நீரோடை பெண் – திறனாய்வு கட்டுரை சமர்ப்பணம்

தாயை சிறந்ததொரு கோவிலுமில்லை என்பார்! அது உண்மைதான், பிறப்பிலும் இறப்பிலும் அம்மையவள் உணர்த்தும் பாடம் தான், வாழ்வில் அதிக கற்றலையும் வழி(லி)யையும் ஏற்படுத்தும் – neerodai pen thiranaaivu sakthivelayutham.

sakthi velayutham mangaiyammal

நண்பர், கவிஞர் நெருப்பு விழிகள் ம.சக்திவேலாயுதம் அவர்களின் தாயார் (காலம் சென்ற ம.மங்கையம்மாள்) அவர்களுக்கு, அவர்கள் மகன் சக்தி வேலாயுதம் எழுதிய திறனாய்வு கட்டுரை பதிவை நீரோடை சார்பாக சமர்ப்பிக்கிறோம்.

neerodai pen

பக்கங்கள் 96, பாவைமதி வெளியீடு
விலை 120 (சிறப்பு தள்ளுபடி விலை 100 அஞ்சல் செலவுடன்)

வோர்ட்சுவொர்த்து அவர்கள் அழகாகச்சொல்வார்… “ஆற்றல் நிரம்பிய ​சொற்கள் இயல்பாகப் ​பொங்கி வழிவது கவிதை”… அத்தகைய ஆற்றல் மிகுந்த சொற்கள் நிரம்ப நம்மை இயல்பாக்கும் புத்தகமே இந்த “நீரோடை பெண்” புத்தகம்.

“கவிதைகளின் ரீங்காரம்” என்று வாழ்த்தியுள்ள இளஞ்சேரல் அவர்களின் வாழ்த்துரை இந்த நூலுக்கான உந்து சக்தி. “கவிதையை ஒருபோதும் செய்துவிட முடியாது” என்று தலைப்பிட்டு வாழ்த்தி இருக்கும் பா.மீனாட்சி சுந்தரம் அவர்களின் வாழ்த்துரை நூலைப் படிக்கத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

கவிஞர் மகேஸ் அவர்களின் என்னுரை நம்பிக்கையுடன் அவர் கவிதைகள் போலவே நிமிர்ந்து நிற்கிறது.

“நீரோடை பெண்ணும் நிலாமகளும்” என்றவாறு எழுதியுள்ள பாவைமதியின் வான்மதி அவர்களின் பதிப்புரை புத்தகத்திற்கான புத்துணர்ச்சி.

தியாகித்தாய் எனத் தொடங்கும் முதல் கவிதை முத்தான கவிதை. அன்னையவளின் பெருமையை அகமகிழ சொல்லி இருக்கும் நீள்கவிதை.
மனதில் நிலைக்கும் சொற்கள்
மனதை வருடும் சொற்கள்
முத்தான சொற்கள் நிரம்பி வழியும் கவிதை அது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா… அன்பில் நிரம்பி வழியும் வரியில் நான் ரசித்த வரிகள்…

“நான் சுவாசிக்கவே உன்
இதயம் துடிக்கும்
தடுமாறி விழுந்து
ரத்தம் சிந்தும் முன்
உன் கண்களில் ஈரம்

எத்தனை நாள்
உன் பசியின்
முரண்பாடுகளில்
என் வயிற்றில்
குளிர்ச்சி!”


இரண்டாவது கவிதையாக
தவமாய் தவமிருந்து
இந்தத் தலைப்பில் அப்பாவை
தன்னுணர்வு மிக்க வரிகளால்
கவிதை ஓவியமாய் கலங்கரை விளக்கமாய் காட்டியுள்ளார்.


நித்தம் ஒரு முத்தம் இந்தத் தலைப்பில் கவிஞரின் வரிகள்
மிக யதார்த்தம். இதோ அவ்வரிகள்….

“புகழ் வேண்டிப்
படையெடுக்கும்
அரசனும் இல்லை

வரங்கள் பெற
தவம் இருக்கும்
முனிவனும் இல்லை

அன்பே
உன் சுகந்தம் தேடி
எனக்குள் தவம் இருக்கும்
கடல் வாசி நான்…

புன்னகையை
என் இதழ்களில் முத்தமிட்டு
நித்தம் நிரந்தரமாய்
நிலைத்திட வா”

கண்டிப்பாக கவிஞரே… நித்தம் ஒரு முத்தம் தேவைதான்.


“கண்ணீருக்கு போட்டியாய்”
இந்தத் தலைப்பில் மகேஸின் கவிதை கண்ணீரின் உணர்வுகளை வெளிப்படுத்திவிட்டது. இதோ அவ்வரிகள்…

“நான் மரணிப்பதை விளையாட்டாய்
கூறிய கணம்
அவள் கண்களில் ஊறிய கண்ணீர் சொன்னது..
உன் மரணம் நிஜம் என்றால்
அவள் உயிர்
கண்ணீரை முந்திக் கொண்டு
வெளியேறும்…
பிரிவில் மரணம்
கண்ணீருக்கு போட்டியாய்”

மேற்கண்ட வரிகள் உணர்வுகளின் உச்சம் என்றே சொல்வேன் நான்.


சந்தன நிலவொன்று மஞ்சள் பூசி வந்ததம்மா என்று தொடங்கும் வரிகளில் காதல் மணம் திக்கெட்டும் பரவுகிறது. இந்தக் கவிதைகளில் இடையில் ஒரு வரி வருகிறது. அது மனதில் ஏதேதோ கற்பனையை ஏற்படுத்தி மகிழ்கிறது. கவிஞரே அது உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் ஏதேதோ இளம் பருவத்து நினைவலைகளை கண் முன்னே கொண்டு நிறுத்துகிறது. இதோ அவ்வரிகள்

“உன் மரகத பார்வையில் மயங்கி தவிக்குது என் கற்பனைகள்

எப்போதும் கற்பனைப்
பாத்திரத்திற்கே
வலிமை அதிகம்
வாசகர் மத்தியில்…
பாவம் என்ன செய்வேன் கவிஞனாகிய நான்”

ஆம் என்ன செய்வீர் கவிஞரே
இந்த சந்தன நிலவைக் கண்டு! – neerodai pen thiranaaivu sakthivelayutham

“எனக்காக அவள் வடித்த கவிதை” என்ன சொல்ல வருகிறது என்று உற்று வாசித்தேன். உருப்படியான சொற்கள் உணர்வு பொங்க திளைத்து இருந்தது இந்த கவிதையில்… இந்தக் கவிதையின் இறுதி வரிகள் எல்லோர் மனதிலும் நிலைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை…இதோ அவ்வரிகள்

“எழுதப் பிறந்தவன் என்ற ஆணவம் கொண்டிருந்தேன்..
உன் எழுத்துகளின் கட்டளை
என்னை ஆணவத்திடமிருந்து விடுதலை செய்தது”

உண்மைதானோ? என்று
யோசிக்க வைத்துவிட்டது உங்கள் வரிகள் கவிஞரே…

மேலும் இத் தொகுப்பில் நீரோடை பெண், நீரோடை நிலா, மேகக் கடன்காரி, மெழுகு பொம்மை, காதல் கட்டளை என்ற தலைப்பில் இடம்பெற்ற கவிதைகள் மனதில் நிற்பவை. மனதோடு உறவாடும் கவிதைகளாக இன்னும் பல கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது.

உறவுகள்,உள்ளங்கள், காதல் என வாழ்க்கையோடு ஒன்றிப் போகும் செய்திகளை கவிதைகளாக படைத்திருப்பது
நலம் பயக்கும் நல்ல விஷயம்.

நூல் தேவைக்கு – நூலாசிரியர் – 9940707441 – neerodai pen thiranaaivu sakthivelayutham

– ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    கவிஞரின் தாயாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் …அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *