என் மின்மினி (கதை பாகம் – 42)

சென்ற வாரம் 7.45மணி இருக்கும்.மெதுவாக நடந்து வெளியே வந்தாள் ஏஞ்சலின்…தூரத்தில் இருந்து பார்த்து கொண்டே., நான் எவ்வளவு நேரம் வெயிட் பண்றே. இவ மெதுவா ஆடி அசைந்து வருவதை பாரே – en minmini thodar kadhai-42

en minmini kathai paagam serial

இதுவரை கண்டிராத அளவுக்கு அழகாக தெரிந்தாள் ஏஞ்சலின்.கால்களில் மெல்லிய வெள்ளிகொலுசுகள் சில் சில் என்று சிணுங்க,மாலை நேரத்து தெருவிளக்குகள் ஒளியில் அழகான மின்மினி பூச்சிகள் மின்னிட தவழ்ந்து வரும் தென்றலிலே ஒரு தேவதை போலே மெல்ல மெல்ல நடந்து பிரஜின் அருகில் வந்து பிரமிப்பாய் நின்றாள் ஏஞ்சலின்..

வந்து நின்றவள் எதுவுமே பேசாமல் அவனை பார்த்து ரொம்ப நேரம் ஆச்சா,கொஞ்ச வேலை அதுதான் லேட் ஆச்சு… ம்ம் ஏதோ பேசணும்ணு சொன்னீயே சொல்லு லேட்டாகுது ஹாஸ்டலுக்கு 8.30க்குள்ளே போகணும் என்று அவசரப்படுத்தினாள் ஏஞ்சலின்…

அவள் அழகின் பிரமிப்பில் இருந்து சுதாரித்து வெளியே வந்து…,ஏங்க மேடம் இவ்வளவு நாள் ஆச்சே.நான் தான் வந்து உன்கிட்ட பேசல.நீயாவது பேசியிருக்கலாம் இல்லையா.நான் பண்ணது தப்பு தான்.நீ ஆசையா கொடுத்த பொருளை வேணாம்ணு சொல்லிட்டே.எனக்கு புரியுது உன்னோட அன்பு.ஆனால் அந்த வாட்ச் டிசைன் எனக்கு புடிக்காம இல்ல.ஆனால் எனக்காக இவ்வளவு செலவு ஏன் பண்ணுறே அப்படினுதான் மனசு கேட்கலை….

இப்போ பாரு ஜென்ஸ் வாட்ச்னு கூட பாக்காம அதை நீ போட்டிருக்கே,எவ்வளவு அழகா இருக்கு உனக்கு என்று மெதுவாக அவளை சமாதானபடுத்தினான் பிரஜின்…

ஓ…. சரி,அவ்வளவு தானா இன்னும் எதாவது பேசவேண்டி இருக்கா.,லேட் ஆகுது நான் கிளம்புறேன் bye என்று சொல்லிவிட்டு சென்றாள் ஏஞ்சலின்…
ச்சே., என்ன இது இவளை புரிஞ்சுக்கவே முடியல.முன்னாடியெல்லா எவ்வளவு கோபப்பட்டாலும் ஒன்னும் பேச மாட்டாள்.அவ்வளவு பாசமாக இருப்பாள்.இப்போ ஏன் என்ன பார்த்தலே புடிக்காதது போலே ஒதுங்கி ஒதுங்கி போறாளே
என்றவாறே அவளை பார்த்தான் பிரஜின்… அவள் திரும்பி கூட பார்க்கவில்லை.

விறுவிறுவென ஹாஸ்டல் வாசலுக்கு நடந்தாள்.கொஞ்ச தூரம் நடந்தவளுக்கு உள்மனதில் ஒரு குறுகுறுப்பு., அவன் என்ன பண்றான் என்று பார்த்தே ஆகணும் என்று நினைத்து திரும்பி பார்த்தாள் ஏஞ்சலின்..
அவள் பார்ப்பதை கண்டும் காணாதவன் போலே தன் வண்டியினை ஸ்டார்ட் செய்தான் பிரஜின்…

வெச்ச கண் வாங்காம அவனையே பார்த்தவாறே ம்ம்…. என்னைக்கும் இல்லாம இன்னிக்கு ஏன் இவன் இவ்வளவு அழகா இருக்கான்… – en minmini thodar kadhai-42

– அ.மு.பெருமாள்

பாகம் 43-ல் தொடரும்

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    கதை அழகாக நகர்கிறது ..வாழ்த்துக்கள் .