பீட்ரூட் ரவா லட்டு

இது பண்டிகை காலம். குழந்தைகள் புதிது புதிதாக வித்தியாசமாக உண்ண விரும்புவர் . இதோ அவர்களுக்கான ஒரு இனிப்பு பலகாரம் தான் இது… – beetroot rava laddu recipe.

beetroot rava laddu recipe

நாம் ரவா லட்டு உண்டிருக்கிறோம். அதிலும் பீட்ரூட் சேர்த்தால் எப்படி இருக்கும் வாங்க முயற்சி செய்து பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  1. பீட்ரூட் – 1 பெரியது
  2. ரவை – 2 கப். (200 gm)
  3. நாட்டுச் சர்க்கரை- 1 கப்
  4. ஏலக்காய் – 3
  5. முந்திரி. – 10
  6. உலர் திராட்சை – 10.
  7. நெய் – கால் கப்
  8. பால் – கால் கப்.

செய்முறை

முதலில் ரவையை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும். (கருகாமல்). அடுத்து பீட்ரூட்டை தோல் நீக்கி துருவி கொள்ளவும். வாணலியில் நெய் சிறிதளவு விட்டு முந்திரி உலர் திராட்சை ஆகியவற்றை வதக்கி அதனுடன் பீட்ரூட்டையும் சேர்த்து வதக்கி வைத்துக் கொள்ளவும் . பிறகு வறுத்த ரவையையும் நாட்டுச் சர்க்கரையும் சேர்த்துக் கிளறவும் – beetroot rava laddu recipe.

இக்கலவையுடன் ஏலக்காயை பொடி செய்து கலக்கவும். சூடான பாலை சிறிது சிறிதாக ஊற்றி உருண்டைகளாக பிடிக்கவும். சுவையான வண்ணமயமான பீட்ரூட் ரவா லட்டு தயார்.

குறிப்பு: தேவையென்றால் தேங்காய் துருவலை வறுத்து உருண்டைகளை உருட்டி எடுக்கவும் – நன்றி, ஏஞ்சலின் கமலா, மதுரை.

You may also like...

4 Responses

  1. Rajakumari says:

    வித்தியாசமான ஸ்வீட்

  2. Maha says:

    Super👍

  3. தி.வள்ளி says:

    அருமை இனிமை புதுமை …பாராட்டுகள் சகோதரி

  4. Kasthuri says:

    பயனுள்ள புதிய ரெசிபி, கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கிறோம்