சார்வரி வருடம் (2020 – 2021) விளக்கம்

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது. அந்த அறுபத்தில் முப்பத்தி நான்காவதாக (34) வருவது சார்வரி வருடம். ஒவ்வொரு தமிழ் வருடத்தின் பெயருக்கும் ஒரு பொருள் உண்டு. பிரபவ என்பதற்கு நற்றோன்றல் என்றும், விபவ என்பதற்கு உயர்தோன்றல் என்றும், கடைசீ வருடமாக அட்சய வருடத்திற்கு வளங்கலன் என்றும் பொருள் உண்டு. தமிழ் ஆண்டுகள் பிரபவ என்ற ஆண்டில் தொடங்கி அட்சய என்ற ஆண்டில் முடியும், ஒவ்வொரு அறுவது ஆண்டு சுழற்சி அதாவது வட்டம் முடிந்தவுடன் மீண்டும் பிரபவ ஆண்டில் தொடரும்.

saarvari varudam

சார்வரி (சாருவரி) வருடம்

சார்வரி என்றால் வீறியெழல் என்று பொருள். சார்வரி வருடம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி பிறக்கிறது. பஞ்சாங்கப்படி ஏப்ரல் 13 இரவு 7:20 க்கு மூலம் நட்சத்திரம் நான்காம் பாதம், கும்ப லக்கனத்தில் பிறக்கிறது. இடைக்காடரின் சார்வரி ஆண்டு வெண்பா பாடல் இதோ,

சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள், மாரியில்லை
பூமி விளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமின்றிச் சாவார் இயம்பு.

ஆற்காடு பஞ்சாங்கப்படி இந்த ஆண்டில் மக்கள் நோயால் அவதிப்படுவர். மழைப்பொழிவு குறைவாக இருக்கும், இருப்பினும் மேகாதிபதி சந்திரன் குரு வீட்டில் நட்பு கிரகமாக இருப்பதால் மழை பொழியும் என்றும் குறிப்பு உண்டு.
புதிய வைரஸ் கிருமிகளால் மக்கள் மற்றும் கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

  1. அயல் நாட்டில் புழுதிக்காற்று வீசும்,
  2. டெங்கு பாதிப்பு கடுமையாக இருக்கும்,
  3. கோவில் அர்ச்சகர்கள் கடுமையாக பாதிப்பு அடைவார்கள்,
    போன்றவற்றிலிருந்து விடுபட மிகவும் கவனமாக இருக்கவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
    இதுதவிர மேலும், சில இடங்களில் பட்டினிச்சாவு ஏற்படும். விளைச்சல் சீராக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

சூரிய கிரகணம்

சார்வரி வருடம், ஆனி மாதம் 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 21.06.2020, அமாவாசை திதி, மிருகசீரிடம் நட்சத்திரம், மிதுனராசியில், கன்னி லக்னத்தில் காலை மணி 10.22 மணிக்கு சூரியனை வடமேற்கு திசையில் ராகு பிடிக்க ஆரம்பித்து, நண்பகல் 12.02 மணிக்கு அதிகமாகி மதியம் மணி 1.42 மணிக்கு, கிழக்குத் திக்கில் விடுகிறது.
பரிகாரம்: ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சிவாலயங்களுக்குச் சென்று பைரவரை விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

சுருக்கமான ஆண்டு பலன்கள்

இந்த ஆண்டு மக்களிடம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உறவுகளிடம் அன்பும் அனுசரணையும் அதிகரிக்கும்.
இந்த ஆண்டு ஆன்மிகம் வளர்ச்சி அடையும். கல்வியில் வளர்ச்சி கிடைக்கும், சாதனை படைக்கும்.
இந்த ஆண்டின் ராஜாவாக புதன் பகவான் வருவதால் மழைப்பொழிவை அதிகரிப்பார். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும், கலைஞர்களுக்கு சிறப்பான வருடம். விலைவாசி குறைய அதிக வாய்ப்புள்ளது.

வருட பலன்களை வாசிக்க

You may also like...