நீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்

ஏழு ஆண்டுகளை நிறைவு செய்யும் உங்கள் நீரோடை மகேஷ் பிரியா திருமண நாள். மனையாளுக்காக எழுதிய வரிகள் இதோ ! – mahes priya wedding

சிரம் நீட்டி முடிச்சுகள் வாங்கி,
கரம் பிடித்து அக்னி சுற்றி,
வரம் என வந்த வசந்தமே!

mahes priya wedding

நிந்தன் கைப்பற்றிய கணம்
எந்தன் கற்பனை நிழல் நிஜமானது!
நிலவுக்கு தங்கச்சி நீதானோ,
நிழலுக்கு என் கட்சி நீயோ.

உந்துதலில் இல்லாள்,
துணை நிற்பதில் அகமுடையாள்,
விருந்தோம்பலில் ஆயந்தி,
விரும்புதலில் வதுகை,
போர்க்குணத்தில் நாச்சி,
மனைவியாக கோமாகள் – mahes priya wedding.

கற்பனை கதாபாத்திரத்திற்கு
நிஜத்தில் குரல் தந்தாய்,
கரைந்த காணலுக்கு
தினம் பூச்செண்டு தந்தாய்,
நெகிளியாய் காற்றில் திரிந்த
பட்டத்திற்கு அங்கீகாரம்
தந்தாய்,
உளரல்களுக்கு உருவம் தந்தாய்,
உருவத்திற்கு கருவறை தந்தாய்,
எழுத்தில் பிரபஞ்சம் வெல்ல வல்லமை தந்தாய்,
அனைத்தும் தந்தவள்
வாழ்வெல்லாம் உன்பிம்பம்
பதிந்த பயணத்தை தந்தாய்.

கைப்பற்றி இல்லாள் இல்லம் புகுந்த நாளிது,
வாழ்க வளமுடன் ! வாழ்வோம் நலமுடனும்! வழமுடனும்!..
செல்லதுணைவிக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..

– நீரோடை மகேஷ்

You may also like...

13 Responses

 1. malarmohan says:

  திருமணநாள்வாழ்த்துக்கள் தோழர்

 2. R. Brinda says:

  மிக அற்புதம்!! திருமணநாள் வாழ்த்துக்கள்!!💐💐💐

 3. SRINIVASAN says:

  மிகவும் அருமை இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் இன்பம் நிறையட்டும்

 4. Kavi devika says:

  இனிய மணநாள் வாழ்த்துகள்… இன்றுபோல் என்றும் மாறா அன்புடன்…
  💐💐💐

 5. Rajakumari says:

  பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்க எல்லா வளமும் பெற்று

 6. அன்புதமிழ் says:

  உங்களின் துணைவியின் மீது கொண்ட அன்பு அதன் வரிகளில் தெரிகிறது. வாழ்த்துகளுடன்…
  வாழ்க வளமுடனும்.. நலமுடனும்.!!!

 7. பாரிஸா அன்சாரி says:

  வாழ்த்து.

  பரிசே, தன்னைப்
  பரிசாய்த்தந்ததற்கா, இப்
  பரிசு? ஆம்! இப்
  “பா”ப்பரசு! உளம் நிறைந்த,
  மா பரிசு!

  மனையாள்,
  குணமாட்சி கண்டு
  மனம் நிறைந்தவருக்கு , வள்ளுவன் மனைமாட்சி கூறுவதிங்கே:

  இல்லதுஎன் இல்லவள் மாண்பானால் உள்ளது என்
  இல்லவள் மாணாக்கடை.

  மனமாட்சி கொண்டு, தமிழ்
  மணமாட்சி கண்டு,
  இறைமாட்சியுடன், புவியில் இணைந்து வாழ,

  இறை நோக்கி, என்
  கரம் ஏந்துகிறேன்!

 8. நிர்மலா says:

  எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். இறைவனடீ வேண்டுகிறேன்.

  கவிதை பரிசு அற்புதம்.

 9. தி.வள்ளி says:

  ‘பிரிய’மான மனையாளுடன் எல்லா நலங்களும், எல்லா வளங்களுடன் பெற்று நீடூழி வாழ நீரோடையோடு பயணிக்கும் அன்பர்கள்அனைவர் சார்பிலும் வாழ்த்துகிறேன்.

 10. Ananthi says:

  Happy wedding anniversary, Sir..both of you!!
  Stay blessed always 😊

 11. வாழ்த்துக்கள் பகிர்ந்த அனைத்து நீரோடை சொந்தங்களுக்கும் மகேஷ் பிரியா சார்பில் நன்றியும் அன்பும்..

 12. கு.ஏஞ்சலின் கமலா says:

  வாழ்த்துக்கள் . பல்லாண்டு வாழ உளமாற வாழ்த்துகிறே்ன்

 13. SUBRAMANIYAM says:

  இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா..