வார ராசிபலன் கார்த்திகை 07 – கார்த்திகை 13

கார்த்திகை மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal nov-22 to nov-28.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். வீட்டில் மகிழ்ச்சி நிலவும், குடும்ப நபர்கள் தொலைதூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. சகோதர வழியில் கருத்து வேறுபாடு வரலாம் எதிலும் நிதானமாக செயல்படவும். பணியாளர்கள் திறமைசாலிகளாக திகழ்வார்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர் மத்தியில் பொறுமையாக செயல்படவும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் மனதில் தடுமாற்றம் இருக்கலாம்.  விவசாயத்தில்  நஷ்டம் அடையலாம்.
வழிபாடு: செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். எந்த செயலிலும் நிதானமாக செயல்படவும். இந்தவாரம் புதிய நபர் ஒருவர் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் வீண் கவலை வேண்டாம். பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூல் செய்யப்படும். கலைஞர்கள் சுமாரான வெற்றியை அடைவார்கள். மாணவர்கள் நல்ல வெற்றி காண்பார்கள். விவசாயத்தில் லாபம் அதிகரிக்கும்.
வழிபாடு: நரசிம்மர் வழிபாடு செய்தல் நன்று.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவீர்கள். வீண் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளன, எதிலும் எச்சரிக்கையாக செயல்படவும். அண்டை வீட்டார் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவும். பணியாளர்கள் நல்ல வெற்றி காண்பார்கள். வியாபாரத்தில் சுமாரான லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் இரட்டிப்பு வருவாய் ஈட்டுவார்கள். மாணவர்கள் நல்ல வெற்றி அடைவார்கள். விவசாயிகள் காய்கறி சம்பந்தமானவை நல்ல லாபம் கிடைக்கும்.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு தேவைக்கேற்ப இருக்கும், நீண்ட நாளைய இழுபறி நிலை மாறும். எண்ணெய் பலகார வகைகள்  சாப்பிட வேண்டாம், உடல்நலம் சீராகவே அமையும். பணியாளர்கள் நல்ல திறமையை வெளிப்படுத்துவார்கள். வியாபாரம்  பூஜை பொருள் சம்பந்தமானவை நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள்ம் விவசாயம் நல்ல உச்சமடையும்.
வழிபாடு: லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் ராகு பகவான் பல நன்மைகளை செய்வார், ஏதாவது வகையில் பணவரவு இருக்கும். பொது விஷயங்களை பேசி மகிழ்வீர்கள். உறவினர் வகையில் உதவி எதிர்பார்க்கலாம். தம்பதியர் இடையே இணக்கமான சூழல் இருக்கும். பணியாளர்கள் சிரமப்பட்டே முன்னேற்றம் அடையலாம். வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். கலைஞர்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் நடுத்தர வெற்றியை அடைவார்கள். விவசாயத்தில் நல்ல கவனம் செலுத்தவும்.
வழிபாடு: செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பெரிய மனிதரின் சந்தித்து நன்மை நிகழ வாய்ப்பு உள்ளது. குடும்பம் அமைதியாக காணப்படும், சில சமயங்களில்  மறதி ஏற்படும், உறவினர் வகையில் நஷ்டம் அடைய வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் வெற்றியை அடைவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் குடும்பத்தில் அமைதி காக்க வேண்டும். விவசாயத்தில் குடும்ப தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
வழிபாடு: குலதெய்வ வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். இந்த வாரம் வேலைப் பளு சற்று கூடுதலாகவே இருக்கும், எதிலும் எச்சரிக்கையாக செயல்படவும். உடன்பிறப்பு வகையில் சங்கடங்கள் உருவாகலாம், சில சமயங்களில் பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள். பணியாளர்கள் பெரிய பொறுப்பை சுமக்க நேரிடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம். கலைஞர்கள் நல்ல செல்வாக்கை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் 100 சதம் வெற்றி பெறுவார்கள். விவசாயிகள் சொத்து விவகாரங்களை சந்திக்க நேரிடும்.
வழிபாடு: செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் சூரியபகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் சேமிப்பு உயரும். உறவினர்கள் நல்ல உதவி செய்வார்கள். பணியாளர்கள் பொறுமை காக்க வேண்டும். வியாபாரிகள் பகைவர்களை எதிர்கொள்வார்கள. கலைஞர்கள் நஷ்டம் அடைய வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் தோல்வியை சந்திப்பார்கள். விவசாயத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
வழிபாடு: நரசிம்மர்  வழிபாடு செய்யவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணம் வரவு தேவையை பூர்த்தி செய்யும். உடல் நலத்தில் சற்று கவனம் தேவை. எதிர்பார்ப்புகள் நிறைவேறும், செலவுகள் உயர வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் அதிகாரிகள் மத்தியில் கருத்து வேறுபாடு காணப்படும். வியாபாரம் சுமாரான லாபமே   கிடைக்கும். கலைஞர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க வாய்ப்புகள் உள்ளன. விவசாயம் கால்நடை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
வழிபாடு: திங்கட்கிழமை தினத்தில் சிவ வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். எதிலும் நல்ல வெற்றி கிடைக்கும். செலவுகள் சற்று உயரம், வாகனத்தில் செல்லும்போது மிதவேகம் பின்பற்றவும். பணியாளர்கள் சில சவால்களை சந்திக்க நேரிடும். வியாபாரம் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் நன்மையை அடைவார்கள். மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தை பெறுவார்கள். விவசாயம் சுமாரான லாபமே கிடைக்கும்.
வழிபாடு: நவகிரக வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். எப்போதும் ஓய்வு இல்லாமல் உழைப்பீர்கள். எந்த செயலையும் இருக்குமிடத்தில் சாதிப்பீர்கள். உடன்பிறப்பு வகையில் பகை உருவாகலாம். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் புதிய யுக்தியின் மூலம் லாபம் உயரும். கலைஞர்கள் நல்ல பாக்கியசாலியாக திகழ்வார்கள். மாணவர்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயம் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும்.
வழிபாடு: ஞாயிற்றுக்கிழமை தினத்தில் பைரவர் வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் ராகு பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்கு அமையும். குடும்பத்தில் நல்ல ஆதரவு பெருகும். எதிர்பாராத பயணம் ஒன்று நடக்கும், தன் வாழ்க்கையில் யாரையும் அதிகம் நம்ப வேண்டாம். பணியாளர்கள் மக்கள் மத்தியில் நற்பெயர் எடுப்பார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள்   நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் மிகவும் சிரமம் அடைவார்கள். விவசாயிகள் புதிய வீடு வாங்குவார்கள்.
வழிபாடு: கிருஷ்ணன் வழிபாடு செய்து வரவும் – rasi-palangal nov-22 to nov-28.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    ராசி பலன்களும் தொழவேண்டிய தெய்வங்களையும் பற்றிய குறிப்பு தந்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி…