வார ராசிபலன் கார்த்திகை 14 – கார்த்திகை 20

கார்த்திகை மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal nov-29 to dec-05.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் சுக்கிர பகவான் பல நன்மைகளை செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். அவ்வப்போது சிறு குழப்பங்கள் வர வாய்ப்புள்ளது, கணவன் மனைவி உறவுகள் மேம்பாடு அடையும், பணவரவு நன்றாக அமையும். பணியாளர்கள் தலைமை பொறுப்பை ஏற்பார்கள். வியாபாரம் லாபத்தில் முடியும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் வெற்றி காண்பார்கள். விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பரிகாரம்: தினம் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். உடல் ஆரோக்கியமாக காணப்படும். எடுத்த செயல்கள் அனைத்தும் வெற்றி அடையும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வெளிவட்டாரத்தில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கும். பணியாளர்கள் பணியில் சற்று கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். கலைஞர்கள் வெளிவட்டாரத்தில் பகைமை உருவாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல கவனம் செலுத்தவும். விவசாயத்தில் நல்ல லாபம் அடையும்.
பரிகாரம்: திங்கள் வெள்ளி அன்று பெருமாள் வழிபாடு செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் புதன் பகவான் நன்மை செய்வார். வீட்டில் குழந்தை பாக்கியம் அமைய வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சில சமயங்களில் குழப்பங்கள்  உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக செயல்படவும். யாரிடமும் அதிகமாக பேச வேண்டாம். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் செல்வாக்கு உயரும். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயத்தில் புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். 
பரிகாரம்: நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு எதிர்பார்த்த அளவு இருக்கும். உறவினர் வருகை நன்மையில் முடியும். குடும்பத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். குடும்பத்தில் தாய்க்கு உடல் குறைய வாய்ப்புள்ளது. பணியாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். வியாபாரம் பூஜை பொருள் சம்பந்தமான வியாபாரம் நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். மாணவர்கள் நல்ல பாடத்திட்டத்தில் சேர்வார்கள். விவசாயிகள் பாக்கியசாலிகள் திகழ்வார்கள்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் ராகுபகவான் நன்மையே செய்வார். பணவரவு சுமாராக அமையும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிறு உடல்நல பாதிப்புகள் வரலாம். பிறர் உதவியை நாடுவீர்கள். பணியாளர்கள் எழுச்சி அடைவார்கள். வியாபாரம் லாபம் அடையும். கலைஞர்கள் அரசாங்க உதவியை பெறுவார்கள். மாணவர்கள் முழு வெற்றி அடைவார்கள். விவசாயம் நஷ்டத்தையே எதிர்கொள்ளும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு சீராக அமையும். தேவைகள் பூர்த்தி செய்யப்படும், சேமிப்பு உயரும். பணியாளர்கள் பணியில் கவனமாக இருக்கவும். பழைய பாக்கிகள் வசூல் செய்யப்படும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். விவசாயத்தில் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு செய்தல் நன்று.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். உறவினர் வருகை நன்மையில் முடியும். அண்டை வீட்டார் உங்கள் வசம் சரண் அடைவார்கள், பிறர் உதவி பெறுவீர்கள். பணியாளர்கள் மதிப்பு உயரும். வியாபாரம் காய்கறி சம்பந்தமானவை நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் நல்ல உச்சம் அடைவார்கள். மாணவர்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயம் கால்நடை சம்பந்தமானவை நல்ல லாபம் கிடைக்கும். 
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தினத்தில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். குடும்பம் குழப்பமான சூழ்நிலை இருக்கலாம். பணவரவு நன்றாகவே இருக்கும். பயணம் செய்யும் போது கவனமாக செயல்படவும். சகோதர சகோதரிகள் ஆதரவு பெருகும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் தங்கம் வெள்ளி சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்களுக்கு  நஷ்டம் ஏற்படலாம். மாணவர்கள் சுமாராகவே தென்படுவார்கள். விவசாயிகள் வீடு வாங்கும் எண்ணம் கைகூடும். 
பரிகாரம்: திங்கள், வெள்ளி கிழமைகளில் சிவ வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு தேவைக்கேற்ப அமையும். எதிலும் நன்கு நிதானமாக செயல்படவும். செலவுகள் சற்று அதிகமாகவே இருக்கும். பயணம் செய்யும் போது சற்று கவனமாக இருக்கவும். பணியாளர்கள் பணியில் சற்று குழப்பமாகவே இருக்கும். வியாபாரிகள் கவனமாக செயல்படவும். கலைஞர்கள் அதிக ஆதாயம் பெறுவார்கள். மாணவர்கள் தோல்வியை சந்திப்பார்கள். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். 
பரிகாரம்: அனுமன் வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு சீராக இருக்கும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் குழப்பங்கள் இருக்கும், குடும்ப பிரச்சினைகள் விரைவில் தீர்வு காணப்படும். பணியாளர்கள் பணி உயர்வு அடைவார்கள். வியாபாரம் பெண்களை பங்குதாரராக கொண்டது நல்ல லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் நல்ல செல்வாக்கு அடைவார்கள். மாணவர்கள் அதிரடியாக வெற்றி காண்பார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். 
பரிகாரம்: அமாவாசை தினத்தில் கோயில்களில் அன்னதானம் செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். எதிலும் மன உறுதியோடு காணப்படுவீர்கள், சுப நிகழ்ச்சி ஒன்று குடும்பத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது, வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். உடன்பிறப்புகள் ஒரு கருத்து வேறுபாடு உருவாகலாம். பணியாளர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு வருவாய் கிடைக்கும். கலைஞர்கள் பாக்கியசாலிகள் ஆக திகழ்வார்கள். மாணவர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். விவசாயத்தில் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம். 
பரிகாரம்: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் செவ்வாய் பகவான் பல நன்மைகளை செய்வார். பிறர் உதவியை எதிர்பார்க்கலாம், ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும், எப்போதும் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் விசேஷம் ஒன்று நடக்கும். பணியாளர்கள் முக்கிய பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரம் நல்ல முன்னேற்றம் அடையும். கலைஞர்கள் நஷ்டம் எதிர்கொள்வார்கள். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயம் முன்னேற்றப்பாதையில் செல்லும். 
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும் – rasi-palangal nov-29 to dec-05.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

2 Responses

  1. Kavi devika says:

    நன்மையை பயக்கட்டும் அனைவருக்கும்….. நல்ல நேர்மறை எண்ணத்திற்கும், பதிவுக்கும் முத்துசாமி ஐயாவுக்கு வாழ்த்துகள்…

  2. Rajakumari says:

    ராசி பலன்கள் நல்லதே நடக்கின்றது