குருவைத் தேடி – நூல் விமர்சனம்

நீரோடை வாசகர்களுக்கு வணக்கம். உங்கள் நீரோடை மகேஷ் முதல் முறையாக ஒரு நூலை அறிமுகம் செய்யும் கட்டுரையை எழுதி வெளியிடுகிறேன். நண்பர், எழுத்தாளர் இராஜகோபால் அவர்கள் எழுதிய “குருவைத் தேடி” என்ற சிறுகதைகள் தொகுப்பை பற்றிய நூல் விமர்சனத்தை இந்த பதிவில் வாசிக்கலாம் – guruvai thedi puthaga vimarsanam.

guruvai thedi puthaga vimarsanam

எந்த ஒரு புத்தகமும் வாசிப்போரின் மனதையும், நேரத்தையும் இருக்கப் பற்றிக்கொள்ளுமேயானால் அது அந்த நூல் ஆசிரியருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. நண்பர் இராஜகோபால் அவர்கள் வயதில் மூத்தவர் என்றாலும் அனைவரிடமும் சமமாக பழகக் கூடியவர். அவருடனான பேருந்து பயணங்களில் அவரது முதல் புத்தகத்தில் இடம்பெற்ற கதைகளை சொல்லி வியக்க வைத்தவர். கதை கேட்கும்போதே வாசிக்கத் தூண்டும் கதைகள் அவை.

பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர்

ஆசிரியர் ராஜகோபால் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மானாடு சுந்தரபுரம் குதிரைமொழி கிராமத்தில் பிறந்தவர். சிறு வயது முதல் சிறுகதை, நாவல் படிப்பதில் மிக ஆர்வம் கொண்டவர், இவரது சிறுகதைகள் பல இதழ்களில் வெளிவந்துள்ளன மேலும் பல சிறுகதைப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் எஸ்.ராஜேஷ்குமார் அவர்களால் பாராட்டப் பெற்றவர். இவர் முதல் நூலான “ஓடிப்போவது தவறு சந்தியா” பல பரிசுகளைப் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

குருவைத் தேடி இவரது இரண்டாவது புத்தகம் ஆகும் , இதில்,

  1. பட்டாசு
  2. மழை வந்தாலும் வரலாம்
  3. வாடகை வீடு
  4. காத்திரு கடைசி நிமிடம் வரை
  5. விலகி விடுவோம்
  6. இதுவரை இல்லாத உணர்விது
  7. குருபூஜை
  8. எதைத் தேடுகிறாயோ அது உன்னிடத்தில்
  9. தியா
  10. மன அது செம்மையானால்
  11. இல்லாதவனுக்கு உன் கையால்
  12. ஐந்து பகைவர்கள்
  13. கோயில் சோறு
  14. யார் இவர்.. வழிப்போக்கனா
  15. சமபந்தி
    என பதினைந்து கதைகளுமே வரிசைகட்டி தெளிவான ஞானத்தை எளிமையாக சொல்கிறது. குருவைத் தேடி என்ற புத்தக தலைப்பே, அதன் சிறுகதைகள் ஆன்மீக தேடலையும், பழி பாவங்களை மனதில் பதிய வைக்கும் அச்சத்தை உணர்த்துகிறது. தினமலர், தினகரன், மாலை முரசு, மாலை மலர், பாக்கியா வார இதழில் ஆகிய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றிருக்கும் இவரின் கதைகளுக்கு இணையாக!, ஏன் ஒரு படி மேலாக இந்த புத்தகத்தின் ஒவ்வொரு கதைகளும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மீகத் தேடலில் அமைதி கிடைக்கிறது எனவும், ஆன்மீகம் என்பது உன்னையே உனக்குள் உணர்வது எனவும், அந்த அமைதி வேண்டுமென்றால் “ஆன்மாவின் மூலம் தேடிப் பெறலாம்” என்றும் சொல்லியிருப்பதும், மேலும் உன்னை உனக்குள் தேடு என்று சொல்லி இருப்பதும் ஆசிரியரின் எழுத்து முதிர்ச்சி ஜொலிக்கிறது – guruvai thedi puthaga vimarsanam.

பட்டாசு

தீபாவளிக்கு முந்தின நாள் ஆதித்தனின் தெருவில் மயான அமைதி நிலவியதன் பின்னணியில் ஒரு இளம்பெண் மரணம் என தொடங்குகிறது இவரது முதல் கதை “பட்டாசு”, நன்றாக வாழ்ந்த இறந்த அந்த பெண்ணின் குடும்பம் பற்றியும், சாதி கலவரத்தில் இழந்த வாழ்வை பற்றியும் பிளாஷ் போக்கில் சொல்கிறார் ஆசிரியர். பட்டாசு கதையை கண்கலங்காமல் வாசிக்க இயலாது என்பதை உறுதியாக சொல்கிறேன். மனதில் ஆழப்பதிந்த பட்டாசு கதைக்களம் மற்றும் முடிவு மிக அருமை.

சமபந்தி

சமபந்தி என்னும் பதினைந்தாவது கதையில் முத்துலட்சுமி பேருந்தை விட்டு இறங்கினால் அவள் கண்கள் வியப்பில் விரிந்தன
“நம்ம காலனி தானா இது” என்ற கேள்வி எழுந்தது செம்மண் பரப்பு நீர்தெளித்து வண்ணக்கோலங்கள் மிளிர அழகாய் இருந்தது வீதி.
யார் வீட்டில் என்ன விசேஷம் என நினைத்துக்கொண்டே, இளம் துறவிகளையும், சன்யாசிகளையும் பார்த்து “இது நம்ம காலனி விசேஷம் அல்ல!, வேறு விழா” என டிராவல் பேக்கை தோளில் சுமந்துகொண்டு நகர்ந்தால்.
இவ்வாறாக கதையை தொடர்கிறார் ஆசிரியர் முதல் மற்றும் கடைசி கதை தொடங்கும் விதத்தை ஒப்பிட்டுப் பார்க்கவே அருமையாக இருக்கிறது.

மனித குலத்தை மேம்படுத்தும் விழா

சில மதத்தின் மக்களும் மதத்தலைவர்களும் ஒருங்கிணைந்து கலந்து கொண்ட ஒரு ஆசிரமத்தின் விழா அது. குருஜி எழுந்து கூட்டத்தைப் பார்த்து சிரம் தாழ்த்தி வணங்கி பேசத் துவங்கினார்.

இந்த விழா மனித குலத்தை மேம்படுத்தும் விழா. பலருக்கு தங்கள் பிறப்பையும் முழு சக்தியையும் உணர்த்துகின்ற விழா. நீங்கள் மனதளவில் ஒரே இடத்தில் தேங்கி நின்று விட்டீர்கள் காரணம் உங்களுக்குள் எழுச்சி இல்லாததே, சில சமயம் எழ நினைத்தபோதெல்லாம் கலவரம் கொண்டு அடக்கி விட்டார்கள். நீங்கள் தாழ்ந்தவர்கள் அல்ல! ஒதுங்கிப் போக வேண்டியவர்கள் அல்ல! என்பதை உணர்த்துவதே இந்த விழாவின் நோக்கம். முத்துலட்சுமி குருஜியின் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கவனித்தால், இவ்வாறாக கதை நகர மதிய உணவில் பெரியவர்களும் சிறியவர்களும் தலைவாழை இலை போட்டு கூட்டு பொரியல் என இனிப்பு வகைகளுடன் பரிமாறப்பட்ட உணவை உண்டனர்.

குருஜியும் தலித் மக்களுடன் சமமாக அமர்ந்தார். இளம் துறவிகளும் சன்யாசிகள் காலனி மக்களுக்கு இணையாக அமர்ந்து உணவு உண்டனர். இவ்வாறாக கதை நகர

“யாரும் சாப்பிடாதீங்க நிறுத்துங்க” என
முத்துலட்சுமியின் தலையீடு இருந்தது.

நாங்கள் சமைத்தது இல்லையே

முத்துலட்சுமி சுவாமிஜியை பார்த்து சமபந்தி என்கிறீர்கள் ஆனால் இது நாங்கள் சமைத்தது இல்லையே நீங்களே உணவு தயாரித்துக் கொண்டு வந்து எங்களுடன் உணவு அருந்துவது சரியா, பிரித்து தானே பார்க்கிறீர்கள், நாங்கள் கவுச்சி சேர்ப்பவர்கள் தான், எங்களாலும் சைவ சமையல் அற்புதமாக தயாரிக்க முடியும் என முத்துலட்சுமி குரல் கொடுக்க ! வியப்பில் அனைவரிடமும் ஒரு அமைதி.. மேலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக இருந்த “சுவாமிஜியின் பதில்” என சமபந்தி கதையில் பல சுவாரசிய நிகழ்வுகளை எழுதியிருப்பார் ஆசிரியர்.

நூலின் பெயர் – குருவைத் தேடி
நூல் ஆசிரியர் – சு. ராஜகோபால் பதிப்பகம் – பாவைமதி வெளியீடு
நூல் தேவைப்படுவோர் நீரோடையை தொடர்பு கொள்ளவும்.

– நீரோடை மகேஷ்

You may also like...

10 Responses

  1. Rajakumari says:

    Super

  2. Priya prabhu says:

    சிறந்த கதைத் தொகுப்பு.. நல்லதொரு விமர்சனம்.. அருமை.. நன்றி 💐💐

  3. Kavi devika says:

    அருமை மகேஷ்.. வாழ்த்துகள்…. மேலும் பல விமர்சனங்களையும், கவிதைகளையும் நீரோடையில் தரனும்… பரணியில் எழுத்தாளராக வரனும்

  4. Nachiyar says:

    வாழ்த்துகள்…. மிக அருமை..

  5. Lakshmi says:

    வாழ்த்துகள் கவியே… மேலும் தருக நற்கவியே

  6. M. VEL says:

    அருமை நல்ல விமர்சனம். கதை ஆசிரியர்
    தாங்கள் பாராட்டின எல்லா பாராட்டுக்கும் தகுதியானவரே

  7. தி.வள்ளி says:

    நூலின் சிறப்பை அழகாக விளக்கியது விமர்சனம்…மேலும் பல விமர்சனங்களை ஆவலாக எதிர்பார்க்கிறோம். அருமை மிக அருமை…வாழ்த்துக்கள் மகேஷ். கதாசிரியருக்கும் வாழ்த்துக்கள்.

  8. Malathi Narayan says:

    விமர்சனம் அருமையாக இருக்கிறது. கதை ஆசிரியருக்கும், விமர்சன ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்.

  9. மணிகண்டன் சுப்பிரமணியம் says:

    அண்ணனின் நூல் விமர்சனம் அருமை 👌எனக்கு புத்தகம் படிக்க வேண்டும் என ஆவல்.
    கதை ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள் 🎊
    புத்தகம் அனுப்பவும்.

  10. நிர்மலா says:

    சிறப்பான விமர்சனம். வாழ்த்துகள்.