என் மின்மினி தொடர்கதை (பாகம் – 61)

முந்தைய பதிவை வாசிக்கஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-61

En minmini thodar kadhai

சிறிது நேர அமைதிக்கு பின் மெதுவாக பேச ஆரம்பித்தாள் ஏஞ்சலின். இப்போதைக்கு என்னிடம் எதுவும் கேட்காதே.,கொஞ்சம் நாள் போகட்டும் நானே சொல்கிறேன் என்றவாறே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல முற்பட்டாள்…

ஹே ஒரு நிமிஷம் நில்லு…என்கிட்டே வந்து நீயா பழகுன,அப்புறம் அழுதுட்டே இருக்க,அதுக்கு அப்புறம் விட்டுட்டு போய்ட்டே இருக்க… நான் கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி சொன்ன மாதிரியே நடக்குது பாத்தியா…

எனக்கு தெரியும் என் மனசுக்கு புடிச்சவங்க யாரோட அன்பும் திருப்பி எப்போதும் எனக்கு கிடைச்சதும் இல்லை. அவங்க என்கூட ரொம்ப நாள் இருக்குறதும் இல்லை… எல்லா உறவுகளும் அப்படித்தான்… நீ மட்டும் என்ன விதி விலக்கா என்று சொல்லியவாறே அவளை பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தான் பிரஜின்…

அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை.நான் எப்போதும் உன்கூட உன்னோட சுகதுக்கங்களை பங்கு போடும் நல்ல தோழியா நான் இருப்பேன்.உனக்கே தெரியும் என் மனசு நிறைய காயங்கள் இருக்கு.அதில் சில விஷயங்களை மறைக்கவும் முடியாமல், வெளிப்படையாக வெளியே சொல்லவும் முடியாமல் தவிச்சுக்கிட்டு இருக்கிறேன்.என்னை நீயாவது கொஞ்சம் புரிஞ்சுக்கோ.,என்று அவனை பார்த்து கலங்கிய கண்களை துடைத்தப்படி பிளீஸ்….என்றாள் ஏஞ்சலின்…

அப்போ நீ என்ன செய்தாலும் நான் அமைதியா உன் பின்னாடி சுத்திக்கிட்டே இருக்கணும்.நீ உன் இஷ்டத்துக்கு ஏதோ இத்துப்போன பழச நினைச்சு எதிர்கால வாழ்க்கையைப்பத்தி யோசிக்காம அழுதுகிட்டே இரு என்று பதிலுக்கு அவனும் கோபித்து கொள்ள…

மன்னிருச்சுறு.,இந்த நொடியிலே இருந்து நானும் அழப்போவதில்லை,உன்னையும் கோபப்பட வைக்க போவதில்லை. ஆனால் என்ன ஒண்ணு நீ கோபத்துல தான் இன்னும் அழகாக இருக்கே.அதுக்காகவே உன்னை கோபப்படுத்தி பார்க்கலாம் என்றாள் ஏஞ்சலின்…

இதைக்கேட்ட பிரஜினுக்கு அவள் மீது இருந்த கோபமும்,வருத்தமும் சுத்தமாக இல்லாமல் போக நான் கோபப்பட்டால் அழகா இருக்கேனா? இதுதான் இந்த வருசத்தோட மிகச்சிறந்த காமெடி என்று சிரித்தபடி இப்போவாச்சும் கோயிலுக்குள் போகலாமா என்று அவளை பார்த்து கேட்டான் பிரஜின்… பதிலுக்கு அவளும் தன் “எள்ளுப்பூ புன்னகையுடன்” அவனைப்பார்த்து ம்ம்ம் போகலாமே என்று சிரித்தாள் ஏஞ்சலின்… – என் மின்மினி தொடர்கதை பாகம்-61

– அ.மு.பெருமாள்

பாகம் 62-ல் தொடரும்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *