என் மின்மினி (கதை பாகம் – 10)

சென்ற வாரம் என்னோட பெயர் பிரஜின்… கொஞ்சமும் எதிர்பாக்காதவன் ஐய்யோடா…… என தன் நெஞ்சை பிடித்தபடி மண்ணையும் விண்ணையும் பார்த்தபடியே… – en minmini thodar kadhai-10.

en minmini kathai paagam serial

அன்று முழுக்க முழுக்க அவள் திரும்ப பார்த்து கண் அடித்ததை எண்ணி எண்ணி சுறுசுறுப்பின் உச்சத்தை தொட்டப்படி அனைத்து
ஆபீஸ் வேலைகளையும் சீக்கிரம் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து படுக்கையில் அமர்ந்தவனுக்கு.,

அவள் முகம் நினைவுக்கு வரவே படுக்கையில் படுத்துகொண்டவன் தூக்கம் வராமல் புரண்டுகொண்டே.,
இவளோட பெயரை சொல்லாமலே போயிட்டாளே….
ஒரு வேளை அவளோட உண்மையான பெயரே பப்புவாகத்தான் இருக்குமோ..ச்சே ச்சே இருக்காது வேற ஏதாவது
பெயராகத்தான் இருக்கும் என்று குழப்பத்தில் தத்தளிக்க தூக்கம் கண்களை நிறைத்தது…. – en minmini thodar kadhai-10

தூங்கி போனவனுக்கு திடீரென அலாரம் அடிக்கும் சத்தம் கேட்கவே திடுக்கிட்டு விழித்தான்…ச்சே இப்போதான் தூங்குன மாதிரி இருக்கு… அதற்குள்ளாக விடிஞ்சு போச்சா…என்று சலித்தப்படியே படுக்கையில் இருந்து எழும்பியவன்., இன்று எப்படியாவது அவள் பெயரை கேட்டு விட வேண்டும் என்று வேகமாக கிளம்ப தயாரானான்…

காலை மணி 8.30 யினை தாண்டி சுழன்று கொண்டிருக்க அவளை காண ஆபீஸ் மெயின்கேட் வாசலின் அருகில் காத்துகொண்டிருந்தான்…நேரம் நேரம் செல்ல அவள் வருவதாக இல்லை…

எங்கே போயிருப்பாள்??இன்னும் காணோம்..ஒரு வேளை நேத்து உள்ள கோபத்தில் பார்த்தும் பார்க்காதது போலே போயிருப்பாளோ என்று மனசுக்குள் சஞ்சலம் கொண்டவனாக தனது கேபினுக்குள் நுழைய முற்பட்டான்…
(அப்போ கோபம்னு இருந்தால் ஏன் திரும்பி பார்த்து கண் அடித்துவிட்டு போனாள் என்றது அவனது உள்மனது)…
தனது கேபினுக்குள் புகுந்தவன் எப்போதும் போலே அமர்ந்து ஆபீஸ் வேலையிலே மூழ்கிய நேரம்…
ஹாய் டா பிரஜின்…. என்று வேகமாக ஒரு மின்சாரம் போலே அவனது கேபினுக்குள் நுழைந்தபடியே….

என்ன டா ரொம்ப நேரம் என்னை காணோம்னு தேடி எரிச்சல் ஆகிட்டே போலே இருக்கு என்றாள் பப்பு…

அவளை கண்ட ஒரு நொடிப்பொழுது திகைத்து போனவனாய் எங்கே போனே என்று ஒரு கேள்விகூட கேட்காமல் எடுத்தவுடனே
உன் உண்மையான பெயரை சொல்லிட்டு என்கிட்டே பேசு என்றான் பிரஜின்…

பாகம் 11-ல் தொடரும்

You may also like...

5 Responses

 1. R. Brinda says:

  மிகவும் விறுவிறுப்பாகச் செல்கிறது சின்னத்திரை யில் வருவது போல.

 2. பிரகாசு.கி., அவிநாசி says:

  பெயர் சொல்லாமல் பத்து பாகங்களை கடந்த மின்மினி கதை., ஆசிரியருக்கு கிடைத்த வெற்றி….
  வாழ்த்துக்கள் அன்பு தோழரே முத்தம் பெருமாள்….

 3. தி.வள்ளி says:

  எப்போதும் போல இந்த வாரமும் சஸ்பென்ஸில் முடித்துவிட்டார்.பப்பு பெயர் சொன்னால் தான் கதை நகரும் போல…

 4. என்.கோமதி says:

  ஆபீஸ் பைலில் பப்புவின் பெயர் இருக்குமே..கணினியில் அவள் செக்சனில் நுழைந்தால் பயோடேட்டாவே கிடைத்திருக்கும்..காதல் யோசிக்க வைக்காது என்று பிரஜினும் அவன் காதலியும் உணர்த்துகிறார்கள்…
  ஆனாலும், செவ்வாய் தோறும் விறுவிறுப்பான சஸ்பென்ஸ் வைக்கும் ஆசிரியர் பாராட்டுக்குரியவர்

 5. ராஜகுமாரி போருர் says:

  பெயரைச் சொல்வதற்கு இவ்வளவு சஸ்பென்ஸ்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *