வார ராசிபலன் தை 11 – தை 17
தை மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal jan-24 to jan-30.
மேஷம் (Aries):
இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். தெரியாத நபர்களிடம் கவனமாக இருக்கவும். உடன்பிறப்புக்கு உதவி செய்ய வேண்டிய நிலை உருவாகும். பணியாளர்கள் பணியில் வெற்றி அடைவார்கள். வியாபாரம் சிறப்பாக நடக்கும். கலைஞர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்கள் வெற்றியை அடைவார்கள். விவசாயம் லாபகரமாக இருக்கும்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு செய்து வரவும்.
ரிஷபம் (Taurus):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பொது காரியங்களில் ஈடுபட வாய்ப்பு அமையும். நிதி நிலை சீராக இருக்கும். பிரயாணத்திற்கு வாய்ப்புகள் உள்ளன. சுப நிகழ்ச்சி ஒன்று முடிவாகும். பணியாளர்கள் சக ஊழியர் மத்தியில் செல்வாக்கு அடைவார்கள். புதிய வகை வியாபாரத்தின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். கலைஞர் வாழ்வு திண்டாட்டத்தில் முடியும். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி அடைவார்கள். விவசாயம் நஷ்டத்தை எதிர்கொள்ளும்.
பரிகாரம்: சூரிய வழிபாடு செய்து வரவும்.
மிதுனம் (GEMINI):
இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். குடும்பத் தேவைகள் பூர்த்தி அடையும். பிரயாணத்தில் மிதவேகம் பின்பற்றவும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். கணவன் மனைவி உறவுகள் மேம்படும். பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள். வியாபாரத்தில் கடன் கொடுக்க வேண்டாம். கலைஞர்கள் உற்சாகமாக காணப்படுவார்கள். மாணவர்கள் சற்று பயத்துடன் இருப்பார்கள். விவசாயத்தில் அதிக லாபம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு செய்து வரவும்.
கடகம் (Cancer):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். ஒரு சிலருக்கு வாகன யோகம் உண்டு. கூட்டு முயற்சிக்கு நல்ல வெற்றி கிடைக்கும். சுப செலவுகள் உருவாகலாம். பணியாளர்கள் உச்சம் அடைவார்கள். வியாபாரத்தில் போதிய வருவாய் கிடைக்கும். கலைஞர்கள் கவனமாக செயல்படவும். மாணவர்கள் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: தைப்பூச தினத்தில் அன்னதானம் வழங்கவும்.
சிம்மம் (LEO):
இந்த வாரம் சுக்ரபகவான் நன்மையே செய்வார். ஆடம்பர தேவைகள் நிறைவேறும். பணவரவு சுமாராக அமையும். வாகனச் செலவுகள் வர வாய்ப்புள்ளது. பயணத்தின் போது கவனம் தேவை. பணியாளர்கள் நன்மை அடைவார்கள். வியாபாரத்தில் ஏதாவது வகையில் நல்ல ஆதாயம் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயிகள் பாக்கியசாலிகள் ஆக தென்படுவார்கள்.
பரிகாரம்: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.
கன்னி (Virgo):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். ஒரு சிலருக்கு வாகன யோகம் ஏற்படும். உடல் நலத்தில் சற்று கவனம் தேவை. பூர்வீகத்தில் நல்ல ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் சற்று கவனமாக செயல்படவும். வியாபாரம் சுமாராகவே காணப்படும். கலைஞர்கள் அரசாங்க ஆதரவு பெறுவார்கள். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயத்தில் நஷ்டமே ஏற்படும்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செய்து வரவும்.
துலாம் (Libra):
இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். குடும்பம் மகிழ்ச்சிகரமாக காணப்படும். பணியாளர்கள் உயர்வை அடைவார்கள். வியாபாரத்தில் நல்ல ஆதாயம் கிடைக்கும். கலைஞர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி அடைவார்கள். விவசாயம் குடும்பத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
பரிகாரம்: மாலை நேரத்தில் கந்தபுராணம் படித்து வரவும்.
விருச்சிகம் (Scorpio):
இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். மனதில் நல்ல தைரியம் காணப்படும். பிரயாணத்தை சற்று குறைக்கவும். உடல் நலத்தில் அக்கறை காட்டவும். பணியாளர்கள் வெற்றியை அடைவார்கள். வியாபாரம் பொருள் சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் புது புது ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் எதிலும் வெற்றி அடைவார்கள். விவசாயத்தில் பங்காளி பிரச்சனைகள் வரலாம் கவனம் தேவை.
பரிகாரம்: சரஸ்வதி வழிபாடு செய்து வரவும்.
தனுசு (Sagittarius):
இந்தவாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு சீராக அமையும். சிறு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எதிலும் வெற்றியைக் காண்பார்கள். புதிய வாகன யோகம் அமைய வாய்ப்புள்ளது. பணியாளர்கள் புதிய பொறுப்பை ஏற்பார்கள். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை. கலைஞர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். மாணவர்கள் நன்மை அடைவார்கள். விவசாயம் குடும்ப தேவைகள் பூர்த்தியடையும்.
பரிகாரம்: துளசி செடியை வணங்கி வரவும்.
மகரம் (Capricorn):`
இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் நிலவும். பண வரவு சீராகவே அமையும். செலவுகள் சற்று அதிகமாக காணப்படும். வாகனத்தின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் சற்று சிரமப்படுவார்கள். வியாபாரிகள் கவனமாக செயல்படவும். கலைஞர்கள் வருமான இழப்பை சந்திப்பார்கள். மாணவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: விருப்பப்பட்ட புண்ணிய தலத்தில் அன்னதானம் செய்து வரவும்.
கும்பம் (Aquarius):
இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். வாகன யோகம் உண்டு. ஒரு சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உருவாகும். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரம் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல ஆதாயம் கிடைக்கும். கலைஞர்கள் அதிக வருவாய் பெறுவார்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவார்கள். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் பைரவர் வழிபாடு செய்து வரவும்.
மீனம் (Pisces):
இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். சேமிப்பு சற்று உயரும், உடன் பிறப்பால் நன்மை ஏற்படும். வாகன ஆதாயம் கிடைக்கலாம். பணியாளர்கள் தலைமை பொறுப்பை ஏற்பார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள். விவசாயத்தில் நன்மையே கிடைக்கும்.
பரிகாரம்: லட்சுமி வழிபாடு செய்தல் சாலச் சிறந்தது – rasi-palangal jan-24 to jan-30.
– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு)
ராசி பலன்கள் எப்போதும் போல இந்த வாரமும் நல்லதே நடக்கட்டும்