என் மின்மினி (கதை பாகம் – 28)

சென்ற வாரம் என்ன ஆச்சுங்க கதவை திறங்க. ஏன் ஏஞ்சலின் கதறுகிறாள் என்று வெளியில் சத்தம் போட்டபடி மீண்டும் மீண்டும் கதவை தட்ட ஆரம்பித்தனர். மெதுவாக பக்கத்தில் இருந்த சுவற்றினை பிடித்து எழும்பி கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் – en minmini thodar kadhai-28.

en minmini kathai paagam serial

உள்ளே வந்தவர்கள் தட்டுதடுமாறி கதவருகே வந்த என்னை பிடித்து என்ன ஆச்சுமா ஏன் இப்படி சத்தம் போடுறே என்று என்னிடம் கேட்க என்னை சுற்றி என்ன நடக்குது என்று புரியாமல் தவித்தேன் எனக்கு ரொம்ப வயிறு வலிக்குது என்ற சொல்லை தவிர வேறு எதுவும் என்னால சொல்லமுடியவில்லை. எங்க பக்கத்துக்கு வீட்டுகார அக்கா இரண்டு பேர் சேர்ந்து ஒரு ஆட்டோ புடிச்சு அதில் என்னையும் கூட்டிட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

ஆட்டோ செல்ல செல்ல எனக்குள் ஏதோ ஒரு பயம். அம்மா,அப்பா,தம்பி மூணுபேரும் என் பக்கத்திலேதான் தூங்கிட்டு இருந்தாங்க.அப்படி இருந்தும் நான் இவ்வளவு சத்தமிட்டு எழுப்பியும் ஏன் எழும்பல.அவங்களுக்கு என்ன பிரச்சனை,ஏன் அவங்க காதுகளுக்கு நான் கதறி அழுதது கேட்கவேயில்லை என்று பல கேள்விகள் என் மனதில் ஓட தொடங்கின.

சிறிது நேரத்தில் எங்க ஊர் 24×7 அரசு ஆஸ்பத்திரி வாசலில் ஆட்டோ வந்து நின்றது.கூட வந்த இரண்டு அக்காக்களும் வேகமாக இறங்கி வலியால் துடிதுடித்து கொண்டிருந்த என்னை மெதுவாக ஆஸ்பத்திரிக்கு உள்ளே அழைத்து செல்ல முற்பட்டனர்.

அதே சமயம் உள்ளிருந்து வெளியே வந்த நர்ஸ் ஏன் என்ன ஆச்சு.ரொம்ப சத்தம் போடுறா இந்த பொண்ணு என்று கேட்டாள்.

என்ன ஆச்சுனு தெரியல வயிறு வலிக்குதுனு கதறி கதறி அழுகிறாள் என்றாள் என்கூட வந்த அக்காக்களில் ஒருத்தி.

ஓகோ.சரி.சீக்கிரம் வாங்க என்றவாறே டாக்டர் அறைக்கு எங்களை அழைத்து சென்று படுக்கையில் படுக்க வைத்தாள் நர்ஸ். எனக்கோ கண்கள் மேல்நோக்கி சொருக ஆரம்பிக்க மயக்க நிலைக்கு போயிகொண்டிருந்தேன். என் அருகில் வந்த டாக்டர் என்ன ஆச்சு.கடைசியா என்ன சாப்பிடீங்க என்று என்னை பார்த்து கேட்க கேட்க பதில்கூட சொல்ல முடியாதவளாக வாயில் நுரை ததும்ப மயங்கி போனேன்.

அதற்கு பின்னர் என்ன நடந்தது என்று ஒன்னும் தெரியவில்லை.சிறிது கால அவகாசத்துக்கு பின்னர் எனக்கு சுயநினைவு வந்தது. மூக்கிலும் வாயிலும் ஏதேதோ குழல்கள் பொருத்தப்பட்டு படுக்கையில் அசைவின்றி கிடந்தேன்.

கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது. படுத்திருந்தவாறே அந்த அறை முழுவதும் என் மங்கலான கண்களை சுழல விட்டேன்.தூரத்தில் ஏதோ ஒரு உருவம் வெள்ளை நிறத்தில் சாய்ந்து கிடப்பது போலே தோன்றியது – en minmini thodar kadhai-28.

– அ.மு.பெருமாள்

பாகம் 29-ல் தொடரும்

You may also like...

3 Responses

  1. Rajakumari says:

    கதை விறுவிறுப்பாக நகர்கிறது

  2. Kavi devika says:

    சுவாரசியம் கூட்டுகிறது

  3. தி.வள்ளி says:

    மனதை தொடும் நிகழ்வுகள் …கதை மிகவும் விறுவிறுப்பாக சுவாரஸ்யமாக செல்கிறது