என் மின்மினி (கதை பாகம் – 36)

சென்ற வாரம் என்ன இப்படி சொல்றே. எனக்கு உன் வசதியை விட உன்னோட உணர்வுகளும் அன்பும் தான் முக்கியம் என்று வீட்டுக்குள் போக துடித்தாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-36.

en minmini kathai paagam serial

இன்னொரு டைம் சொல்றே.வீடு குப்பையா இருக்கும் நல்லாவே இருக்காது.ரொம்ப கற்பனை பண்ணி ஏமாந்து போகாதே என்றவாறே உள்ளே வா என்று வரவேற்றான் பிரஜின்… – en minmini thodar kadhai-36

உள்ளே வந்தவளை டக்குனு கைய புடிச்சு அட உட்காரு என்ன இவ்ளோ வெட்கபடுறே..,அதிசயமா இருக்கே என்று கிண்டலடித்தான்…நீ என்னை என்ன பொண்ணு பார்க்கவா வந்திருக்கே.உன்ன பாத்து வெட்கப்பட… போடா போயி டிரஸ் மாத்திட்டு வா. லேட் ஆகுது என்றாள் ஏஞ்சலின்.

அடடா இவங்க பெரிய மகாராணி.,போயிதான் நாட்டை காப்பாத்த போறாங்க என்று சிரித்தான் பிரஜின். சரி ரொம்ப பேசாதே.சாப்பிட ஏதாவது கொடுக்கிற பழக்கம் ஏதும் இல்லையா. வீட்டுக்கு வந்தவளை இப்படித்தான்
கவனிப்பியா.ஏதாவது சாப்பிட தாடா என்றாள் ஏஞ்சலின்…

ம்ம் அதெல்லாம் ஒன்னும் இல்ல.அரிசி இருக்கு நீ வேணா சாப்பாடு செய்து தாயே.இன்று மட்டுமாவது நல்ல சாப்பாடு சாப்பிடுறே
என்றான் பிரஜின்…

ஓகோ…சரியான ஆளுடா நீ கூட்டிட்டு வந்து வேலை வாங்குறே…சரி உனக்கு இப்போ என்ன சாப்பாடு தானே வேணும்.இப்போ பாரு என்னோட திறமையை என்று சொல்லியவாறே சமையல் வேலையினை தொடங்கினாள் ஏஞ்சலின்… சரிடா உனக்கு புடிச்ச சாப்பாடு என்ன? சொல்லு செய்து தாறே என்று ஏஞ்சலின் கேட்டவுடன் ம்ம்ம்ம் எனக்கு கருவாட்டு குழம்பு, அப்புறம் உருளைக்கிழங்கு பொரியல், பால் பாயசம் அப்படியே அடுக்க ஆரம்பித்தான் பிரஜின்…

போதும் போதும் இவ்வளவும் எப்படி இப்போ செய்ய முடியும்.இன்னொரு நாள் ட்ரை பண்ணலாம் என்று சிரித்தபடி., அப்போ புடிக்காதது என்றாள் ஏஞ்சலின்…
ம்ம் இந்த வெரைட்டி சாதம்னா எனக்கு கொஞ்ச அலர்ஜி.வேற வழி இல்லனா சாப்பிடுவேன் என்றான் பிரஜின்…

ஓ அப்போ இன்னிக்கு வெரைட்டி சாதம் தான் செய்வேன்., வேற வழி இல்லைனு ட்ரை பண்ணு என்று சொல்லிகிட்டே அதற்க்கான வேலையினை தொடர்ந்து செய்து சமையலை முடித்தாள் ஏஞ்சலின்…

கொஞ்ச வாசனை நன்றாகத்தான் வந்தது.லேசாக எட்டி பார்த்தான் பிரஜின். ஆனாலும் வேணா நம்ம போயி எதாவது சொல்லி எதுக்கு வம்பு???.. பேசாம வாசனை மட்டும் புடிப்போம் என்று அமைதியானான் பிரஜின்…

கொஞ்ச நேரத்தில் வா சாப்பிடலாம் உனக்கு புடிக்காத வெரைட்டி ரைஸ்தான் என்று சிரித்தாள் ஏஞ்சலின்… ஏன் இப்படி பண்றே எனக்கு புடிக்காதுனு தெரிஞ்சும் அதையே பண்ணிருக்கே என்று எரிச்சலுடன் மூஞ்சியை காட்டினான்
பிரஜின்… ஹே சும்மா டென்ஷன் ஆகாதே சாப்பிட்டு பாத்து அப்புறம் சொல்லு என்று பிரஜின் தலையில் செல்ல கொட்டு கொட்டினாள் ஏஞ்சலின்…

சரி சாப்பிடலன்னா விடவா போறே.சாப்பிட்டு தொலையிறேன் என்று அரைமனசுடன் சாப்பிட உட்கார்ந்தான் பிரஜின்…

– அ.மு.பெருமாள்

பாகம் 37-ல் தொடரும்

You may also like...

3 Responses

  1. Sana says:

    Prajan character super

  2. surendran sambandam says:

    வெரைட்டி ரைஸ் டேஸ்ட் சூப்பரா இருக்கப்போகிறது

  3. தி.வள்ளி says:

    இளமை காதல் இனிது தொடரட்டும் …கதையும் வளரட்டும்…. வாழ்த்துக்கள் ..