வார ராசிபலன் சித்திரை 26 – வைகாசி 01
சித்திரை மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal may-09 to may-15.
மேஷம் (Aries):
இந்த வாரம் சுக்கிர பகவான் பல நன்மைகளை செய்வார். பொருளாதாரம் மேம்பாடு அடையும். எதிலும் நிதானமாக செயல்படவும். எதிர்பார்ப்புகள் தாமதமாகலாம். வீண் அலைச்சல் வரலாம். பணியாளர்கள் கூடுதல் பணி செய்ய வேண்டி இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்காது. கலைஞர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். மாணவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். விவசாயத்தில் போதிய வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.
ரிஷபம் (Taurus):
இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார் சுப செலவுகள் அதிகரிக்கும். காரிய வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே சுமூகமான உறவு காணப்படும். பணியாளர்கள் பணியில் கவனமாக செயல்படவும். வியாபாரம் வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். கலைஞர்கள் ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். மாணவர்கள் தெளிவாக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: அனுமன் வழிபாடு செய்து வருதல் சாலச்சிறந்தது.
மிதுனம் (GEMINI):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். உங்களுக்கு சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். அடுத்தவர் பற்றிய பேச்சை பேச வேண்டாம். வெளியூர் பயணம்நல்ல பயன் கிடைக்கும். மனைவியின் உடல் நலம் சற்று பாதிக்கப்படலாம். பணியாளர்கள் மன உளைச்சல் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் கவனமாக செயல்படவும். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.
கடகம் (Cancer):
இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். மக்கள் மத்தியில் வீண் குற்றச்சாட்டுகள் எழலாம். உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இரவு நேரங்களில் தூக்கமின்மையால் சிரமப்படுவீர்கள். பணியாளர்கள் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும்.-வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நிதானமாக செயல்படவும். கலைஞர்கள் லாபம் எதிர்பார்க்கலாம். மாணவர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். விவசாயம் நஷ்டமே அடையும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.
சிம்மம் (LEO):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். வீட்டில் சுப செலவுகள் அதிகரிக்கும். புதிய பழக்க வழக்கங்கள் உருவாகும். வீண் பிரச்சனைகள் வரலாம். பணவரவு சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணி மாறுதல் அடைவார்கள். வியாபாரத்தில் தேக்க நிலை காணப்படும். கலைஞர்கள் அரசாங்க ஆதரவு பெறுவார்கள். மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வரவும். விவசாயத்தில் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று தேவி வழிபாடு செய்து வரவும்.
கன்னி (Virgo):
இந்தவாரம் கேதுபகவான் நன்மையே செய்வார். உங்கள் உரிமைகளை பாதுகாக்க அதிக கவனம் செலுத்தவும். வீண் கவலை சற்று விலகும். செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது. குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் சுமாரான லாபமே கிடைக்கும். கலைஞர்கள் பாக்கியவான்கள் ஆக திகழ்வார்கள். மாணவர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.
துலாம் (Libra):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். எடுத்த காரியம் எளிதாக முடியும். கடன் தொல்லைகள் ஏதும் இருக்காது. குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்பு வரும். கலைஞர்கள் மோசமான சூழ்நிலையை அடைவார்கள். மாணவர்கள் வெற்றியைக் காண்பார்கள். விவசாயிகள் சுமாரான லாபம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: மாரியம்மன் வழிபாடு செய்து வரவும்.
விருச்சிகம் (Scorpio):
இந்த வாரம் ராகுபகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். வீடு இடமாற்றம் பெற வாய்ப்புகள் உள்ளன. உடல் நல பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது. பயணங்கள் வெற்றியடையும். பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் கூட்டணி பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் கூடுதல் ஆர்வம் பெறுவார்கள். விவசாயத்தில் நஷ்டம் அடையும்.
பரிகாரம்: விசேஷ காலத்தில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வரவும்.
தனுசு (Sagittarius):
இந்த வாரம் சூரியபகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். உங்கள் மனதில் வீண் குழப்பங்கள் உருவாகும். திடீர் செலவுகள் வர வாய்ப்பு உள்ளது. நீங்கள் விரும்பியது கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் கவனமாக பேசி வரவும். வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். கலைஞர்கள் மத்தியில் சலசலப்பு உருவாகும். மாணவர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். விவசாயத்தில் குடும்ப தேவைகளை பூர்த்தி அடையும்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செய்து வரவும்.
மகரம் (Capricorn):`
இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். நீடித்த ஆயுள் உங்களுக்கு கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டை பெறுவீர்கள். கூடுதல் அறைகள் பெறுவீர்கள்.-வரவும் செலவும் சமமாக அமையும். பணியாளர்கள் பணி நன்கு சிறப்படையும். வியாபாரம் நன்கு வேகம் பிடிக்கும். கலைஞர்கள் உற்சாகமாக காணப்படுவார்கள். மாணவர்கள் 100 சதம் வெற்றி அடைவார்கள். விவசாய தொழில் போட்டி மனப்பான்மை உருவாகும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.
கும்பம் (Aquarius):
இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். எதிர்ப்புகள் விலகும். மக்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய வாக்குறுதி ஏதும் கொடுக்க வேண்டாம். பணியாளர்கள் சக ஊழியர்களின் மத்தியில் சலசலப்பை பெறுவார்கள். வியாபாரிகள் மனநிறைவு அடைவார்கள். கலைஞர்கள் வெற்றி காண்பார்கள்.-மாணவர்கள் சாந்தமாக தென்படுவார்கள். விவசாயிகள் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.
மீனம் (Pisces):
இந்த வாரம் ராகுபகவான் நன்மையே செய்வார். உடல்நலம் ஆரோக்கியமாக காணப்படும். நன்கு தெளிவு கிடைக்கும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடின உழைப்பு தேவைப்படும். பணியாளர்கள் நல்ல பாராட்டுகளை பெறுவார்கள். வியாபாரம் நன்கு சிறப்படையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் சிறந்த முன்னேற்றம் அடைவார்கள். விவசாயத்தை எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பரிகாரம்: விசேஷ காலங்களில் குலதெய்வ வழிபாடு செய்து வருவது நன்மை பயக்கும் – rasi-palangal may-09 to may-15
– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு)