மின்னிதழ் ஏப்ரல் 2023

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவு அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நீரோடையின் அன்பும் நன்றியும் – maatha ithazh april 2023

சென்ற மாத கவிதை போட்டி முடிவுகள்

வெற்றியாளர்:  தமிழ்செல்வி  

வெற்றியாளர் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் முகவரியை அனுப்பவும்.

நீரோடை மாத மின்னிதழ்

சொந்த வீட்டில் விருந்தாளி - நீரோடை மகேஸ்

பேருக்கு கல்யாணம் பண்ணி பெருமைக்கு புள்ள பெத்துகிட்ட கதையாபோச்சு நம்ம கண்ணனோட வாழ்க்கை. முதலில் திருமண வாழ்க்கை தான் பிடிக்காமல் இருந்தது. நாட்கள் செல்ல செல்ல வாழவே பிடிக்காமல் போனது.. நான்கு வயது குழந்தைக்காகவும், வயதான தன் அப்பாவுக்காகவும் தான் வாழ்ந்து வந்தான்.

சமூக சேவையில் முதலில் கிடைத்த மன நிம்மதி பிறகு குறைந்தது, காரணம் தவறான மனிதர்களுக்காக சேவை செய்து ஏமாந்து போனது தான்.
சம்பாதித்த காசையெல்லாம் சொத்தாகவும், வருங்கால வைப்பாகவும் வைத்திருந்த கண்ணனுக்கு உடல்நிலையில் மாற்றம் வரத்தொடங்கியது.
தீராத வயிற்று வலியால் முதலில் உணவில் நாட்டம் குறைந்தது. உடல் பதினைந்து கிலோவிற்கும் மேல் இழைத்துப்போனான். உடல் மெல்ல மெல்ல மெலிந்து போனதால் யாருக்கும் அது ஒரு பெரிய பிரச்சனையாக தெரியவில்லை. தன் வலிகளை யாரிடமும் காட்டிக்கொள்ளாமல் சமாளித்து வந்தான். மனைவி கொஞ்சம் பிடிவாதக்காரி தான், அவள் அம்மாவின் பேச்சைக்கேட்டு ஆடுபவள். அவள் அம்மாவை சந்திக்காமல் இருந்தால், போனில் பேசாமல் இருந்தால் இங்கு ஒரு பிரச்சனையும் வராது.

தன் கடைசி நாட்கள் இது தான் என்று உணர்ந்த கண்ணன், தன் அம்மா, அப்பா, மனைவி, குழந்தை என யாரிடமும் நெருக்கம் காட்டாமல் சொந்த வீட்டில் விருந்தாளியாக தன்னை பாவித்து வாழ்ந்து வந்தான்.

ஒவ்வொரு முறை குழந்தை நெருங்கி வந்து விளையாடும் போதும், மனைவி பட்டுப்புடவை கட்டி கோவிலுக்கு செல்லும் போதும், பைக்கை கிளப்பி வீட்டிலிருந்து ஆபிசுக்கு கிளம்பும்போதும் ஏதோ மனதில் உள்ளதை உடைத்துவிட வேண்டுமென தோன்றும். விஷயம் தெரிந்து ஒவ்வொரு நாளும் அவர்கள் வேதனைப்படுவதை விட ஒரே நாளில் அழுதுவிட்டு போகட்டும் என விட்டு விடுவான். உறங்கும்போது தனிமையில் உறங்குவதும், ஒரு கூடுதல் தலையணையை கட்டிப்பிடித்து கொண்டு அதனுடன் மனதிற்குள் பேசிக்கொண்டே ‘நான் சுடுகாடு செல்லும் போது நீயும் என்னுடன் இடுகாடு வந்துவிடு’ என மனதால் பேசுவதும் வழக்கமாயிற்று.

அன்று வியாழன், வழக்கமான எந்த பணிகளையும் செய்யாமல், வீட்டில் இருந்தவர்கள் கேட்டதற்கு ‘இன்னைக்கு எனக்கு ஸ்பெஷல் லீவு’ என சொல்லிவிட்டு வீட்டின் ஒவ்வொரு அறைகளையும் உணர்வாலும், நிறைந்த பார்வையாலும் நிறப்பிக்கொண்டே அடுத்த அறைக்கு நகர்ந்தான். தான் அமர்ந்து படிக்கவும், வேலை பார்க்கவும் பயன்படுத்தும் அறையில் அமர்ந்து ஒவ்வொரு பொருளாக தொட்டுப் பார்த்துக்கொண்டே நினைவுகள் நிலைமாறியது.
‘நான் இல்லாமல் இந்த அரை எப்படி இருக்கும், என்னை தேடி அடிக்கடி என் அறைக்குள் ஓடி வரும் குழந்தை நான் இல்லாமல் ஏமார்ந்து போகுமே என விசயமாக நினைவுகள் நகர்ந்தது.
சிறிது நேரம் படுத்து ஓய்வு எடுக்கலாம் என சென்று படுத்தவன் வயிற்றை பிடித்துக்கொண்டு சுருண்டு படுத்தான்.
[அடுத்து என்னாவாயிற்று இரண்டாம் பக்கத்தில் கதையின் தொடக்கத்தில்]

[நீரோடை மகேஸ்]

வேப்பப் - பூ சுண்டாங்கி

தேவையான பொருட்கள்

க.உளுந்து – 50 கிராம்
வ.மிளகாய் – 2-4
புளி – தேவைக்கு
உப்பு – தேவைக்கு
வேப்பம் பூ:- 50 கிராம்
துருவிய தேங்காய் – 50 கிராம்
ந.எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை

வேப்பம் பூ வை சுத்தம் செய்து நல்லெண்ணையில் வறுத்துக் கொள்ளவும்.
க.உளுந்தை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
துருவிய தேங்காயையும் வறுத்துக் கொள்ளவும்.
வறுத்து வைத்துள்ள வேப்பம் பூ, க.உளுந்து,தேங்காய்,க.உளுந்து,புளி,உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதை ஊற்றி வணக்கி இறக்கவும். இப்போது சுவையான வேப்பம் பூ சுண்டாங்கி தயார்.

குறிப்பு:- சுடான சாப்பாட்டிற்கு சுண்டாங்கியை சேர்த்து பிசைந்து சாப்பிடவும்.

[சூலூர் ஆனந்தி]

சிங்கிள் பேரண்ட் .. [விழிப்புணர்வு கட்டுரை]

“இருமனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய் ???…”

இயக்குனர் சிகரம் திரு கே பாலச்சந்தர் அவர்களின் “அவர்கள் ” படத்தில் வரும் பிரபலமான பாடல்..

இந்த கால சூழலுக்கு இந்த பாடல் வரிகள் மிகவும் பொருத்தமாக இருக்கும் ..இரு மனம் இணையும் திருமண வாழ்வில் இடையில் மயங்குவது குழந்தைகள்தான் …மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் இருக்கும் ஜீவன்கள் ..

முன்பு ஒரு காலத்தில் திருமணம் என்பது பெரியவர்கள் பார்த்து நிச்சயித்தனர். குடும்பப் பின்னணி, வேலை, கொஞ்சம் சொத்து ..என சில விஷயங்களை ஆராய்ந்து பார்த்து தங்கள் பிள்ளைக்கோ.. பெண்ணுக்கோ… திருமணம் செய்து வைத்தார்கள்.

அப்பவும் இரு மனங்கள் வேறுபட்டு தான் இல் வாழ்க்கை நடக்கும். .ஆனால் ஒரு சமூக கட்டுப்பாடு, பெரியவர்கள் பால் உள்ள மரியாதை ..குடும்ப கவுரவம் ..போன்றவற்றால் ஒருவரை ஒருவர் அனுசரித்து சென்றனர். பிடிக்காத போதும் விட்டுக் கொடுத்து வாழ்ந்தனர்.

ஆனால் தனிமனித சுதந்திரம்.. தனிமனித உரிமைகள் …
தனிமனித உணர்வுகள் இவற்றிற்கெல்லாம் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் காலம் ஆரம்பித்து விட்டது. கிட்டத்தட்ட நாமும் வெளிநாட்டினரைப் போல வாழ ஆரம்பித்து விட்டோம்.அதன் விளைவுகள்.. நிறையவே மண முறிவுகளைப் பார்க்கிறோம்.

சந்தர்ப்ப சூழலால் துணையை இழந்து தனியாக வளர்க்க வேண்டிய சூழலில் இருப்போர் ஒரு பக்கம்… இன்னொரு பக்கம் மண முறிவால் தனி பெற்றோராய் குழந்தையை வளர்க்க வேண்டிய சூழலில் இருப்போர்.

சிங்கிள் பேரண்டாக.. தாயோ அல்லது தந்தையோ தனியாக பிள்ளையை வளர்க்கும் சூழலை நிறையவே பார்க்க முடிகிறது. ஒரு குழந்தைக்கு தாயும், தந்தையும் இரு கண்களைப் போல. அதில் எந்த ஒரு கண்ணை இழந்தாலும், அக்குழந்தையின் பார்வை அரைகுறையே..

சிங்கிள் பேரண்டாக குழந்தையை வளர்ப்பது மிகப்பெரிய சவால் ..தாயே அந்த குழந்தைக்கு தந்தையாய் மாறி அந்த பொறுப்புகளையும் செய்ய வேண்டி இருக்கும் ..அல்லது தந்தையே தாயாக மாறி தாயுமானவனாய் இருக்க வேண்டியது வரும். எப்படி பார்த்தாலும் தாய்க்கும், தந்தைக்கும் குழந்தையை தனியாக வளர்ப்பது மிகப்பெரிய சவால் மட்டுமல்ல, மிகப்பெரிய மன பாரமும் கூட …

தற்காலத்தில் சிங்கிள் பேரன்ட்ஸ் முறையில் வளர்க்கப்படும் குழந்தைகளின் மனநிலை இன்னும் 10..15… வருடங்களில் சமுதாயத்தில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்று நினைக்கும் போது மனதில் சிறிது கவலை உண்டாகத்தான் செய்கிறது. ஆனால் காலத்தின் மாற்றத்தில் தவிர்க்க முடியாததில் இதுவும் ஒன்றாகிப் போய்விட்டது.

விதிவசத்தால் தனியாக வளர்க்கப்படுவது ஒரு புறம் என்றால் ..சின்ன சின்ன காரணங்களுக்காகவும், ஒன்றுமே இல்லாத பிரச்சனைகளுக்காகவும் , தம்பதிகள் பிரிவது கண்டிப்பாக யோசிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் …

சூழல் காரணமாக தம்பதியர் பிரிந்து வாழ்ந்தாலும், அந்த குழந்தைக்கு பெற்றோர் என்ற அந்தஸ்தை இருவரும் மனம் ஒப்பி கொடுக்க வேண்டும். மணவிலக்கு பெற்று பிரிந்தாலும் அக்குழந்தை குறைந்த பட்சம் தனித் தனியாக வாவது அப்பா அம்மா இருவருடைய அன்பையும் பெற வேண்டும் .

அனேக இடங்களில் சிங்கிள் பேரண்டாக குழந்தை வளர்க்கப்பட்டாலும் தாயையோ, தந்தையையோ சேர்ந்த குடும்பம் குழந்தைக்கு ஒரு அரவணைப்பை தருவதைப் பார்க்க முடிகிறது. அது கண்டிப்பாக அவசியம். அது ஓரளவு மனப் புண்ணை ஆற்றும் ..ஏக்கத்தைக் குறைக்கும் .

சிங்கிள் பேரண்டாக வளர்க்கும் போது மிகவும் பொறுமையாக குழந்தையின் உணர்வுகளை புரிந்து கொண்டு ..இரட்டிப்பு படங்கு பாசத்துடன் தாயோ, தத்தையோ பழக வேண்டும், வளர்க்க வேண்டும் ..குழந்தை தான் சொந்தமாக கால் ஊனும் வரை சரியான சப்போர்ட் கொடுக்க வேண்டும். சமுதாயமும் அக்குழந்தைகளுக்கு அன்பையும் அரவணைப்பையும் வாரி வழங்க வேண்டும் ..மனரீதியாக அவர்களுக்கு எந்த அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தன் துணையை இழந்து சிங்கிள் பேரண்டாக குழந்தை வளர்க்கும் போது ..மன ரீதியாக அவனோ, அவளோ மிகவும் உறுதியாக இருக்க வேண்டும் ..அந்தக் காலத்தில் படிப்பறிவு இல்லாத பெண்கள் கூட தங்கள் துணையை இழந்தாலும், மன உறுதியுடன் போராடி பிள்ளைகளைப் படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளதுனர்.

படிப்போ, வேலையோ இல்லாத அவர்களே அவ்வளவு போராட்டத்திற்கு நடுவே தங்கள் குழந்தைகளை வளர்க்க முடிகிறது என்றால் இப்போது படிப்பும் வேலை பார்க்கும் சூழலும் பெருகிவிட்ட இந்த சமுதாயத்தில் குழந்தைகளை நிச்சயமாக நல்லபடியாக வளர்க்க முடியும்.

காலத்தின் போக்கில் நிறைய மாற்றங்களை காண்கிறோம் ..
அந்தக் காலத்தில் கூட்டு குடும்பமாக இருந்தபோது துணையை இழந்தாலும் சிங்கிள் பேரண்ட் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் தாத்தா, ஆச்சி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா என உறவுகள் கூடி குழந்தையை வளர்த்து விடுவார்கள்.
இப்போது உள்ள குழந்தைகளுக்கு அந்த உறவுகளின் அரவணைப்பு கிடைக்காதது மிகப்பெரியதொரு குறையே.

கூடியவரை தம்பதியர் மன வேறுபாடுகள் இருந்தாலும் குழந்தைக்காக அனுசரித்து வாழ்வதைப் பற்றி யோசிக்க வேண்டும். அப்படி இல்லாமல் மணவிலக்கு பெறும்போது அந்த குழந்தைக்கு தாய் தந்தை இருவரின் அன்பும்,
அரவணைப்பும் தனித்தனியாகவாவது கிடைக்க வேண்டும். அதில் ஈகோ பார்க்க கூடாது .

சிங்கிள் பேரண்டாக குழந்தை வளர்ப்பவர்கள் அதீத மன உறுதியுடன் …அன்புடன் குழந்தைகளை அனுசரித்து அதே நேரம் நல்ல நெறிகளையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து நல்லபடியாக வளர்க்க வேண்டும்.இதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்??? மாறுதல்களை காலப்போக்கில் தான் அறிய முடியும்! !!

[தி.வள்ளி, திருநெல்வேலி]

மாத ராசி பலன்கள் [ஏப்ரல்]

இந்த மாதம் கேது பகவான் நன்மையே செய்வார். உங்கள் பழைய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உடல் நலத்தில் அக்கறை காட்டவும். பணவரவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். பணியாளர்கள் பணியில் அதிக கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் நல்ல லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் எந்த பிரச்சனையிலும் கவனமாக இருக்கவும். மாணவர்கள் கல்வியில் திட்டமிட்டு செயல்படுவார்கள். விவசாயம் மானாவாரி முறை விவசாயிகளுக்கு நல்ல பயன் அளிக்கும்.
பரிகாரம்: தினமும் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.
இந்த மாதம் சூரிய பகவான் நன்மையே செய்வார். உடல் நலம் ஆரோக்கியமாக காணப்படும். குடும்ப செலவுகள் அதிகரிக்கலாம். மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுதலை பெறுவீர்கள். குடும்ப குழப்பங்கள் நீங்கும். பணவரவு தேவைக்கேற்ப அமையும். பணியாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் புதிய சிக்கல்கள் வரலாம், கவனம் தேவை. கலைஞர்கள் திறமையாக செயல்படுவார்கள். மாணவர்கள் சக மாணவர்களிடம் அன்புடன் பழகவும். விவசாயத்தில் குடும்பத் தேவைகள் நிறைவேறும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருக பெருமான் வழிபாடு செய்து வரவும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.
இந்த மாதம் புதன் பகவான் பல நன்மைகளை செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். பிள்ளைகள் குடும்பத்திற்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணியாளர்கள் பணியில் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். விவசாயத்தில் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருக பெருமான் வழிபாடு செய்து வரவும்.
இந்த மாதம் குரு பகவான் நன்மையை செய்வார். பணவரவு சற்று அதிகரிக்கும். வீடு வாகனம் வாங்க யோகம் உள்ளது. உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீண்ட நாளைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. உங்கள் பிள்ளைகளால் குடும்பத்தில் நெருக்கடி வரலாம். பணியாளர்கள் பணியில் மிகவும் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் புதிய தடைகள் ஏதும் இருக்காது. கலைஞர்களுக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயத்தில் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்து வரவும்.
பரிகாரம்: அனுமன் வழிபாடு செய்தல் அதிக நன்மை கிடைக்கும்.
இந்த மாதம் சுக்கிர பகவான் பல நன்மைகளை செய்வார். குடும்பத்தில் நன்மைகள் அதிகரிக்கலாம். அண்டை வீட்டார் மத்தியில் எதிர்ப்புகள் விலகும். மனதில் இருந்து வந்த கவலைகள் அகலும். உடல்நலம் ஆரோக்கியமாக காணப்படும். பணியாளர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுதலை பெறுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் செய்யப்படும். கலைஞர்கள் பரிசுப் பொருட்களை வெல்வார்கள். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவார்கள். விவசாயிகள் விவசாயத்தை பலப்படுத்த அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும்.
பரிகாரம்: தினம் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.
பரிகாரம்: அன்றாடம் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.
இந்த மாதம் சூரிய பகவான் நன்மையை செய்வார். குடும்பத்தில் பல நன்மைகளை பெறுவார்கள். பண வரவு அதிகரிக்கலாம். பிரயாணத்தின் போது நல்ல கவனம் செலுத்தவும். கணவன் மனைவி உறவுகள் மேம்படும். பிள்ளைகளால் நன்மை அடைவீர்கள். பணியாளர்கள் பேச்சு திறமையால் நன்மை கிடைக்கும். வியாபாரிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.
 
இந்த மாதம் சுக்கிர பகவான் பல நன்மைகளை செய்வார். எதிர்பாராமல் திடீர் செலவுகள் வரலாம். இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பயணத்தின் போது சற்று கவனமாக செயல்படவும். புதிய பொறுப்புக்கள் தேடி வரும். பணியாளர்களுக்கு பணிச்சுமை குறைய வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் செய்யப்படும். கலைஞர்கள் சக கலைஞர்களை அனுசரித்து போகவும். மாணவர்கள் ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். விவசாயம் நன்கு செழிப்படையும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செய்து வரவும்.
இந்த மாதம் புதன் பகவான் நன்மையே செய்வார். உங்களுக்கு வாகன யோகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குடும்ப செலவுகள் சற்று குறையும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். பழைய கஷ்டங்கள் நீங்கி புதிய அத்தியாயம் பிறக்கும். பணியாளர்கள் பணியில் நன்கு சிறப்படைவார்கள். வியாபாரம் வருவாய் உயரும். மாணவர்கள் கல்வியில் முழு திறமையும் வெளிக்காட்ட வேண்டும். விவசாயம் நல்ல வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்து வரவும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.
 
இந்த மாதம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். பண வரவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் செலவுகள் அதிகரிக்கலாம். உங்கள் சேமிப்பு குறையும். பொது வாழ்வில் ஈடுபடுவது நன்மையே பயக்கும். வெளிவட்டாரத்தில் பேசும்போது அதிக கவனம் காட்டவும். பணியாளர்களுக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வீண் பிரச்சனைகள் வரலாம், கவனம் தேவை. மாணவர்கள் ஆசிரியர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள். விவசாயம் மூலம் குடும்ப தேவைகள் பூர்த்தி அடையும்.
பரிகாரம்: அனுமன் வழிபாடு செய்தல் சாலச்சிறந்தது.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று துர்க்கை அம்மன் வழிபாடு செய்து வரவும்.
இந்த மாதம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது. உங்கள் எதிர்காலம் பற்றிய கவலைகள் உருவாகலாம். எதையும் சாதிக்க இது நல்ல நேரம் ஆகும். உங்கள் சேமிப்பு சற்று உயரம். பணியாளர்களுக்கு பணி சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் உருவாகலாம். கலைஞர்களுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் குறைவான மதிப்பெண்களையே பெறுவார்கள். விவசாயத்தில் வருவாய் இழப்பு ஏற்படலாம்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்து வரவும்.
 
இந்த மாதம் செவ்வாய் பகவான் பல நன்மைகளை செய்வார். வீண் பிரச்சனைகள் வர வாய்ப்புகள். சொத்து வாங்க யோகம் உள்ளது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். பணியாளர்கள் வீண் அழைச்சல்களை சந்திப்பார்கள். வியாபாரிகள் இன்னல்களை சந்திப்பார்கள். கலைஞர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் போக்குவரத்தில் அதிக கவனம் காட்டவும். விவசாயம் நன்கு செழிப்படையும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருக பெருமான் வழிபாடு செய்து வரவும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்து வரவும்.
இந்த மாதம் குரு பகவான் நன்மையே செய்வார். மனதில் தடுமாற்றங்கள் இருக்காது. பழைய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்கள் வாழ்வில் புதிய அந்தஸ்து உருவாகும். கணவன் மனைவி இடையே பகைமை உருவாகும். பணியாளர்கள் அதிக வேலைப்பளுவை சந்திப்பார்கள். வியாபாரம் விரிவு படுத்தப்படும். கலைஞர்கள் நல்ல வருவாய் ஈட்டுவார்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். விவசாயத்தில் லாபம் சீராக இருக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவகிரக வழிபாடு செய்து வரவும்.
[முத்துசாமி – அஞ்சல்துறை ஓய்வு]
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி வழிபாடு செய்து வரவும்.
 
 – முத்துசாமி அஞ்சல்துறை ஓய்வு

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *