழில் வியாபாரம் லாப நஷ்டம் என்று இயங்கும். கலைஞர்கள் விரையத்தை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். மாணவர்கள் கவனமாக செயல்படவும். விவசாயம் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம். முருகப் பெருமான் வழிபாடு செய்யவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

சுக்கிர பகவான் நன்மையே செய்வார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். உறவினர் வருகை நன்மை பயக்கும். புதுமானத் தம்பதியர் க்கு குழந்தை பாக்கியம் உண்டாக வாய்ப்புள்ளது. பணியாளர்கள் இரட்டிப்பு வருவாய் பெறுவார்கள். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். கலைஞர்கள் தேவை பூர்த்தியாகும். மாணவர்கள் எதிர்பாராத முன்னேற்றம் காண்பார்கள். விவசாய மதில்மேல் பூனையாக இருக்கும். முருகப் பெருமான் வழிபாடு செய்யவும்.


சிம்மம் (LEO):

leo simmam

சூரிய பகவான் நன்மை செய்வார். உடல் ஆரோக்கியமாக காணப்படும், திருமணம் தடைபட வாய்ப்புண்டு, கணவன் மனைவி உறவு விரிசல் வரலாம், கவனம் தேவை, குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். பணியாளர்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் புதிய மைல் கல்லை எட்டுவார்கள். கலைஞர்கள் புதிய வருவாய் பெறுவார்கள். மாணவர்கள் ஆசிரியர் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது நல்லது. விவசாயம் நடுத்தர வருவாய் கிடைக்கப்பெறும். விநாயகர் வழிபாடு செய்யவும்.


கன்னி (Virgo):

virgo kanni

புதன் பகவான் நன்மை செய்வார். குடும்ப முன்னேற்றப்பாதையில் செல்லும். பணவரவு நன்றாக இருக்கும், அதே சமயம் செலவும் இருக்கும். நண்பர்கள் வசம் நிதானமாக செயல்படவும். பணியாளர்கள் பணியில் புதிய அந்தஸ்து உருவாகும். கலைஞர்கள் எதையும் தாங்கும் வல்லமை கிடைக்கப் பெறுவார்கள். மாணவர்கள் வெற்றி கொடி நாட்டுவார்கள். விவசாயம் லாபத்தை கொடுக்கும். சிவ வழிபாடு செய்யவும்.


துலாம் (Libra):

libra thulam

சனி பகவான் நன்மையே செய்வார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர் வருகையால் நன்மை பயக்க வாய்ப்பில்லை, அண்டை வீட்டார் மத்தியில் நல்லுறவு நிலவும். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரம் லாபத்தில் முடியும். கலைஞர்கள் விரையத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்கள் கவனம் தேவை. விவசாயம் லாபகரமாக இருக்கும். அம்மன் வழிபாடு செய்யவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

குரு பகவான் நன்மை செய்வார். பணவரவு நன்றாக இருக்கும், பகைவர்கள் சரண் அடைவார்கள். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணியாளர்கள் பகைவர்களை வெல்வார்கள். தொழில் வியாபாரம் போட்டியின்றி செயல்படும். கலைஞர்கள் தேவை பூர்த்தியாகும். மாணவர்கள் போட்டியில் வெற்றி பெறுவார்கள். விவசாயம் கால்நடை மூலம் லாபம் கிடைக்கும். தினசரி சூரிய வழிபாடு செய்யவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பணியாளர்கள் பணி கவனமாக செயல்படவும். தொழில் வியாபாரத்தில் முடிய வாய்ப்புள்ளது. கலைஞர்கள் வருவாய் இழப்பை அடைவார்கள். மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். விவசாயம் லாபகரமாக இருக்கும். சிவ வழிபாடு செய்யவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

குரு பகவான் நல்ல ஆற்றலை கொடுப்பார். பண விரயம் ஏற்பட வாய்ப்புள்ளது கவனம் தேவை, உறவினர் வருகை நன்மை பயக்கும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணியாளர்கள் பணி உச்சத்தை அடையும். தொழில் வியாபாரம் லாப-நஷ்டமின்றி நடக்கும். கலைஞர்கள் அதிக பயன் பெறுவார்கள். மாணவர்கள் புதிய அத்தியாயம் படைப்பார்கள். விவசாயம் பயன்தரும் வகையில் அமையும். சிவ வழிபாடு செய்யவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

சூரியபகவான் நன்மை செய்வார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும். சுபநிகழ்ச்சிகள் முடிவுக்கு வரலாம். பணியாளர்கள் பாராட்டு பெறுவார்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். கலைஞர்கள் தேவை பூர்த்தி அடையும். விவசாயத்தில் வழக்கு விவகாரங்கள் முடிவுக்கு வரும். நவகிரக வழிபாடு செய்யவும்.


மீனம் (Pisces):

pisces meenam

குரு பகவான் நன்மை செய்வார். பணவரவு நன்றாக இருக்கும், தேவைகள் பூர்த்தி செய்யப்படும், வீடு கட்டும் யோகம் உண்டு. குடும்பம் லாபகரமாக செயல்படும். பணியாளர்கள் ஏதாவது வகையில் வருமானம் பெறுவார்கள். வியாபாரம் சிறப்பாக இருக்கும். கலைஞர்கள் பல வழிகளில் திரவியம் தேடுவார்கள். விவசாயம் விரயத்தில் முடிய வாய்ப்புள்ளது. முருகப் பெருமான் வழிபாடு செய்யவும் – rasi palangal may 10 – may 16.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...