கார கொழுக்கட்டை
சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் “கார கொழுக்கட்டை” செய்முறை – kara kozhukkattai
தேவையான பொருட்கள்
- புழுங்கல் அரிசி 2 கப் ( 4 மணி நேரம் ஊற வைத்தது)
- தேங்காய் துருவல் அரை கப்
- மிளகாய் வற்றல் – 4 – 5
- கடுகு , உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
- நல்லெண்ணெய் 3 ஸ்பூன்
- கறிவேப்பிலை கொஞ்சம்
செய்முறை
அரிசியை நன்றாகக் கழுவி கொண்டு அத்துடன் மிளகாய் வற்றல் சேர்த்து கிரைண்டரில் போட்டு,சற்று கொரகொரப்பாக ரவை பதத்துக்கு அரைக்கவும்,.வழிக்கும் முன் உப்பும்,.தேங்காய் துருவலும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி வழித்தெடுக்கவும் – kara kozhukkattai.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு, அரைத்து வைத்த மாவை போட்டு மிதமான தீயில், நன்றாக தண்ணீர் பசை இல்லாமல் உருட்டும் பதத்துக்கு கிண்டி கொள்ள வேண்டும்.(விருப்பப் படுபவர்கள் கூடுதலாக ஒரு கால் கப் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்) உருட்டும் பதம் வந்ததும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு.. இட்லித் தட்டில், கொழுக்கட்டையாக உருட்டிக்கொண்டு ( ரொம்ப வழுவழுப்பாக உருட்டக்கூடாது) மிதமான தீயில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும் .சுவையான கார கொழுக்கட்டை தயார் …
– தி.வள்ளி, திருநெல்வேலி
எண்ணெயில்லா, மிருதுவான கொழுக்கட்டை…எல்லா வயதினரும் விரும்புவர்.
அருமை அருமை.எளிதானசெய்முறை
கொழுக்கட்டை superb..👌👌