கவிதை போட்டி 2023_05

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2023-05

kavithai potti

வெற்றி பெரும் கவிஞர்களின் பெயர்கள் அடுத்த மாத மின்னிதழில் வெளியிடப்படும்.

கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும்.

கவிதை போட்டி அறிவிப்பு

 • தொழிலாளர் தினம்
 • கோடை வெயில்
 • திருக்கல்யாணம்
 • மே தினம்
 • அக்னி நட்சத்திரம்
 • சித்ரா பௌர்ணமி
 • தாங்கள் விரும்பிய தலைப்பு

மேற்கண்ட தலைப்புகளில் 15 வரிகளுக்குள் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வாட்சாப் அல்லது மின்னஞ்சலில் நேரடியாக அனுப்பப்படும் கவிதைகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

வெற்றி பெறும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2023-03. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் (அடுத்த மாத மாத மின்னிதழில்) வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


குறிப்பு:

1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.

You may also like...

4 Responses

 1. M.Manoj Kumar says:

  ஏற்றப்பட்டது விளக்குகள்; ஏற்றப்படவில்லை உடைந்த ஆசைகள்; இணையட்டும் பிரிந்த இரு மனங்கள்; பிரிவால் வலியுடன் வாடியது இதயங்கள்

  இருள் நீங்கி வெளிச்சம் ஒளிரட்டும்; நிறைவேறாத ஆசைகள் நிறைவேறட்டும்; காதல், அன்பு ஆழமாக வளரட்டும்; சந்தித்து, சேர்ந்து இரு மனங்களும் மலரட்டும்

  காதல் உலகம் வானில் பிரகாசிக்கட்டும்; ஒளி-அலையுடன் திருவிழா கொண்டாடட்டும்; உடைந்த ஆசைகள் ஏற்றப்படட்டும்; கண்ணீரில்லா விடுதலை அடையட்டும்

  உடையாத தூய ஆசைகளாய் மாரட்டும்; மனங்களின் விரகம், தாபம் அகலட்டும்; மனதில் உள்ள ஏக்கம் தீரட்டும்; வாடிய இதயங்களின் கண்ணீர் நீங்கட்டும்

  ஏற்றப்பட்டது விளக்குகள்; ஏற்றப்பட்டது உடைந்த ஆசைகள்;

  கவிதையின் பெயர்:- காதல் ஏக்கம்
  கவிஞர்:- M.மனோஜ் குமார்

 2. TAMILSELVI A says:

  சித்ரா பௌர்ணமி

  சிறப்பு மிக்க சித்திரையில்
  சித்திர குப்தரின் அகவையில்
  அவர் தம் மதி போன்ற முழுமதியில்
  அவரை துதித்து, அவர் புகழ் பாடி,
  அவர் குறிக்கும் கணக்கின்
  அளவுகளை மாற்ற சலுகை பெற்ற நாள்,
  உயிரெடுப்பவன் பணிச்சுமை பகிர
  உயிரெழுத்தானவன் பரிசளித்த
  உத்தமனை வணங்க
  உகந்த பொன்நாள் இந்த பௌர்ணமி

  மே தினம்

  நாள் ஒன்றை நான்காய் பிரித்து
  நான்கில் மூன்று வேலை நேரமென்றிருக்க,
  நாளங்கள் முறிய உடல் சோர
  நாளும் உழைப்போர் நலனுக்காக,
  நாடுகள் எங்கும் போராட்டம் செய்த
  நல்லோர் பலரின் தியாகத்தினால்,
  நாற்பிரிவு முப்பிரிவாக்கி
  அதில் ஒன்றைப் பணி நேரமாக்கி
  அன்று வகுத்த சட்டத்தை
  அனைத்து நாடுகளும்
  ஆதரித்துக் கொண்டாடும் நாலே
  இந்த மே தினம்

 3. N.Loganayagi says:

  ‌‌ சித்ரா பௌர்ணமி
  ———————————–

  வேரில்லா வான
  விருட்சமதிலே….

  கிளையில்லா மேக
  இலைகளினூடே….

  காம்பில்லா நட்சத்திர
  மலர்கள் சூழ….

  மத்தியிலோர் கறைபடிந்த
  கனியொன்று…

  காண்போரின் கண்களை
  அழகாய் பறித்துத் தின்றது…

  “பௌர்ணமி நிலவு”

  -loganayagi mohan kumar

 4. R.Vengadesh Kumar says:

  மே தினம்
  – இரா.வெங்கடெஸ் குமார்
  அண்டம் முழுக்க ஆயிரம் கண்டோமே
  ஆரம்பம் முதல் பாதி பசியை தீர்த்தோமே
  இயலாமை என்னும் போக்கை மறந்தோமே
  ஈகை குணத்திலும் பங்கு பெற்றோமே
  உணவு முதல் உயரமான கட்டிடம் வரையுமே
  ஊட்டி வளர்த்தது என் வேர்வை கொட்டிய இனமே
  எல்லா உபயம் உலகிற்கு செய்துமே
  ஏரெடுத்தும் பார்க்காத பொது முகமே
  ஐவிரல் நம்பிக்கையில் வாழ்க்கை போகுமே
  ஒருபோதும் விலகாது உழைக்கும் வர்ணமே
  ஓடி கொண்டே இந்த பூமி செழிக்க வைப்போமே