அப்துல்லாவும் அம்மனும்

அப்துல்லா என்ற பெயரை கேட்டாலே அனைத்து வயதினருக்கும் பிடித்தமானவர் என டீ கடைக்காரர் முதல் மாடி வீட்டு மாமி வரை அனைவரும் கூறுவதுண்டு abdullaavum ammanum.

அப்துல்லா குடும்பம் மிகப்பெரியது அப்பா,அம்மா, இரு மகன்கள் மற்றும் சித்தப்பா குடும்பம் என கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.
கூட்டுக்குடும்பம் என்றாலே சில சலசலப்புகள் இருக்கத்தானே செய்யும். மதப்பற்று அதிகம் அதிலும் தீவிரம் காட்டும் சித்தப்பா குடும்பம்.

மதம் தாண்டிய கடவுள் நம்பிக்கை

ஒரு நாள் அப்துல்லாவின் தாயாருக்கு உடல் சுகவீனமாக இருக்க அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் முழுவதும் தடிப்பாக எதோ ஒரு புது வியாதி வந்ததே என அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

abdullaavum ammanum

இரத்தம் மற்றும் தடிப்புகளில் வடியும் நீரை பரிசோதனைக்காக மும்பைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கும் வேளையில் மருத்துவமனையில் தங்கியிருந்த தாயாருக்கு காலை சிற்றுண்டி வாங்க கடைக்கு சென்றார் அப்துல்லா.

அப்போது உள்நோயாளிகள் பிரிவு அறைக்கு முன் நின்றுகொண்டிருந்த அவரது தாயாரிடம் வந்த ஒரு பெண் இது இங்கே சரி செய்ய வேண்டிய வியாதியல்ல, வீட்டுக்கு சென்று நான் சொல்வதை பின்பற்றுங்கள் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

அப்துல்லா வந்ததும் நடந்ததைக் கூற அவரும் அந்த பெண்ணின் தோற்றம் பற்றி விசாரித்துவிட்டு உள்ள சென்று தேடி பார்க்க யாரும் தென்படவில்லை. தங்கியிருந்த நோயாளிகளும் உடன் இருந்தவர்கள் மட்டுமே இருந்தனர்.

ஏதோ ஒரு ஆழமான நம்பிக்கையோடு வீடு திரும்பி அப்பெண் கூறியதை மூன்றுநாட்கள் பின்பற்ற அவர் தாயாரும் குணமடைந்தார்.

மத ஒருமைப்பாடு

அப்துல்லாவிற்கு வியப்பில் தலை கால் புரியவில்லை. உடனே இருவரும் வீட்டிற்கு தெரியாமல் இருக்கன்குடி பயணித்தனர்.

அங்கே சென்று வேண்டுதலை நிறைவேற்றி இருக்கன்குடி மாரியம்மனை தரிசனம் செய்து திரும்பும் வழியிலேயே பிரசாதத்தை சாப்பிட்டுவிட்டு கிளம்பினர். கோவிலுக்கு சென்றதை (முக்கியமாக அவர் சித்தப்பாவிற்கு தெரியாமல்) காட்டிக்கொள்ளாமல் வீடு திரும்பினர்.

மாதங்கள் வேறென்றாலும் மனிதம் ஒன்றுதானே என்று வாழ்நாளில் பல நிகழ்வுகளில் நிரூபித்த அப்துல்லா (பெயர் மாற்றப்பட்டது) என்ற நபரின் நபரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் தான் இந்த கதை.

ஒரு இஸ்லாமியரின் இல்லத் திருமணத்தில் இணையாக இந்து மதத்தை சார்ந்த நண்பர்களை பார்க்க முடிந்தது. மனிதத்தை, மதத்தை மதிக்க தெரிந்த அப்துல்லாவிற்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும்.

You may also like...

1 Response

  1. Pavithra says:

    nice story….thank your post neerodai team.