வார ராசிபலன் பங்குனி 22 – பங்குனி 28
மாசி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal apr-04 to apr-10.
மேஷம் (Aries):
இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். பயணத்தின் போது கவனமாக இருக்கவும். பணவரவு சுமாராக இருக்கும். குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும், அவ்வப்போது குடும்பத்தில் குழப்பங்கள் வரலாம். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் நிதானமாக செயல்படவும். மாணவர்கள் நற்பலன் அடைவார்கள். விவசாயம் விளைச்சல் அதிகரிக்கும்.
பரிகாரம்: சரஸ்வதி வழிபாடு செய்து வரவும்.
ரிஷபம் (Taurus):
இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. புதிய வீடு வாங்கும் யோகம் உள்ளது. எதிரிகள் குறைவார்கள். பணியாளர்கள் செல்வாக்கும் அடைவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் நிம்மதியடைவார்கள். மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண் பெறுவார்கள். விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்கள் மூலம் லாபம் உயரும்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செய்தல் சாலச் சிறந்தது.
மிதுனம் (GEMINI):
இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பழைய பாக்கிகள் வசூல் செய்யப்படும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். முழுவேகத்தில் பிரச்சனை நீங்கும். பணியாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் அடைவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயம் சுமாராகவே இருக்கும்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு செய்து வரவும்.
கடகம் (Cancer):
இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். குடும்பம் தெளிவு அடையும், சிலருக்கு வாகன யோகம் ஏற்படும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். அவ்வப்போது சிறு குழப்பங்கள் வரலாம். பணியாளர்கள் வெற்றி அடைவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல சுமூகமான லாபம் இருக்கும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் பெற்றோரின் பாராட்டுகளை பெறுவார்கள். விவசாயத்தில் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
பரிகாரம்: துர்க்கை அம்மன் வழிபாடு செய்து வரவும்.
சிம்மம் (LEO):
இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். பணவரவு சுமாராக காணப்படும், செலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. வீண் அலைச்சல் வரலாம். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரம் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனத்துக்கு நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்களுக்கு எதிர்ப்புகள் நிறைவேறும். விவசாயத்தில் காய்கறி சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று கோபூஜை செய்து வரவும்.
கன்னி (Virgo):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு சுமாராக காணப்படும். வீண் செலவுகள் அதிகரிக்கும், எதிலும் பொறுமை காக்கவும். வேலை சற்று கூடுதலாக இருக்கும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரம் சிறப்படையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள். விவசாயத்தில் பற்றாக்குறை ஏற்படும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.
துலாம் (Libra):
இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். வீடு மாற்றம் நடைபெறலாம். எதிரிகள் சரண் அடைவார்கள். எதிலும் சற்று கவனமாக செயல்படவும். வியாபாரம் சீராக நடக்கும். கலைஞர்களுக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமையன்று முருகப்பெருமானை வழிபாடு செய்து வரவும்.
விருச்சிகம் (Scorpio):
இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பணவரவு எதிர்பார்ப்பு நிறைவேறும். பூமி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். உடல்நிலை ஆரோக்கியமாக காணப்படும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் ஊழியர் மத்தியில் வெற்றி காண்பார்கள். வியாபாரிகள் புதிய யுக்தியை கையாள்வார்கள். மாணவர்கள் அமைதி காப்பார்கள். விவசாயம் கீரை வகைகள் சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: விசேஷ தினங்களில் அன்னதானம் செய்து வரவும்.
தனுசு (Sagittarius):
இந்த வாரம் ராகுபகவான் நன்மையே செய்வார். உடல்நிலை ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு சராசரி அளவை எட்டும். எதிலும் சற்று கவனமாக செயல்படவும். எதிர்பாராத பிரயாணங்கள் வரலாம். பணியாளர்கள் கவலை அடைவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூல் செய்யப்படும். கலைஞர்கள் அரசாங்க உதவி பெறுவார்கள். மாணவர்கள் நல்ல உயர்வை எதிர்கொள்வார்கள். விவசாயம் செழிப்படையும்.
பரிகாரம்: தினமும் காலை சூரிய பகவான் வழிபாடு செய்து வரவும்.
மகரம் (Capricorn):`
இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். வரவும் செலவும் சமமாக அமையும், உடல் நலத்தில் சற்று கவனம் தேவை, எதிலும் விட்டுக் கொடுத்துப் போகவும், யாரிடமும் ஆலோசனை கேட்க வேண்டாம். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். கலைஞர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் சுமாராக காணப்படுவார்கள். விவசாயம் லாபம் அடையும்.
பரிகாரம்: லட்சுமி வழிபாடு செய்து வரவும்.
கும்பம் (Aquarius):
இந்த வாரம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். எதிலும் நிதானமாக முடிவு எடுக்கவும். சகோதரர் ஆதரவு கிடைக்கும். உடல்நிலை ஆரோக்கியமாக காணப்படும். அண்டை வீட்டார்கள் நட்புடன் இருப்பார்கள். பணியாளர்கள் நல்ல உயர்வை எதிர்கொள்வார்கள். வியாபாரம் லாபம் அடையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் பிரகாசமாக காணப்படுவார்கள். விவசாய தேவை பூர்த்தி செய்யப்படும்.
பரிகாரம்: பைரவர் வழிபாடு செய்து வரவும்.
மீனம் (Pisces):
இந்த வாரம் சூரியபகவான் நன்மையே செய்வார். எதிரிகள் உங்கள் வசம் சரண் அடைவார்கள். வாகன யோகம் ஏற்படும். பிரயாணத்தின் போது மிதவேகம் பின்பற்றவும். உங்கள் சேமிப்பு சற்று உயரும். பணியாளர்கள் உயர்வடைவார்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் அரசாங்க ஆதரவு பெறுவார்கள். மாணவர்கள் ஆசிரியர் மத்தியில் நன்மதிப்பு பெறுவார்கள். விவசாயத்தில் வருமானம் கிடைக்கலாம்.
பரிகாரம்: திங்கட்கிழமை தினத்தில் சிவ வழிபாடு செய்து வரவும் – rasi-palangal apr-04 to apr-10
– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு)