ஏத்தம் பழம் கோதுமை மாவு குழி பணியாரம்

பணியாரம் என்றாலே அரிசி பருப்பை ஊற வைத்து அரைத்து புளித்த பிறகு தான் செய்ய முடியும். ஆனால் இந்த கோதுமை மாவு குழிப்பணியாரம் ஒரே உடனடியாக செய்துவிடலாம் – godhumai maavu kuli paniyaram

godhumai maavu kuli paniyaram

தேவையான பொருள்கள்

கோதுமை மாவு – ஒரு கப்
பச்சரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – ஒன்றரை கப்
ஏத்தம் பழம் – 2
ஏலக்காய் சிறிதளவு
நெய் (அ) சமையல் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு ,பச்சரிசி மாவை சேர்த்து கலந்துக்குங்க. பழத்தை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி போட்டுக்கங்க வெல்லம் ஒன்றரை கப் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி நல்ல பாகுபதம் வரும் அளவுக்கு காய்ச்சி இந்த மாவுடன் சேர்த்து நல்ல கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து கலாம் ஏலக்காய் பொடி செய்து சேர்த்துக் கொள்ளவும் – godhumai maavu kuli paniyaram.

இந்த கலவையை குழிப்பணியார சட்டியில் சமையல் எண்ணெய் , அல்லது நெய்யை ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு குழியிலும் போட்டு மெதுவாக திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து சூடாக பரிமாறலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு மாலை நேர சிற்றுண்டி..

– கவி தேவிகா, தென்காசி

You may also like...

5 Responses

  1. N.shanmugapriya says:

    கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவு‌ம் ந‌ல்லது. அதில் ஒரு பணியாரம்…. அருமை சகோதரி…

  2. தி.வள்ளி says:

    அருமையான… செய்வதற்கு எளிமையான.. சத்துகள் நிரம்பிய ஒரு சுவையான உணவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி

  3. Nithyalakshmi says:

    அருமை. செய்து பார்க்கிறேன்

  4. surendran sambandam says:

    வித்தியாசமாக நன்றாக இருக்கிறது

  5. R. Brinda says:

    ஏத்தம் பழம் கோதுமை மாவு குழி பணியாரம் செய்முறை எல்லோருக்கும் பயன்தரும் விதத்தில் இருக்கிறது. பாராட்டுக்கள்.