அதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை

கவிஞர் ம.சக்திவேலாயுதம் (நெருப்பு விழிகள்) அவர்கள் எழுதிய நெல்லை தேவனின் “அதிகாலை வரங்கள்” கவிதைத் தொகுப்பு ஓர் பார்வை – athikalai varangal puthaga vimarsanam

athikalai varangal puthaga vimarsanam

வரங்கள் என்பது இறைவனிடமோ
வயதில் மூத்தவர்கள் இடமோ

நாம் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாய் வாழ வழிவகுக்கும். அதுவும் அதிகாலையில் வரங்கள் கிட்டினால்… அதைவிட வாழ்வில் மகிழ்ச்சி வேறு ஏதும் இல்லை. அப்படிப்பட்ட தொகுப்பாகத்தான், இத்தொகுப்பை நான் பார்க்கிறேன்.

கவிஞர் நெல்லை தேவன்

அழகான மென்மையான கவிதைகளை உள்ளடக்கிய நல்ல கவிதை தொகுப்பு இது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் பிரபல இதழ்களில் வெளியானவையாக உள்ளது இத்தொகுப்பிற்கான இன்னும் ஒரு சிறப்பான செய்தி.

புலவர் க.பிச்சுமணி அவர்களின் வாழ்த்துப்பாவும், என் உரையில் கவிஞர் தேவன் அவர்களின் எது கவிதை,ஏன் கவிதை, என் கவிதை புத்தகத்திற்கான அணிகலன் என்றே சொல்வேன்.

உளிப்பார்வை

“விட்டு விடுதலையாகு” என்ற கவிதையில் தொடங்கி உளிப்பார்வை என்ற கவிதையுடன் புத்தகம் நிறைவடைகிறது.

வாழ்க்கை வசப்படும் என்ற கவிதை அருமையான கருத்துக்களை தாங்கி வந்தாலும் அதன் இறுதி வரிகள் மீண்டும் மீண்டும் அக்கவிதையை வாசிக்கத் தூண்டுகின்றன. இதோ அவ்வரிகள்.

மனிதம் போற்றுவோம்

“வாழ்க்கை
உனக்கு வசப்படும்
நீ வாழ்வியலின்
பக்கங்களை வாசிக்கும்போது”

ஆம் நிச்சயம் வசப்படும்.
மனிதம் போற்றுவோம்
என்ற தலைப்பில் கவிஞர் நெல்லை தேவன் எழுதிய வழிகள்
என்னை மிகவும் ரசிக்க வைத்தது.

“மதங்கள் மனிதனை முறைப்படுத்தவே…
மதங்களை முன்னிறுத்தி மனிதனை பிரித்துவிடாதீர்கள்”

என்ன ஆழமிக்க வரிகள்… எந்த காலகட்டத்திற்கும் பொருந்தும் அற்புதமான வரிகள். மனிதம் போற்றுவோம். தேர்தல் நாள் என்ற கவிதையில் அவர் சொல்லும் உண்மை பலருக்கு சாட்டையடி என்றே சொல்வேன் நான்.

சொந்தம்

“ஐந்து வருடம்
நம்மைச் சுரண்ட
நாம் செய்யும்
ஒரு ஒப்பந்தம்”

உண்மைதானோ என்று யோசிக்கவைக்கும் வரிகள்.
சொந்தம் என்ற தலைப்பில் அவர் எழுதிய வரிகள் சிலருக்கு பொருந்தலாம்.சிலருக்கு பொருந்தாமலும் இருக்கலாம். எனினும் பல அனுபவங்கள் பேசியதாகவே அவ்வரிகளை உணர்கிறேன் – athikalai varangal puthaga vimarsanam.

“வசதி இருக்கும்போது
வந்து
ஒட்டிக்கொள்ளும்.
அதை இழக்கும் போது
நம்மை
வெட்டிக் கொள்ளும்”

ஆம் வசதி வாய்ப்பு இருப்போரிடம்
மனம் ஒட்டிக் கொள்ளவே பிரியப்படுகிறது.
திமு திபி என்ற கவிதையை நகைச்சுவையாய் எழுதியுள்ளார் கவிஞர்.

“கை கட்டி
வாய் பொத்தி
தலை கவிழ்ந்து
மௌனமாய் தலையசைத்து
திருமணத்திற்கு முன்
அவள்
திருமணத்திற்கு பின்
அவன்”

ஆமாம்…ஆமாம்… பலரும் இந்நிலையில்.. இனிய நிலையில்..
இன்றும் என்றும் என்றென்றும்!

காதல் யுத்தம்

காதல் யுத்தம் என்ற கவிதை இன்றைய இளைஞர்களின் மனதை படம் பிடித்துக் காட்டும் கவிதையாக அமைந்துள்ளது.

“நேருக்கு நேர்..‌
மோதிக் கொண்டன விழிகள்…
ஒன்றிடம் ஒன்று..
தோல்வி கண்டன இதயங்கள்…
முடிவில்..
வெற்றி கொண்டனர் இருவரும்”

ஆம் இது காதல் யுத்தம் அல்ல…
இறுதியில் காதல் முத்தத்தால் வெற்றியும் கண்டனர்.

தமிழ் கவிதைகளின் ஸ்வரங்கள்

மேலும் எதற்காக?, வலி, வசந்தம் மலரட்டும், விழி வண்டு, இலக்கியவாதியின் இலக்கணம், என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் இப் தொகுப்பிற்கான பலம். மனிதம் பேசும் கவிதைகள்,

காதல் சொல்லும் கவிதைகள், இயற்கையை ரசிக்கும் கவிதைகள் இத்தொகுப்பில் நிரம்ப உள்ளன.

இவ்வாறு இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் அனைத்தும் வாசிப்பவரின் மனதை கொள்ளையடித்துப்போகும் எளிய அழகான சொற்களால் எழுதப்பட்டுள்ளன. நம் வாழ்வோடு ஒன்றிப்போன பல செயல்களை கவிதைகளாக படைத்துள்ள கவிஞர் நெல்லை தேவன் அவர்கள் இன்னும் இன்னும் இதே போன்ற பல நல்ல தொகுப்புகளை தர வேண்டும்… புகழ் பெற வேண்டும். அதிகாலை வரங்கள் எளிய தமிழ் கவிதைகளின் ஸ்வரங்கள் – athikalai varangal puthaga vimarsanam

– ம.சக்திவேலாயுதம், நெருப்பு விழிகள்

You may also like...

5 Responses

  1. Priyaprabhu says:

    நல்லதொரு விமர்சனம்.. வாழ்த்துகள் சக்தி.. 💐💐

  2. Kavi devika says:

    அருமையான விமர்சனம்… வாழ்த்துகள்… தொடரட்டும் நீரோடையின் ஓட்டம்….நலமாக.. வளமாக…

  3. Nachiyar says:

    அருமையான விமர்சனம்…படிக்க தூண்டூம் ஆவல்..

  4. Rajakumari says:

    கவிதை நன்றாக இருக்கிறது

  5. தி.வள்ளி says:

    விமர்சனம் அருமை. மென்மையான கவிதை வரிகளை மேற்கோள் காட்டியது இன்னும் அழகு ..கவிதை ஆசிரியருக்கும் ..விமர்சன ஆசிரியருக்கும்.. வாழ்த்துக்கள்.