வார ராசிபலன் பங்குனி 23 – பங்குனி 29

தொற்றுக் கிருமிகளின் ஆக்கிரமிப்பு படிப்படியாக குறையும். வீட்டின் முன் வேப்பிலை சார்த்தவும், மஞ்சள் நீரை தெளிக்கவும். மாலை நேரங்களில் விளக்கு ஏற்றவும். இறை வழிபாடு பல அதிசயங்கள் நிகழ்த்தும், தீமை விலகும் – rasi palangal april 05 – april 11 .

aries mesam


மேஷம் (Aries):

சுக்கிர பகவான் நன்மையே செய்வார். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும், கணவன் மனைவி உறவு மேம்படும், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவும். பணியாளர்கள் பணி சிறப்படையும். தொழில் வியாபாரம் லாபத்தில் முடியும். கலைஞர்களின் தேவை பூர்த்தியாகும். மாணவர்கள் சிறு இடையூறுகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். விவசாயம் செழிப்படையும். சந்திர பகவானை வழிபடவும் – rasi palangal april 05 – april 11.


taurus rishabam

ரிஷபம் (Taurus):

குரு மற்றும் செவ்வாய் பகவான்கள் நன்மையே செய்வார்கள். புதிய சொத்து வாங்க நேரம் கைகூடி வரும். கணவன் மனைவி இடையே சிறு சங்கடங்கள் உருவாகும் கவனம் தேவை. பணியாளர்கள் பணி சிரமத்தில் இருக்கும். தொழில் வியாபாரம் காய்கறி தொடர்பான சிறப்பாக இருக்கும். கலைஞர்கள் பணி மந்தமாக இருக்கும். மாணவர்கள் வெற்றி அடைவார்கள். விவசாயம் லாபகரமாக இருக்கும். தினமும் காலையில் சூரிய வழிபாடு செய்யவும்.


gemini mithunam

மிதுனம் (GEMINI):

புதன் பகவான் நன்மையே செய்வார். அண்டை வீட்டார் பிரச்சனை இருக்காது. குடும்பம் அமைதியாக காணப்படும். பணியாளர்கள் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். தொழில் வியாபாரம் நடுத்தரமாக இருக்கும். கலைஞர்கள் அரசாங்கத்தின் பாராட்டுகளை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல வெற்றி அடைவார்கள். விவசாயம் விரயத்தில் முடியும். முருகப் பெருமான் வழிபாடு செய்யவும்.


cancer kadakam

கடகம் (Cancer):

சந்திரபகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஒளிமயமாக இருக்கும், வீட்டில் ஒற்றுமை நிலவும். பணியாளர்கள் பணி திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரம் கவனமாக இருக்கவும். கலைஞர்கள் தேவையான வரவிருக்கும். மாணவர்கள் நல்ல பாக்கியத்தைப் பெறுவார்கள். விவசாயம் லாபத்தில் முடியும். நவகிரக வழிபாடு செய்யவும் .


leo simmam

சிம்மம் (LEO):

சுக்கிர பகவான் நன்மையே செய்வார். வருவாய் மந்தமாக இருக்கும், உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணியாளர்கள் வெற்றியை குவிப்பார்கள். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். கலைஞர்கள் குறைந்த வருவாய் தருவார்கள். மாணவர்கள் கடின உழைப்பை பின்பற்ற வேண்டும். விவசாயம் கால்நடை மூலம் வருவாய் கிடைக்கும். சிவ வழிபாடு செய்யவும்.


virgo kanni

கன்னி (Virgo):

குருபகவான் நன்மையே செய்வார். வரவு செலவு மந்தமாக இருக்கும், மற்றவர்களிடம் விவாதத்தை தவிர்த்துக்கொள்வது நல்லது. வீட்டின் முன் தூய்மையாக வைத்துக் கொள்ளவும். கலைஞர்கள் பரிசுப் பொருட்களைத் பெறுவார்கள். மாணவர்கள் எளிதாக தேர்ச்சி பெறுவார்கள். விவசாயம் சராசரி வருமானம் கிடைக்கும். சந்திர பகவான் வழிபாடு செய்யவும்.


libra thulam

துலாம் (Libra):

பணவரவு நன்றாக இருக்கும், பிள்ளைகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். பணியாளர்கள் தலைமை பொறுப்பை ஏற்பார்கள். தொழில் வியாபாரம் நஷ்டத்தில் முடிய வாய்ப்புள்ளது. கலைஞர்கள் நஷ்டத்தை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். மாணவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். விவசாயம் கீரை வகைகள் மூலம் லாபம் ஈட்டித்தரும். விநாயகர் வழிபாடு செய்யவும் – rasi palangal april 05 – april 11


scorpio viruchukam

விருச்சிகம் (Scorpio):

புதன் பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். சத்தமாகவும் அமைதியாகவும் செயல்படவும். பணியாளர்கள் அதிக வேலைப்பளுவை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் லாபம் நஷ்டம் இன்றி இயங்கும். கலைஞர்கள் வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் நல்ல வெற்றி பெறுவார்கள். விவசாயம் நன்மை தரும். அம்மன் வழிபாடு செய்யவும்.


sagittarius thanusu

தனுசு (Sagittarius):

செவ்வாய் மற்றும் குரு பகவான்கள் நன்மை செய்வார்கள். உறவினர்கள் வசம் கண்டிப்புடன் செயல்படவும். வரவுக்கேற்ற செலவு இருக்கும். பணியாளர்கள் பணி சிறப்படையும். தொழில் வியாபாரம் லாபத்தில் இயங்கும். கலைஞர்கள் நஷ்டத்தை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் விழிப்புடன் செயல்படவும். விவசாயம் லாபத்தை எதிர்கொள்ளும். நவகிரக வழிபாடு செய்யவும்.


capricorn magaram

மகரம் (Capricorn):`

இந்த வாரம் பெரும்பான்மையான கிரகங்கள் சாதகமாக இருப்பதால் நன்மை அதிகரிக்கும், கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும், பணவரவு சுமாராகவே இருக்கும். பணியாளர்கள் பணி சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் சராசரி வருமானம் பெறலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற லாம். மாணவர்கள் வெற்றியை குவிப்பார்கள். விவசாயம் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. குலதெய்வ வழிபாடு சிறப்பு தரும்.


aquarius kumbam

கும்பம் (Aquarius):

புதன் பகவான் நன்மையே செய்வார். தேவையான அளவு பணவரவு இருக்கும், நன்மை தீமை கலந்த வாரமாகும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணியாளர்கள் பணி கடின உழைப்பு தேவை. தொழில் வியாபாரம் லாபகரமாக இருக்கும். கலைஞர்கள் பாராட்டைப் பெறுவார்கள். மாணவர்கள் முழு வெற்றி அடைவார்கள். விவசாயம் விரயத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்.


pisces meenam

மீனம் (Pisces):

இந்த வாரம் பெரும்பான்மையான கிரகங்கள் நன்மை செய்ய உள்ளனர், தேவையான பண வரவு இருக்கும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணியாளர்கள் கூடுதல் பொறுப்பு ஏற்பார்கள். தொழில் வியாபாரம் மந்த நிலையில் இருக்கும். கலைஞர்கள் தேவையான வரவு கிடைக்கும். மாணவர்களுக்கு சராசரி வாரமாக இருக்கும். விவசாயம் மொழி லாபம் கிடைக்கும். தினமும் காலை சூரிய வழிபாடு செய்யவும்.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

rasi palangal april 05 – april 11

சென்ற வார பலன்

வார ராசி பலன்கள் தொகுப்பு

You may also like...