ஆரோக்கிய நீரோடை (பதிவு 5)

விலைவாசி எங்கேயோ போய்க் கொண்டிருக்க… நாமும், நாடும் உணவு பொருட்களை வீணாக்கும் நிலையிலில்லை. ஒரு விளம்பரத்தில் ஜோதிகா சொல்லுவாங்களே “எவ்வளவு வேணா சாப்பிடுங்க.. ஆனா புட்ட (food) வேஸ்ட் பண்ணாதீங்க” ன்னு சமைச்ச உணவு மீதமானால் ,அதை வீணாக்காமல் வேறு ஒரு புது டிஷ் ஆக மாற்றும் சில குறிப்புகளை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன் – ஆரோக்கிய நீரோடை 5

arogya neerodai wellness

பழைய மொந்தையில் புதிய கள்

விலைவாசி எங்கேயோ போய்க் கொண்டிருக்க… நாமும், நாடும் உணவு பொருட்களை வீணாக்கும் நிலையிலில்லை. ஒரு விளம்பரத்தில் ஜோதிகா சொல்லுவாங்களே “எவ்வளவு வேணா சாப்பிடுங்க.. ஆனா புட்ட (food) வேஸ்ட் பண்ணாதீங்க”ன்னு. சமைச்ச உணவு மீதமானால் ,அதை வீணாக்காமல் வேறு ஒரு புது டிஷ் ஆக மாற்றும் சில குறிப்புகளை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன் …

என் வீட்டிற்கு அருகே புதிதாக குடித்தனம் வந்த தம்பதி ..இந்த புதுப்பெண் தினமும் கவரில் சிலவற்றை ஊற்றி வெளியே கொண்டுபோய் கொட்டுவதைப் பார்த்தேன்…காரணம் கேட்டபோது அளவு தெரியாமல் செய்து வீணாவதைச் சொன்னார். நான் அவருக்கு கொடுத்த சில குறிப்புகள்.. அவர் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று சொன்னதன் விளைவே இதை எல்லோருடனும் பகிர ஆசைப்படுகிறேன்…

சுருங்கச் சொன்னால் “பழைய மொந்தையில் புதிய கள் …”அனுபவசாலிகளுக்கு இது புதிதில்லை எனினும் இளம் பெண்களுக்கு இது பயன்படும் .

தேங்காய் சட்னி

தேங்காய் சட்னி அதிகமாய் செய்துவிட்டோம் என்று தோன்றினாலே பாதியை எடுத்து உடனே ஃப்ரீசரில் வைத்து விடுங்கள்… ஃப்ரீஸரில் இருந்தால் அது மறுநாள் குழம்பிற்கு ,பொரியலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் …
பச்சை கொத்தமல்லியை சிறிது எடுத்து அத்துடன் ஒரு சிட்டிகை உப்பு ஒரு கொட்டை புளி சேர்த்து மிக்ஸியில் ஓடவிட்டு…அத்துடன் மீதமான தேங்காய் சட்னியை சேர்த்து விடுங்கள் இரவுக்கு புதிதாக மல்லி சட்னி ரெடி .இதேபோல புதினாவையும் பயன்படுத்தலாம் – ஆரோக்கிய நீரோடை 5.

ரசம்

ரசம் மீந்துவிட்டால் …அதை தெளிவாக வடிகட்டிக் கொண்டு ..அதில் மூழ்கும் அளவுக்கு அவலை எடுத்துக் கொள்ளுங்கள்.அவலை லேசாக அலசிய பின் ரசத்தில் நன்றாக ஊற விடுங்கள். அத்துடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ளவும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்து ஊறிய அவலை மிதமான தீயில் நன்றாக பச்சை வாசனை போகும் வரை அடுப்பில் வைத்து கிண்டி பின் மல்லித்தழை போட்டு இறக்கவும். மிளகு வாசனையுடன் சூப்பரான மசாலா அவல் ரெடி… அவலுக்கு பதில் சற்று உலர்ந்த ரொட்டி இருந்தால் அதையும் இதே போல செய்யலாம்.

சாம்பார்

விருந்தினர் வரும்போது சற்று அதிகமாக சாம்பாரும், சாதமும் வைத்து அவை மீந்துவிட்டால் …அடுத்த வேளைக்கு மீந்த சாதத்தை குக்கரில் வைத்து கால் டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு விசில் வைத்துக்கொள்ளவும் ..பின் அதை நன்றாகக் குழைத்து அத்துடன் சிறிது உப்பு சேர்த்து … மிஞ்சிய சாம்பாரை அத்துடன் ஊற்றி நன்றாக கிளறவும்..வெந்த பருப்பு கைவசம் இருந்தால் அதிலும் ஒரு நாலு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.

கொளகொளவென்ற பருவத்தில் இருக்கும்போது அடுப்பை குறைந்த தீயில் வைத்து அடி பிடிக்காமல் கிண்டவும். இறுகி வந்ததும் வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்து ..(சாதமும் குழம்பும் நன்றாக சேர்த்து வரவேண்டும்)கொட்டி அத்துடன் மல்லித்தழையை போட்டு இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து இறக்கவும் கமகமக்கும் சாம்பார் சாதம் ரெடி .

பொரியல்

உருளைக்கிழங்கு பொரியல்… மீந்தால் மசால் தோசை ஆக்கிவிடலாம் .. அல்லது உருண்டையாக பிடித்து கரைத்த பஜ்ஜி மிக்ஸில் முக்கி எடுத்துப் போட உருளைக்கிழங்கு போண்டா ரெடி. . கீரை பொரியல் மீந்தால்…தோசை மாவில் பொரியலை போட்டு சிறிது நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி எல்லாவற்றையும் போட்டு சிறிது உப்பு, மிளகாய் வற்றல் பொடியும் சேர்த்து கிளறிக் கொண்டு கீரை தோசையாக ஊற்றிக் கொடுக்கலாம் – ஆரோக்கிய நீரோடை 5

கோஸ், கேரட், பீட்ரூட், போன்ற பொரியல்கள் மீந்தால்,

தோசை வார்க்கும்போது சற்று கனமாக ஊற்றி மேலே இந்த பொரியலை தூவி இத்துடன் கொஞ்சம் நறுக்கிய வெங்காயம் மல்லித்தழை தூவி அரை ஸ்பூன் மிளகாய் பொடியை மேலே தூவி விட்டால் …அருமையான வெஜிடபிள் ஊத்தப்பம் ரெடி..

பருப்பு வடை, குட்டி பக்கோடா

மசால் வடை, பருப்பு வடை ,பக்கோடா போன்றவை மீந்தால் … இஞ்சி பூண்டு பேஸ்ட், பட்டை, கிராம்பு ,ஏலக்காய், போன்றவற்றை சேர்த்து தாளிக்கவும் நறுக்கிய வெங்காயத்தையும், தக்காளியையும் வதக்கவும் . ( சிறிது தேங்காய், சோம்பு அரைத்து வைத்துக் கொள்ளவும்) .

வெங்காயம் ,தக்காளி வதங்கியவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் வடை, பக்கோடாவை சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்து வைத்துக்கொண்டு அதில் போட்டு மூடி விடவும்… நன்றாக கொதித்து சேர்ந்து வந்ததும், அரைத்து வைத்த தேங்காயை போட்டு ஒரு கொதியில் இறக்கவும்.மேலே மல்லித்தழை தூவினால் அருமையான வடகறி ரெடி …

சமோசா

மசாலா போட்ட எந்த பொரியல் மிஞ்சினாலும் ..லேசாக மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி விட்டு சிறிது உப்பு,மல்லித்தழை சேர்த்து வைத்துக்கொண்டு ..சாதாரண அப்பளத்தை நல்ல தண்ணீரில் ஒரு அரை நிமிடம் ஊற விட்டு லேசாக மெதுவானதும் அந்த பொரியலை அதற்குள் வைத்து சமோசா போல வடிவத்தில் மூடி ஓரங்களை நன்றாக அழுத்தி மூடிய பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

– தி.வள்ளி, திருநெல்வேலி

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *