வெற்றிலை பாக்கு நல்ல பழக்கமா ?

சில பிரிவு மக்களுக்கு வழக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு  உணவு முடிந்தபின் எடுத்துக்கொள்கிறார்கள். சுமங்கலிப்பெண்கள் வெற்றிலை பாக்கு எடுத்துக்கொள்வது மரபு என்று கூறப்படுகிறது. வெற்றிலையை அவர்கள் வணங்கும் ஆண்  தெய்வமாகவும், பாக்கை பெண் தெய்வமாகவும் பாவித்து எடுத்துக்கொள்வதும். தனது கணவனுடன் இல்லறத்தை சிறப்பாக நடத்தும் நம்பிக்கையாகவும் கருதப்படுகிறது. நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் இந்த பழக்கம் தற்பொழுது மறைந்து வருவதாக சிலர் வருத்தம் தெரிவித்தனர் – vetrilai pakku milagu.

vetrilai pakku milagu

நோய்  எதிர்ப்பு சக்தியை கூட்டும் வழிமுறைகளை ஆயுர்வேதத்தில் தேடியபோது, உடலிலுள்ள வாதம், பித்தம் மற்றும் கபம் தான் தீர்மானிக்கிறது என்று உள்ளது. வெற்றிலையில் உள்ள உறைப்பு கபத்தை கட்டுபடுத்தி நீக்கும். பாக்கில் உள்ள துவர்ப்பு பித்தத்தை கட்டுபடுத்தும். சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை நீக்கும் வல்லமை உள்ளது.

ஜீரண சக்தி  

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சரியான அளவில் சேர்த்து எடுத்துக்கொண்டால் ஜீரண சக்தி நன்றாக இருக்கும். இதன் காரணமாக நமது அனைத்து  விழாக்களிலும் வெற்றிலை பாக்கு இடம் பெற்றுள்ளது. சில சமயம் சேர்த்துக்கொள்ளப்படும் எலாம் கிராம்பு போன்றவை வாயில் உள்ள கிருமிகளை அழிக்கும் – vetrilai pakku milagu.

தாம்பூலம் என்ற பெயரில் நமது பாரம்பரியத்தில் அனைத்து  விழாக்களிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேலே பெரும்பாலானோருக்கு வரும் எலும்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு தாம்பூலம் ஒரு தீர்வு.

தாம்பூலம் எடுத்துக்கொள்ளும் முறை

காலையில் சிற்றுண்டி முடிந்ததும் எடுத்துக்கொள்ளும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும், காரணம் மதியம் வரும் வெப்பத்தினால் பித்தம் அதிகமாகாமல் பாக்கு தடுக்கும். மத்திய உணவிற்கு பின் எடுத்துக்கொள்ளும் தாம்பூலத்தில் சுண்ணாம்பு சற்று அதிகமாக இருக்க வேண்டும், காரணம் அது உணவில் உள்ள வாயுவை (வாதம்)  கட்டுபடுத்தும். இரவு உணவிற்கு பின்னர் வெற்றிலை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும், காரணம் கபம் நீங்கும் என்பது பாட்டி வாக்கு.

கல்வி பாதிக்கப்படுமா ?  

வெற்றிலை பாக்கு எடுத்துக்கொள்வதால் கல்வி, காலை பாதிக்கப்படும் என்று சிலர் பயப்படுவது உண்டு. குழந்தைகளுக்கு நாக்கு மறந்துபோகும் என்பதால் பெரியவர்கள் அவ்வாறு கூறி தடுப்பதுண்டு. கல்வி மற்றும் கலையை பாதிக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை. கற்கும் போதும், ஆலய வழிபாட்டின் போதும் தவிர்ப்பது உத்தமம் – vetrilai pakku milagu.

வலையொளி (YouTube) காணொளி

இந்த செய்முறை விளக்கத்தை காணொளியில் (YouTube Video) கண்டு பயன்பெற – https://youtu.be/QWpySgZnyIw

You may also like...

3 Responses

  1. Pavithra says:

    Thanks ithula ivlo visayam irukkaa..

  2. Kasthuri says:

    பயனுள்ள தகவல் நன்றி

  3. Boomadevi says:

    தாம்பூலத்தின் சிறப்பைக் கூறியது அருமை.