கவிதை போட்டி 2023_06

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2023-05

kavithai potti

வெற்றி பெரும் கவிஞர்களின் பெயர்கள் அடுத்த மாத மின்னிதழில் வெளியிடப்படும்.

கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும்.

கவிதை போட்டி அறிவிப்பு

  • வைகாசி விசாகம்
  • இடுக்கண் வருங்கால் நடுக
  • பக்ரீத் பண்டிகை
  • கடைசி இரயில் பெட்டி
  • ஆனி மாதம்
  • விரும்பிய தலைப்பு

மேற்கண்ட தலைப்புகளில் 15 வரிகளுக்குள் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வாட்சாப் அல்லது மின்னஞ்சலில் நேரடியாக அனுப்பப்படும் கவிதைகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

வெற்றி பெறும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2023-06. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் (அடுத்த மாத மாத மின்னிதழில்) வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


குறிப்பு:

1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.

You may also like...

8 Responses

  1. kavinaya says:

    ஆனி மாதம்

    கோடையின் தணலிலும்
    ஏனோ, மனம் மகிழ்ச்சியல் ஆழ்ந்தது!
    காரணம் யாதெனில் அறிவீரோ?
    ஆனித் திங்கள் பிறந்துவிட்டதை எண்ணியே!!!

    மலர்களும் நறுமணம் வீசி வரவேற்கின்றன!
    மரங்களும் தலையசைத்து அன்புடன் அழைக்கின்றன!
    அழகு மயில் ஆட, கானப் பறவைகள் கவிப்பாட
    மண்ணில் ஒரு கலைவிருந்தே நிகழ்கின்றன!

    சாரல் மழையே! தென்றல் காற்றே!
    எங்கள் மனம் குளிர வாராய்!!!
    வெப்பத்தின் செந்தணலை மாற்றி
    இதமான இனிய பொழுதை தாராய்!!!

  2. அஷ்ரஃப் அலி says:

    மௌனம் அர்த்தப்படும்

    என்னைச் சுற்றி
    ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும்
    ஜீவ சப்தங்களைத் தாண்டி
    மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது
    ஒரு மௌனம் !

    சப்தங்கள் மட்டுமே கேட்கப்படுவதாய்
    எப்போதும் பாவிக்கும் என்னை
    ஏதோ ஒரு புள்ளியில்
    குவியச் செய்கிறது
    ஊடுருவும் இந்த மௌனம் !

    சில
    ஏகாந்த வேளைகளில்
    ஏதேதோ இழந்துவிட்டதாய்
    எண்ணியிருக்கையில்
    எங்கிருந்தோ ஓடிவந்து
    துணை நிற்கும்
    இந்த மௌனம் !

    நிச்சயமாய் தெரிகிறது..
    இதமாய் இம்சிக்கப்படுகிறேன்
    இந்த மௌனத்தினால்
    இருந்தும்
    புது விசையொன்று
    இசையச்செய்கிறது என்னை
    அந்த மௌனத்தின்
    அலைவரிசைக்கு !

    தேடி ஓடிய வார்த்தைகளில்
    தொலைக்கப்பட்ட என்னை
    மீட்டெடுக்க எத்தனிக்கிறது
    மீண்டும் இந்த மௌனம்!

  3. aravindan says:

    வைகாசி விசாகம்

    வைகாசி விசாகம் முருகனுக்கு சிறப்பு
    வைகாசி விசாகம் தமிழரில் சிரிப்பு
    வைகாசி விசாகம் வேண்டும் விடுமுறை
    வைகாசி விசாகம்  சிறப்புக்கா விடுமுறை

  4. சே.சண்முகவேல் says:

    இசைவுடன்
    வாழ்ந்தவர்கள் – நில
    அசைவால் வீழ்ந்தார்கள்!
    அதிர்ந்தது பூமி!
    உதிர்ந்தது உறவுகள்
    சிதைந்தது செல்வம்
    கண்ணிமைக்கும்
    நேரத்தில்
    கானல் நீரானது
    வாழ்க்கை!!
    இயற்கை இசையும்
    காலம் வாழ்ந்திடு!
    மாண்டிட விளைவதை
    தவிர்த்திடு!!
    வாழ்வதையும் வீழ்வதையும் காலம்
    முடிவு செய்யும்!
    வாழ்வதற்கு – நீ
    காலத்திற்கும்
    முயற்சி செய்!!!

  5. சே.சண்முகவேல் says:

    மேசையை உடைத்து
    மீசையை முறுக்கிய
    பள்ளி மாணவர்க்கும்
    ஓசையின்றி நழுவிய
    மாணவியர்க்கும்
    அருமையான தண்டணை!!!
    கட்டாய விடுப்பு – இனி
    கட்டாய விடுப்பிற்காகவே
    கட்டாயம் மேசைகள்
    உடைக்கப்படும்!!
    இவர்களைத்
    திருத்தவும் வழியில்லை!
    திருந்தவும் வாய்ப்பில்லை!!

  6. சிறுவாணி சிட்டு says:

    வண்ண வண்ண மலர்களில்
    உன் முகம் காண தினமும்
    வண்ணத்துப்பூச்சியாய்
    பறந்துகொண்டிருக்கிறேன்…!

    தென்றல் காற்றாய் என்னை
    தேடி வருவாய் என
    முற்றத்தில் காத்திருக்கிறேன்..!

    அலைகளின் ஆர்ப்பரிப்பில்
    உன் அரவணைப்பை ஆசையுடன்
    எதிர்பார்த்து கடல் மணலில்
    காத்திருக்கிறேன்…!

    தாரகைகளின் மினுமினுப்பில்
    உன் காந்த கண்களை காண
    தவியாய் தவித்திருக்கிறேன்…!

    அதோ…

    தொலைதூர வானவில்லாக நீ..
    உன்னை தொட்டு விட
    முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறேன்…!

  7. சிறுவாணி சிட்டு says:

    பார்த்துக்கொண்டு இருப்பதில்
    இல்லை ஆனந்தம்…
    பிரிந்து பின் பார்ப்பதில்
    இருக்கிறது ஆனந்தம்…!

    பத்திரமாக இருப்பதில்
    இல்லை ஆனந்தம்…
    பாதித்து பின் மீள்வதில்
    உள்ளது ஆனந்தம்…!

    கேட்டவுடன் கிடைப்பதில்
    இல்லை ஆனந்தம்…
    கேட்டது மறந்து போன பின்
    கிடைப்பதில்
    இருக்கிறது ஆனந்தம்…!

    தொடர்ந்த வெற்றியில்
    இல்லை ஆனந்தம்…
    தோல்விக்கு பின் கிடைக்கும்
    வெற்றியில் தான் ஆனந்தம்…!

    தொடர்ந்த மழையில்
    இல்லை ஆனந்தம்…
    வறட்சிக்கு பின் கிடைக்கும்
    மழையில் தான் ஆனந்தம்…!

    நிறைகளை பார்ப்பதில்
    இல்லை ஆனந்தம்…
    குறைகளை பாராமல்
    செல்வதே ஆனந்தம்…!

  8. ம மு சதிஷ் குமார் says:

    சில்லரை சிரிப்பது சிதைந்து
    இல்லாள் மனம் கலங்கையில்
    மின்சாரம் இல்லாத எந்திரமாய்
    சம்சாரம் இயங்க மறுக்கையில்
    காற்றில் தள்ளாடும் விழுதாய்
    பழுதாகி யென்மனம் வேகையில்
    சினமது கரைந்து குறைந்ததும்
    பொன்மனம் ஆனந்தக் கூத்தாடுதே