காதல் ஊற்று – காதல் கவிதை

அதிகாலை சூரியனிடம் காதல் கொண்ட
அந்த மேகக்கூட்டம் மெய் மறந்து, சிதறி, உருகி
பூமித்தாய் மடியில் தடுமாறி விழும் தருணம்..
kathai ootru vannathu poochi kaathal

சாலையோர கண்காட்சியாக பூத்துக்குலுங்கிய
மலரொன்றில் தேன்பருக சென்ற, தன் துணையைத் தேடி
அமர்ந்த வண்ணத்துப்பூச்சிக்கு-
நாணம் தலைசுற்ற அங்கே ஒரு காட்சி,
அந்த மலரில் “காதல் மயக்கத்தில் ஒரு ஜோடி வண்டுகள்”
“அந்த காதலை கண்ட மயக்கத்தில் இதழ் மூடிய அந்த மலர்”

அருகே ஒரு ஜோடி ரோஜா மலர்களில் ஒன்று மற்றொன்றை
இதழ் தழுவி முத்தமிட துடிப்பதைக் கண்ட வண்ணத்துப் பூச்சி
தன் காதல் மலரையும் (துணையையும்) அதிலே கண்டது.
அம்மலர்களின் வருடலுக்கு இடையில் இவ்விரு
வண்ணத்துப் பூச்சிகளும் தன் நேசம் காட்டத்தொடங்க,
அந்த பூங்காவனமே அசையாமல் இதனை ரசிக்கத் தொடங்கியது.

இவைகள் அமர்ந்த ரோஜா மலர் இந்த காதலுக்கு தன்னை
கட்டுப்படுத்த இயலாமல் உமிழ் ஊற்றாய் தேன் சுரந்து
வழிந்தோட.

அதன் அருகே (மேலே) ஒரு மரத்தில் பழுத்து விழுவதாய் இருந்த
இலைச் சருகு கூட தன காம்பை பற்றிக்கொண்டு
இந்த வண்ணத்துப் பூச்சிக் காதலுக்கு இடையூறு செய்யாமல்
காம்புடனான கடைசீ நிமிடக் காதலை நீடித்துக் கொண்டே போக.

அது  நந்தவனமா, சோலையா, தேனூற்றா  என்ற குழப்பத்தில்
அந்த இலை  நழுவி விழுந்தால் அந்த காட்சி தவரவிடப்படுமோ
என்ற நினைவில் அந்த இடத்தில் சிதற மழையாய்
விழத்துடித்த மேகத்தை வேறிடம் நகர்த்த துடித்தது காற்று.

கண்விழித்துப் பார்த்தேன் ஜன்னல் வழிய நுழைந்து
என் முகத்தை வருடியது இளங்காலை காற்று.

நீரோடை மகேஸ்..

Kaathal Ootru

Athikaalai Suriyanidam Kaathal Konda
Antha Megakkoottam Mei Marandhu, Sithari, Uruki
Boomiththaai Madiyil Thadumaari Vizhum Tharunam….
Saalaiyora Kankaachiyaga Poothukkulungiya
Malarondil Thenparuga Sendra, Than Thunaiyaith Thedi
Amarntha Vannathuppoochikku –
Naanam Thalaisutra Ange Oru Kachi,
Antha Malaril ” Kaathal Mayakaththil Oru Jodi Vandukal”
” Antha Kaathalai Kanda Mayakkaththil Ithazh Moodiya Antha Malar”

Aruke Oru Jodi Roja Malarkalil Ondru Matrondrai
Ithazh Thazhuvi Muthamida Thudippathaik Kanda Vannathup Poochi
Than Kaathal Malaraiyum(Thunaiyaiyum) Athile Kandadhu.
Ammalarkalin Varudalukku Idaiyil Ivviru
Vannathup Poochikalum Than Nesam Kaattath Thodanga,
Antha Poongavaname Asaiyaamal Ithanai Rasikkath Thodangiyadhu.

Ivaikal Amarntha Roja Malar Intha Kaathalukku Thannai
Kattupaduththa Iyalaamal Umizh Ootraai Then Surandhu
Vazhinthoda.

Athan Arughe (Mele) Oru Maraththil Pazhuththu Vizhuvathaai Iruntha
Ilaich Sarugu Kooda Than Kaambai Patrikkondu
Intha Vannaththup Pochik Kaathalukku Idaiyuru Seiyaamal
Kaambudanaana Kadaisi Nimidak Kaathalai Needithuk Konde Poga.

Adhu Nanthavanama, Solaiyaa, Thenutraa Endra Kuzhappaththil
Antha Ilai Nazhuvi Vizhunthaal Antha Kaachi Thavaravidappadumo
Endra Ninaivil Antha Idaththil Sithara Mazhaiyaai
Vizhaththudiththa Megaththai Veridam Nagartha Thudiththadhu Kaattru.

Kanvizhiththup Paarthen Jannal Vazhiya Nuzhaindhu
En Mugaththai Varudiyadhu Ilankaalai Kaattru.

– Neerodai Mahes

You may also like...